Search This Blog

Pages

Showing posts with label Riddles. Show all posts
Showing posts with label Riddles. Show all posts

Monday, February 7, 2011

விடுகதை‌க்கு ‌விடை சொ‌ல்லு‌ங்க‌‌ள்


விடுகதைக‌ள் படி‌த்து ரொ‌ம்ப நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டதா? இதோ வ‌ந்து‌வி‌ட்டது உ‌ங்களு‌க்கான ‌விடுகதைக‌ள். படி‌த்து‌வி‌ட்டு ‌விடைகளை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

2. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

நீ‌ங்க‌ள் யோ‌சி‌த்‌திரு‌ந்த ‌விடைக‌ள் ச‌ரிதானா எ‌ன்பதை சோ‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.

1. தீக்குச்சி

2. தபால் தலை

3. கடல் அலை

4. சாமரம்

5. வெங்காயம்

6. செல்பேசி

குழ‌ந்தைகளு‌க்கு ‌விடுகதை


கதைக‌ள் சொ‌ல்வது போ‌ல் குழ‌ந்தைகளு‌க்கு ‌விடுகதைகளு‌ம் சொ‌ல்‌லி‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம். அவ‌ர்களது ‌சி‌ந்தனை‌த் ‌திறனை ‌விடுகதைக‌ள் வள‌ர்‌க்கு‌ம்.

1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?

விடைகள்:

1. சைக்கிள், 2. பட்டாசு, 3. தராசு, 4. எறும்புக் கூட்டம், 5. அஞ்சல் பெட்டி.

Wednesday, January 19, 2011

விடுகதைகள்


1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.

விடை : பாம்பு

2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.

விடை : தேள்

3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.

விடை : தலைமுடி

4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.

விடை : பசு

5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.

விடை : கரும்பு