Search This Blog

Pages

Wednesday, September 7, 2011

ஸஹிரியன் - 2009 கிரிக்கெட் போட்டி; சிவப்பு அணி சம்பியன்


நோன்புப் பெருநாளை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி "ஸஹிரியன் 2009" மாண வர்கள் ஒழுங்கு செய்திருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஸஹிரியன் சிவப்பு அணியினர் சம்பியன்களாக தெரிவு செய் யப்பட்டனர்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல் லூரி மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி கிரிக்கெட் சுற்றுப்போட்டி யில் ஸஹிரியன் மஞ்சள் அணி, பச்சை அணி சிவப்பு அணி ஆகியன கலந்து கொண்டன.
இறுதிப் போட்டியில் பச்சை அணியும் சிவப்பு அணியும் போட்டியில் ஈடுபட்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸஹிரியன் சிவப்பு அணியினர் 8 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸஹிரியன் பச்சை அணியினர் 7.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 54 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். ஸஹிரியன் சிவப்பு அணியினர் 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்று ஸஹிரியன் 2009 வெற்றிக் கிண்ணத் தினை தனதாக் கிக்கொண்டனர்.
துடுப் பெடுத்தாட் டத்தில் சிவப்பு அணி சார்பில் றியாசத் 25 ஓட்டங்களை யும் பந்து வீச்சில் பச்சை அணி சார்பில் சினாஸ் 2 ஓவர்கள் பந்து வீசி 14 ஓட்டங்களை கொடுத்து 4 விகெட்களை கைப் பற்றினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்லூரி அதிபர் எம்.எம். இஸ்மாயில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசில்களை வழங்கி கெளரவித்தார்.