Search This Blog

Pages

Thursday, December 2, 2010

அரவான் முடியும் வரை புதிய படங்கள் இல்லை: பசுபதி முடிவு


அரவான் முடியும் வரை எந்த புதிய படங்களில் நடிப்பதில்லை என்று பசுபதி திட்டவட்டமாக கூறியுள்ளார்
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்த ஒரு புதிய படங்களிளும் ஒத்து கொள்ளவில்லை.
தற்போது வசந்த பாலன் இயக்கும் “அரவான்" படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
அதற்கு காரணம் அவரது உடலிலும் தேற்றத்திலும் செய்திருக்கும் மாற்றங்கள் ஆகும்.
ஆதனால் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.
நல்ல கேரக்டர்கள் வரும் போது அதற்காக கடுமையாக உழைப்பதும் சில வாய்ப்புகளை இழப்பதும் தவிர்க்க முடியாது அந்த வகையில் பல வாய்புகளை தவிர்திருக்கிறேன் என்கிறார். மார்ச் மாதத்துடன் அரவான் படம் முடிகிறது. அதற்கு பிறகு மூன்று படங்களில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் நடிகர்களை தரக்குறைவாக பேசவில்லை: ஆர்யா விளக்கம்


தமிழ் நடிகர்கள் தரக்குறைவாக பேசவில்லை என்று நடிகர் ஆர்யா விளக்கம் அளித்துள்ளார்.
உள்ளம் கேட்குதே படத்தில் அறிமுகமானவர் ஆர்யா. அதன் பின்னர் பல படங்களில் நடித்து உச்சத்துக்கு சென்றுவிட்டார். சர்வம், மதராசபட்டணம், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது சிக்கு புக்கு, பாலா இயக்கும் அவன் இவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

துபாய் பட விழாவில் ஆர்யா பங்கேற்று பேசும்போது, தமிழ் நடிகர்களை இழிவுபடுத்தியதாக செய்திகள் வெளியாயின.

தமிழ் படங்களில் நடிக்க திறமை தேவை இல்லை. நடிக்கவும் தெரிய வேண்டாம். ஆனால் மலையாள படங்களில் நடிப்பதற்கு நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். மலையாளத்தில் தான் தரமான படங்கள் வருகின்றன என்றெல்லாம் அவர் பேசியதாக கூறப்பட்டது.

இதற்கு பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் கண்டனம் தெரிவித்தார். தமிழ், நடிகர்களை இழிவாக பேசிய ஆர்யாவை விரட்டியடிப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த விவகாரத்தில் திடீரென நடிகர் சங்கம் தலையிட்டது. ஆர்யாவை விமர்சித்த வி.சி. குகநாதனை சரத்குமார், ராதாரவி ஆகியோர் கண்டித்தனர். இதையடுத்து பெப்சிக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் மூண்டது. பெப்சி நிர்வாகிகள் ராதாரவியை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். இந்து மக்கள் கட்சியினரும் ஆர்யா உருவப் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க திரையுலகினரின் கூட்டுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையில் நடிகர் சங்கத்துக்கு ஆர்யா விளக்க கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தமிழ் நடிகர்களை இழிவாக பேசவில்லை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

டிசம்பரில் திரைக்கு வரும் மன்மதன் அம்பு மற்றும் காவலன்


கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு திரைப்படம் வரும் டிசம்பர் 17-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
தமிழ் சினிமாவுக்கு 2010ன் கடைசி மாதம் இது என்பதால், ஏற்கெனவே தயாராகி சென்சார் செய்யப்பட்டு பெட்டியில் தூங்கும் பல படங்கள் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாக வேண்டும். இப்போதைக்கு 10 படங்களின் வெளியீட்டுத் தேதி உறுதியாகியுள்ளது.
கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு, சசிகுமாரின் ஈஸன் மற்றும் விஜய்யின் காவலன் உள்ளிட்ட படங்கள் இந்த டிசம்பர் மாதமே வெளியாகவிருக்கின்றன.
மன்மதன் அம்பு, ஈசன் ஆகிய படங்கள் டிசம்பர் 17-ம் தேதியும், விஜய்யின் காவலன் டிசம்பர் 24-ம் தேதியும் வெளியாகின்றன.
இது இம்மாத ரிலீஸ் அட்டவணை:
டிசம்பர் 3- சிக்குபுக்கு, தா, ரத்த சரித்திரம்
டிசம்பர் 10- விருதகிரி,
டிசம்பர் 17 – மன்மதன் அம்பு, ஈசன்
டிசம்பர் 24- காவலன்
இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், மெகா பட்ஜெட் படமான மன்மதன் அம்பு, விளம்பரங்கள் கூட வெளியாகாமல் உள்ளது கமல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.





பாலாவின் அவன் இவன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா?


குறுகிய காலத்தில் நிறைய சாதனைகளை படைக்க துடிக்கின்ற நடிகர்களின் பட்டியலில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடத்தில் நடிகர் விஷால் இருக்கிறார்.


தன் உடலை வருத்துவதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் புதிதுபுதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆவலில் நடித்துவருபவர் விஷால் என்ற கருத்து கோடம்பாக்கத்தில் பரவலாகவே இருக்கிறது.
விஷாலின் நடிப்புக்கு தீனிபோடுவதற்கு தயாராகிய இயக்குநர் பாலா, ஆர்யாவுடன் சேர்ந்து விஷாலையும் ‘அவன் இவன்’ படத்திற்காக இயக்கிவருகிறார்.
இப்படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடிகர் விஷால் நடித்துவருகிறார். இந்த பாத்திரமானது கின்னஸ் புத்தகத்தில் பதியப்படும் என எதிர்வுகூறியிருக்கிறார்கள். படப்பிடிப்புக் குழுவினரின் இக்கூற்றினால் குதூகலமாகியிருக்கும் விஷால், ‘அவன் இவன்’ படத்தில் வெளியீட்டுக்காக காத்திருக்கிறாராம். இயக்குநர் பாலாவிடம் அகப்பட்டுவிடுகின்ற நடிகர்கள் எப்பொழுதும் மிளிர்வது கண்கூடு. ஆகையினால் விஷாலின் நடிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுவதும் சகஜமானதே.




முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி


வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டி தாகாவில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணியினரை, அப்துர் ரசாக் வேகத்தில் மிரட்டினார். இவரது துல்லிய பந்துவீச்சில் பிரண்டன் டெய்லர் (27), சிபாபா (24), கேப்டன் சிகும்புரா (7) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் வெளியேறினர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சகப்வா (45), எர்வின் (41) நம்பிக்கை அளித்தனர். ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 209 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேசம் சார்பில் அப்துர் ரசாக் 4, சுக்ரவாடி சுவோ, மக்மதுல்லா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (23) சுமாரான துவக்கம் அளித்தார். இம்ருல் கெய்ஸ் (41) நம்பிக்கை அளித்தார். சித்திக் (11), அஷ்ரபுல் (6) உள்ளிட்டோர் ஏமாற்றம் அளித்தனர். பொறுப்பாக ஆடிய கேப்டன் சாகிப் அல் ஹசன் (63) நம்பிக்கை அளித்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற வங்கதேச அணி 49 ஓவரில் 200 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. ஜிம்பாப்வே சார்பில் கிறிஸ் மபோபு 3, பிரைஸ் 2, உட்சேயா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை தாகாவில் நடக்கிறது


எதிர்கால கேப்டன் கோஹ்லி : வாசிம் அக்ரம் புகழாரம்


தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராத் கோஹ்லிக்கு எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாகும் தகுதி உள்ளது,'' என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி. கிடைக்கும் வாய்ப்புகளில் அடுத்தடுத்து அசத்தி, எல்லோரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார். இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியது:
சமீப காலமாக விராத் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் அபார திறமை வெளிப்படுத்தி வருகிறார். சச்சின், டிராவிட் மற்றும் லட்சுமண் போன்று நிலையான ஆட்டத்தை தருகிறார். இன்னும் போட்டியின் அனைத்து பிரிவிலும் கவனம் செலுத்தி, கடுமையாக போராடினால், எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வர வாய்ப்புள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. தலைமை பணியை சிறப்பாக செய்யும் அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது.
இவர் சிறந்த வீரர் தான் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதேநேரம், பேட்ஸ்மேன் என்பவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்த வேண்டும். அதுபோல, விராத் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். மிக விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்றுள்ள அஷ்வின், அழகாக பந்து வீசுகிறார். போட்டியின் பதட்டமான சூழலிலும், அமைதியாக பலவிதமான வகைகளில் பவுலிங் செய்கின்றார். இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.


நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா இலகு வெற்றி


நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியிலும்; இந்தியா இலகு வெற்றியீட்டியுள்ளது.
இந்திய அணி நியூசிலாந்து அணியை எட்டு விக்கட்டுகளினால் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.
இந்தியாவின் ஜெய்ப்பூர் மானசிங் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் மார்டின் குட்பில் 70 ஓட்டங்களையும், ஸ்கொட் ஸைடைரிஸ் 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் சிறிசாந்த் நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை மட்டும் இழந்து 259 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் அணித் தலைவர் கௌதம் காம்பீர் ஆட்டமிழக்காமல் 138 ஓட்டங்களையும், விராட் கோலி 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மெக்கே மற்றும் விட்டோரி ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கௌதம் காம்பீர் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.


இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 259 ரன்கள்


ஜெய்பூரில் நடைபெற்று வரும் இந்திய, நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்ரீசாந்த் அபாரமாக வீசி 9 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
46-வது ஓவரில் ஸ்ரீசாந்த் அபாய வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் விக்கெட்டையும், வெட்டோரி விக்கெட்டையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.
துவக்கத்தில் ஜேமி ஹவ், வில்லியம்ஸன் ஆகியோர் ஆட்டமிழக்க நியூஸீலாந்து 16 ஓவர்களில் 64/2 என்று ஆனது.
அதன் பிறகு டெய்லரும், கப்திலும் இணைந்தனர் அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் ஆகியோர் சிக்கனமாக பந்து வீசினர். இதனால் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது.
8 ஓவர்களில் 32 ரன்களையே டெய்லர், கப்தில் ஆகியோரால் எடுக்க முடிந்தது. டெய்லர் 15 ரன்கள் எடுத்து நெருக்கடி தாங்க முடியாமல் பத்தான் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று கோலியிடம் டீப் மிட்விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு கப்தில், ஸ்டைரிஸ் இடையே 12 ஒவர்களில் 65 ரன்கள் சேர்க்கப்பட்டது. பவர் பிளே 35-வது ஓவரில் எடுக்கப்பட்ட போது நியூஸீலாந்து 137/3 என்று இருந்தது.
ஆனால் கப்தில் 70 ரன்களில் அஷ்வினிடம் வீழ்ந்தார். இவர் 102 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடித்து ஆட்டமிழந்தார்.
ஆனால் பவர் பிளேயில் ஸ்டைரிஸ், வெட்டோரி ஜோடி ரன்குவிப்பை துரிதப்படுத்த 40-வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 179ஆக உயர்ந்தது. அதாவது பவர் பிளேயில் 42 ரன்கள் எடுத்தனர் நியூஸீலாந்து வீரர்கள்
ஸ்காட் ஸ்டைரிஸ் சிறப்பான, சாதுரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வெட்டோரியும், ஸ்டைரிசும் இணைந்து 9 ஓவர்களில் 58 ரன்களைச் சேர்த்தனர்.
பிறகு கடைசி ஓவரில் ஸ்ரீசாந்த்தை கைல் மில்ஸ் வெளுத்தார். இதில் 12 ரன்களை ஒரு சிக்சருடன் மில்ஸ் அடிக்க கடைசி பந்தை சவிதீ 2 ரன்களுக்குத் திருப்பினார்.
நியூஸீலாந்து சவாலான 259 ரன்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
விளக்கு வெளிச்சத்தில் கடினம் என்று கூறப்படுகிறது. ஆனால் பனி விழத்துவங்கினால் நியூஸீலாந்து பந்து வீச்சாளர்கள் நிச்சயம் போராட வேண்டி வரும்.
யுவ்ராஜ் சிங் இன்று சோபிக்கவில்லை அவர் 48 ரன்களை விட்டுக் கொடுத்தார். நெஹ்ரா விக்கெட் இல்லாமல் 45 ரன்களை விட்டுக் கொடுத்தார். யூசுப் பத்தான் 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டுக் கொடுத்து டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
அஷ்வின் 10 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.


ஆஷஸ் இரண்டாவது போட்டியில் பொலிஞ்னர், ஹாரிஸ் சேர்ப்பு


அடலைட்டின் இடம்பெறவுள்ள ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாமில் வேகப்பந்து வீச்சாளர்களான டக் பொலிஞ்னர், றியோன் ஹாரிஸ் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முதலாவது டெஸ்ட் போட்டியில் மிச்சேல் ஜோன்சன், பென் ஹில்பென்ஹஸ், சேவியர் டொஹட்ரி ஆகியோர் இருந்தும் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அவர்கள் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 517 ஓட்டங்களைக் குவித்தார்கள். களமிறங்கிய மூவரும் சதத்தை கடந்தார்கள்.
இந்நிலையில் அணியில் வேறு பந்துவீச்சாளர்கள் தேவை என அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பொன்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கமைய பொலிஞ்னர், ஹாரிஸ் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.


ஆண்டின் சிறந்த வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ்


உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆண்டின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
2005ஆம் ஆண்டும் கிம் கிளைஸ்டர்ஸ் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அதன் பிறகு ஓய்வு பெற்ற கிம் கிளைஸ்டர்ஸ் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் சர்வதேச டென்னிஸ் உலகிற்கு வந்தார்.
மற்றொரு பெல்ஜியம் வீராங்கனையும், ஓய்விலிருந்து வெளியே வந்தவருமான ஜஸ்டின் ஹெனின் ஹார்டீனுக்கும் மீண்டுவந்த சிறந்த வீராங்கனை விருது அளிக்கப்பட்டது.
செக்.குடியரசு வீராங்கனை பெட்ரா க்விடோவா சிறந்த புதிய வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த இரட்டையர் வீராங்கனைகள் விருது அர்ஜெண்டீனாவின் கிசேலா டுல்கோ, மற்றும் இத்தாலியின் பிளாவியா பென்னட்டா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.