Search This Blog

Pages

Showing posts with label Lyrics. Show all posts
Showing posts with label Lyrics. Show all posts

Monday, May 16, 2011

(Rhyme) ci-TTi ci-la-ka-mma

ci-TTi ci-la-ka-mmaa
a-mma ko-TTi-M-daa?
too-Ta-ke-llaa-vaa?
pa-M-Du te-ccaa-vaa?
guu-Tloo pe-TTaa-vaa?
gu-Tu-kku-na mi-M-gaa-vaa?



English
small sparrow
has your mom hit you?
have you gone to the garden?
have you brought a fruit?
have you kept in a shelf?
have you swallowed it in one big gulp?

Monday, February 7, 2011

புதிய முகம் - கண்ணுக்கு மை அழகு பாடல் - சுசீலா


படம் : புதிய முகம்
பாடல் : கண்ணுக்கு மை அழகு


கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு

(கண்ணுக்கு மை...)

மழை நின்ற பின்னாலும் இல்லை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு (2)
இளமாரும் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு

(கண்ணுக்கு மை...)

ஆனந்த மஞ்சத்தில் அவழ்ந்தாலும் குழல் அழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு

(கண்ணுக்கு மை...)

மே மாதம் - என் மேல் விழுந்த மழை துளியே lyrics


மே மாதம் - என் மேல் விழுந்த மழை துளியே

என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

(என் மேல் விழுந்த மழை துளியே ...)

மண்ணை திறந்தாள் நீர் இருக்கும்
என் மனதை திறந்தாள் நீ இருப்பாய்
ஒளியை திறந்தாள் இசை இருக்கும்
என் உயிரை திறந்தாள் நீ இருப்பாய்
வானம் திறந்தாள் மழை இருக்கும்
என் வயதை திறந்தாள் நீ இருப்பாய்
இரவை திறந்தாள் பகல் இருக்கும்
என் இமையை திறந்தாள் நீ இருப்பாய்

(என் மேல் விழுந்த மழை துளியே ...)

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிகோண்டாள்
பாஷை ஊமை ஆய்விடுமோ

(என் மேல் விழுந்த மழை துளியே ...)

Thursday, January 27, 2011

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் - அமர்க்களம்

படம் (Movie) : அமர்க்களம்
பாடல் (Song) : சத்தம் இல்லாத
மியூசிக் Director: பரத்வாஜ்
பாடியவர் Singer: S. P. பாலசுப்ரமணியம்
கவிஞர் : வைரமுத்து

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவை கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியை கேட்டேன்
வழிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பணியை கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியை கேட்டேன்
தலையை கோதும் விரலை கேட்டேன்
நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீல குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருள புல்வெளி கேட்டேன்
தொட்டு படுக்க நிலவை கேட்டேன்
எட்டி பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவை கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவை கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயர கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையை கேட்டேன்
உள்ளங்காலில் நதியை கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயில கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பை கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்க கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்க கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்க கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்க கேட்டேன்
விழுந்தாள் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதாள் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழ கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாழை கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோளை கேட்டேன்
பாரதியாரின் சொல்லை கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லை கேட்டேன்
மாயக் கண்ணன் குழலை கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியை கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறை கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையை போன்ற பொறுமையை கேட்டேன்
புல்லை போன்ற பணிவை கேட்டேன்
புயலை போன்ற துணிவை கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவை கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய் பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய் மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழ கேட்டேன்
குறைந்தபட்ச அன்பை கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

பாண்டவர் பூமி - அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் lyrics

ஆண்:
அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,


அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் முல்லா போகும்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் முல்லா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

காற்றும் கூட எங்களுடன்,
இரவினில் தூங்க இடம் கேட்கும்,
மலை துளி கூட ஏன் தாயின்,
மடியினில் தவள தினம் ஏங்கும்,

நத்தை கூட்டின் நீர் போதும்,
எங்களின் தாகம் தீர்துகொல்வோம்,
கத்தும் கடலும் கை கட்ட,
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,

பெண்:
தாயின் மடியில் தினம் இருந்து,
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,
கனவினில் காலையில் ஒழி பெயர்த்து,
சொல்லி சொல்லி சுகமாய்,
தினம் சிரிப்போம்,

ஆண்:
ஐந்தெழுத்து புது ஒளியை,
அறிய வைத்தால் ஏன் அண்ணை,
அண்ணன் தங்கை ஐவருமே,
நேசம் கொண்டு தமிழ் மண்ணை,
நிலவுகள் சேர்ந்து,
போஒமியில் வாழ்ந்ததை,
அது ஒரு பொற்காலம்,

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்,
ஒற்றை கண்ணில் அடி பட்டால்,
பத்து கண்ணிலும் வலி கண்டோம்,

பள்ளிக்கூடம் தந்ததில்லை,
பாசம் என்னும் நூல் ஒன்றை,
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,
எங்கள் கதை போலே வேறொன்றை,

பெண்:
கண்களும் நீர் துளி கண்டதில்லை,
அழுதிட அவைகளும் பழகவில்லை,
கருப்பா சிவப்பா தெரியவில்லை,
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை,

ஆண்:
சேகரித்து வைப்பதற்கு,
தேவை இன்று எதுவும் இல்லை,
இறைவனுக்கும் எங்களுக்கும்,
இடைவெளிகள் இருந்ததில்லை,
நிலவுகள் சேர்ந்து ,
பூமியில் வாழ்ந்ததை,
அது ஒரு பொற்காலம்,

Wednesday, January 26, 2011

கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான் - ஆளவந்தான்

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

("ஆளவந்தான்" Theme Beats)

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,

ஆனால்...
கடவுள் கொன்று,
உணவை தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தகுமாரா,
நந்தகுமாரா,
நாளை மிருகம் கொள்வாயா?
மிருகம் கொன்ற,
உச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?

குரங்கில் இருந்து,
மனிதன் என்றால்,
மனிதன் நிறையை எரிப்பானா?
மிருக ஜாதியில்,
பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?
ஹ!

நந்தகுமாரா..

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,
ஆனால்...
கடவுள் கொன்று,
உணவை தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே........

புத்தம் புது காலை - Puththam Pudhu Kaalai Lyrics

Puththam Pudhu Kaalai Song Lyrics

புத்தம் புது காலை
பொன்னிற வேலை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

புத்தம் புது காலை
பொன்னிற வேலை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்

புத்தம் புது காலை
பொன்னிற வேலை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் anandham

வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசை பாடுது
வழி கூடிடும் சுவை kooduthu

புத்தம் புது காலை
பொன்னிற வேலை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

ஒரு புன்னகை பூவே - 12B Lyrics

Movie Title : 12B
Song Title : ஒரு புன்னகை பூவே
Music Director : ஹாரிஸ் ஜெயராஜ்
Lyricist: வைரமுத்து


ஒரு புன்னகை பூவே,
சிறு பூக்களின் தீவே,

ஏந்கையொஎ போகின்ற மேகம் நிற்குது,
என் பேரை உண் பேரை சொல்லி அழைக்குது,
லவ் pannu,
லவ் pannu,

ஒரு புன்னகை பூவே,
சிறு பூக்களின் தீவே,
நீ என்னை மட்டும் காதல் பண்ணு,
ஏன் வாலிப நெஞ்சம்,
உண் காலடி கெஞ்சும்,
சிறு காதல் பிச்சை போடு கண்ணு,
நான் கெஞ்சி கேட்கும் நேரம்,
உண் நெஞ்சின் ஓரம் ஈரம்,
எ, ச்சோ அச்சோ, காதல் வாராதோ?

சூரியன் வாசல் வந்து ஐஸ் கிரீம் குடுக்கும்,

சந்திரன் உள்ளே வந்து சாக்லேட் குடுக்கும்,

சுதாதம்மா, ரீளுதாம்மா,

உண் படுக்கை அறையிலே,
ஒரு வசந்தம் வேண்டுமா?
உண் குளியல் அறையிலே,
விண்டேர் சீசன் வேண்டுமா?
நீ மாற சொன்னதும்,
நான்கு சீசொனும் மாற வேண்டுமா?
லவ் பண்ணு,

எம்பது ஆண்டுங்கள் இளமையும் வேண்டுமா?
சொடக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா?

அட வெள்ளை வெள்ளையாய் ,
ஓர் இரவு வேண்டுமா?
புது வெளிச்சம் போடவே,
இரு நிலவு வேண்டுமா?

உன்னை காலை மாலையும்,
சூற்றி வருவது,
காதல் செய்யவே,
லவ் பண்ணு, ஐயோ பண்ணு!

நீ கெஞ்சி கேட்கும் நேரம்,
ஏன் நெஞ்சின் ஓரம் ஈரம்,
ஆஹ ச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ?

பூவே வாய் பேசும்போது - 12B Lyrics

Movie Title : 12B
Song Title : பூவே வாய் பேசும் பொது
Music Director : ஹாரிஸ் ஜெயராஜ்
Singer/s: ஹரிஷ் ராகவேந்திர , மகாலட்சுமி Iyer
Lyricist: வைரமுத்து

பூவே வாய் பேசும்போது,
காற்றே ஓடாதே நில்லு,
பூவின் மொழி கேட்டுக்கொண்டு,
காற்றே நல வார்த்தை சொல்லு,


குளிர் வார்த்தை சொன்னால்,
கொடியோடு வாழ்வேன்,
என்னை தாண்டி போனால்,
நான் விழுவேன்,
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன்,


பூக்களை தொடுத்து,
ஊடுதிடுப்பேன் அன்பே,
புன்னகை புரிந்தால்,
கலைந்திருப்பேன் அன்பே,

காதலன் ஆணைக்கு,
காத்திருப்பேன்,
கைக்கெட்டும் தூரத்தில்,
பூத்திருப்பேன்,
உண் சுவாச பாதையில் ,
நான் சுற்றி திருகிவேன் ,
உண் சுவாச பாதையில் ,
நான் சுற்றி திருகிவேன் ,

ஏன் மௌனம் என்னும்
பூட்டை ஓடைக்கிராய் ,
என்ன நான் சொல்வேன்?

நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை ,
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை,

நேசத்தினால் என்னை கொன்றிவிடு,
உண் நெஞ்சுக்குழியில் என்னை புதைத்துவிடு,
என் நினைவு தோன்றினால் ,
துளி நீரில் சிந்திடு ,
என் நினைவு தோன்றினால் ,
துளி நீரில் சிந்திடு ,

அட நூறு காவியம் ,
சொல்லி தோற்றது என்று ,
நீ சொன்னது ,

ஆயிரத்தில் ஒருவன் - உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் - lyrics

உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்….
பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளதால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்…..

எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கோடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
வந்த நானத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்


உன்னை நான் சந்தித்தேன்….

ஆளவந்தான் - உன் அழகுக்கு தாய் பொறுப்பு song lyrics

Movie Title : ஆளவந்தான்
Song Title : உன் அழகுக்கு தாய் பொறுப்பு
Lyricist : வைரமுத்து

ஆண் :
ஓஹ்ஹ்ஹ, உன் அழகுக்கு தாய் பொறுப்பு,
அறிவுக்கு தமிழ் பொறுப்பு,
உன் அழகுக்கு தாய் பொறுப்பு,
அறிவுக்கு தமிழ் பொறுப்பு,

பெண் :
ஓஹ்ஹ்ஹ,
உன் புகழுக்கு வான் பொறுப்பு,
பொறுமைக்கு மன்ன பொறுப்பு,
உன் குணத்துக்கு போன் பொறுப்பு,
குறும்புக்கு விரல் பொறுப்பு,

ஆண் :
உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு,
நெஞ்சுக்கு மலை பொறுப்பு,
குரலுக்கு குயில் பொறுப்பு,
குழைந்தைக்கு நான் பொறுப்பு,

உயிரே உயிரே,
என் உலகம் உனது பொறுப்பு,
உறவே உறவே,
உன் உதடு எனது பொறுப்பு,
உயிரே, உயிரே ...


உன் பார்வைக்கு பனி பொறுப்பு,
உன் பணிவுக்கு மலை பொறுப்பு,
உன் பார்வைக்கு பனி பொறுப்பு,
உன் பணிவுக்கு மலை பொறுப்பு,

பெண் :
உன் சிரிப்புக்கு இசை பொறுப்பு,
சிலிர்புக்கு இவள் பொறுப்பு,

ஆண் :
உன் அளவுக்கு சிலை பொறுப்பு,
உண் வளைவுக்கு நதி பொறுப்பு,

ஓஹ்ஹ, உன் அழகுக்கு தாய் பொறுப்பு,
அறிவுக்கு தமிழ் பொறுப்பு,

பெண் :
உன் புகழுக்கு வான் பொறுப்பு,
பொறுமைக்கு மன்ன பொறுப்பு,

ஆண் :
உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு,
நெஞ்சுக்கு மலை பொறுப்பு,

பெண் :
என் குளிருக்கு நீ பொறுப்பு,
குழந்தைக்கு நான் பொறுப்பு,


ஆண் :
உயிரை e உயிரே,
என் உலகம் உனது பொறுப்பு,
உறவே உறவே,
உன் உதடு எனது பொறுப்பு,
உயிரே, uyirae...


பெண் :
என் போர்வைக்கு நீ பொறுப்பு,
உன் வேர்வைக்கு நான் பொறுப்பு,
என் போர்வைக்கு நீ பொறுப்பு,
உன் வேர்வைக்கு நான் பொறுப்பு,

ஆண் :
கனவுக்க் u நீ பொறுப்பு,
தினவுக்கு நான் பொறுப்பு,

பெண் :
என் வரவுக்கு நீ பொறுப்பு,
உன் செல்லாவுக்கு நான் பொறுப்பு,

ஆண் :
உன் அழகுக்கு தாய் பொறுப்பு,
அறிவுக்கு தமிழ் பொறுப்பு,

பெண் :
உன் புகழுக்கு வான் பொறுப்பு,
பொறுமைக்கு மன்ன பொறுப்பு,

ஆண் :
உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு,
நெஞ்சுக்கு மலை பொறுப்பு,

பெண் :
என் குளிருக்கு நீ பொறுப்பு,
குழந்தைக்கு நான் பொறுப்பு,

ஆண் :
உயிரே உயிரே,
என் உலகம் உனது பொறுப்பு,
உறவே உறவே,
உன் உதடு எனது பொறுப்பு,
உயிரே, உயிரே ...

உயிரே ...

மீனம்மா Song Lyrics - ஆசை

Movie Title : ஆசை
Song Title : மீனம்மா
Singer's: அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன்
Lyricist: வைரமுத்து

மீனம்மா...
அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே
சின்னச்சின்ன மனங்களும் சின்னச்சின்ன குணங்களும்
மின்னல்போல வந்து வந்து போக
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட

(மீனம்மா)

ஒரு சின்னப் பூத்திரியில் ஒழி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை
காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு உன்னை எட்டிப்பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத்
தீண்டிட வா
ஜாதிமல்லிப்பூவே தங்கவேன்னிலாவே
ஆசைதீரவே மெதுவாய் மெதுவாய்த் தொடலாம்

(மீனம்மா )

அன்று காதல் சொல்லியதும் இரு கன்னம் கிள்ளியதும்
அடி இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது
அங்கு பட்டுச் சேலைகளும் நகை நாட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில்
நிற்கிறது
மாமன்காரன் நானே பாயைப்போடு மானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் வரலாம்

(மீனம்மா )

புல்வெளி புல்வெளி தன்னில் - சித்ரா, வைரமுத்து

Movie Title : ஆசை
Song Title : புல்வெளி புல்வெளி தன்னில்
Music Director : தேவ
Singer/s: சித்ரா
Lyricist: வைரமுத்து


புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்த் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா ?
இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா ?

(புல்வெளி)

ஹாஹா ஹாஹா ஹஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ஹஹா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு ?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு ?
இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்

(புல்வெளி)

துள்துள்துள் துல்துல்துல்லேன துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு ?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ந்ஜானம் பெற்றுத் தந்தது யாரு ?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்

(புல்வெளி)

யாக்கை திரி பாடல் - ஆயுத எழுத்து Lyrics

Movie Title : ஆயுத எழுத்து
Song Title : யாக்கை திரி..பாடல்
Music Director : A.R. ரெஹ்மான்
Singer/s: A.R.ரேகன ,ஷாலினி ,சுனிதா சாரதி
Lyricist: வைரமுத்து (பாடல்)


யாக்கை திரி
காதல் சுடர்
அன்பே

ஜீவன் நதி
காதல் கடல்
நெஞ்சே

பிறவி பிழை
காதல் திருத்தும்
நெஞ்சே
இருதயம் கல்
காதல் சிற்பம்
அன்பே

யாக்கை திரி
காதல் சுடர்

தொடுவோம் , தொடர்வோம் , படர்வோம் ,
மறவோம் , துறவோம்

ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் துவைதம்
காதல் அத்வைதம்
சர்வம் சூன்யம்
காதல் பிண்டம்
மானுடம் மாயம்
காதல் அமரம்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்

யாக்கை திரி
காதல் சுடர்
அன்பே

ஜீவன் நதி
காதல் கடல்
நெஞ்சே

பிறவி பிழை
காதல் திருத்தும்
நெஞ்சே
இருதயம் கல்
காதல் சிற்பம்
அன்பே

யாக்கை திரி
காதல் சுடர்

தொடுவோம், தொடர்வோம், படர்வோம்,
மறவோம், துறவோம

பாம்பே - பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு Songs

Movie Title : பாம்பே
Song Title : பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
Music Director : A.R.ரெஹ்மான்
Singer's: மால்குடி சுபா ,சுஜாதா
Lyricist: வைரமுத்து


பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைக்கு என்ன ஒரு கவலை எப்போதும் பறவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா... குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை

(நீ சிரிச்சா )

பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைகட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைகட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு

குல்லா குல்லா ஹல்லா குல்லா.. குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம் கொள்வதற்கு இல்லை

நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா

அலைகள் ஓய்வதில்லை - காதல் ஓவியம் Lyrics

Movie Title : அலைகள் ஓய்வதில்லை
Song Title : காதல் ஓவியம்
Music Director : இளையராஜா
Singer's: இளையராஜா , சுனந்த
Lyricist: வைரமுத்து


காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தேய்வீஹம் oh oh
(காதல்)

தேடினேன் ஒ ஒ ஒ என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
(காதல்)

தாங்குமோ ஒ ஒ ஒ என் தேஹமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
மோஹம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
(காதல்)

செப்டம்பர் மாதம், அலைபாயுதே Song - பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை

Movie Title : அலைபாயுதே
Song Title : செப்டம்பர் மாதம்
Music Director : A.R.ரெஹ்மான்
Singer's: ஆஷா போன்ஸ்லே, ஷங்கர் மகாதேவன்
Lyricist: வைரமுத்து


துன்பம் தொலைந்தது... இன்பம் தொலைந்தது ...

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின்
துன்பத்தை தொலைத்து விட்டோம் (௨ )
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின்
இன்பத்தை தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ...
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்பொ...
கல்யாணம் முடிந்ததே அப்போ

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின்
துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின்
இன்பத்தை தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ...
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ ...
கல்யாணம் முடிந்ததே அப்போ

ஏ பெண்ணே ...
காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங்கொழுந்து ஏ கண்ணே ..
ஓ நிறையில் மட்டுமே காதல் பார்க்கும்
குறையில் மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா
காதல் பார்ப்பது பாதி கண்ணில்
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளி மூக்கின் நுனி மூக்கில் கோபங்கள்
அலைகின்ற ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்
பெண்கள் இல்லாமல் ஆண்களுக்காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம்
அஹா ஆ அஹா அஹா ஆ அஹா அஹா ஆ அஹா ஆ
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்

நான் கண்டேன் ...
காதல் என்பது கழுத்தில் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணூறு வரைக்கும் பூவைத் தாடு வா அன்பே
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா வா
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது அப்போ ...
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ ...
கல்யாணம் முடிந்ததே அப்போ

விடியாத இரவென்று ( அச்சம் அச்சம் இல்லை) - இந்திரா lyrics

படம் : இந்திரா
பாடல் : விடியாத இரவென்று ( அச்சம் அச்சம் இல்லை)



விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா...

ஹெ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹெ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹெ அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே...வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம போஒமிஎன்று அழுத்திச்சொல்லம்மா

(ஹெ அச்சம்)

லல்லா லல்லல்லல்லொஅஎ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமிதொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(ஹெ அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்

ரத்தம் சிந்த நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டு