Search This Blog

Pages

Friday, March 1, 2013

இஸ்ரேலில் கறுப்பினத்தவர்களின் மக்கள் தொகையை குறைக்க சதி!


Israel-African-refugee
(தூது)
இஸ்ரேலில் கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கையை குறைக்க அவ்வின பெண்களுக்கு ஆபத்து மிகுந்த கருத்தடை மருந்துகளை அளிப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
டெபொ ப்ரோவரா என்று சொல்லக்கூடிய நீண்டகால கருத்தடை மருந்தை கருப்பின தாய்மார்களுக்கு இஸ்ரேலிய சுகாதாரத்துறை அளிப்பதாக அறிக்கை கூறுகிறது. மேலும் 57 சதவீத கறுப்பின பெண்களுக்கு டெபொ ப்ரோவரா பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது.
மேலும் கறுப்பினத்தவர்கள் இஸ்ரேலில் பல இன்னல்களுக்கு ஆளாவதாகவும் அது தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ராண்டி ஷார்ட் என்னும் மனித உரிமை அமைப்பு பிரஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செய்தியில் இஸ்ரேல் சிறையில் அதிகமானோர் கருப்பர்கள் என்றும் சினாய் தீவில் கறுப்பர்களுக்கு என்றே சிறை அமைக்கப்பட்டு உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் முன்னால் வெளியுறவுத்துறை அமைச்சர் லிபெர்மன் கருப்பர்களை வெறுப்பவர் என்றும் கறுப்பினத்தவர்கள் சியோனிச கொள்கைக்கு எதிராக இருப்பதால் இஸ்ரேலில் ஏழைகளாகவும் வீடுகள் அற்ற நிலையிலும் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment