Search This Blog

Pages

Friday, September 20, 2013

அம்மா எப்போ தூக்கிக் கொஞ்சுவாங்கனு 2 மாத குட்டிப்பாப்பாவுக்கு தெரியுமாம்…

27-baby-ds-600
இரண்டு மாத குழந்தைகளுக்கு அம்மா தன்னை எப்போது தூக்கிக் கொஞ்சுவார் என்பது நன்றாக தெரியும் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வாசு ரெட்டி, தனது ஆய்வின் முடிவில், பிறந்து இரண்டு முதல் நான்கு மாதங்களே ஆன இளம் சிறார்களுக்கு தன்னைச் சுற்றி நடப்பவைகளாஇப் புரிந்து கொள்ள இயலும் எனத் தெரிவித்துள்ளார்.
அதுவும் அம்மா அருகில் வருகிறார் என்றால், தன்னைத் தூக்கி கொஞ்சுவதற்கோ அல்லது உணவு கொடுப்பதற்கோ தான் வருகிறார் என்பது அந்த குட்டிகளுக்கு நன்றாகவே புரியுமாம். எனவே, அதற்குத் தக்கவாறு உடலை விரைப்பாக்கி, தோள்பட்டையைத் தூக்கி அம்மா தூக்குவதற்கு வசதியாக ரெடியாகி விடுமாம் குழந்தை.

உடற்பருமன் நோய்தான்: அமெரிக்க டாக்டர்கள் அறிவிப்பு

3
 ”உடற்பருமன் ஒரு நோய்; இதை கட்டுப்படுத்தும் முயற்சியில் டாக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என, அமெரிக்க மருத்துவ சங்கம் (எ.எம்.எ.,) தெரிவித்துள்ளது.
“உடற்பருமன் நோய் அல்ல, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், தகுந்த உடற்பயிற்சி இல்லாததாலும் தான் இது ஏற்படுகிறது. எனவே, இதை, ஒரு குறைபாடாக கருதவேண்டுமே தவிர, நோயாக கருதக்கூடாது’ என, அமெரிக்காவில், பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, உடற்பருமனுக்கு சிகிச்சை பெற்றவர்கள், தங்களது மருத்துவ செலவினை திரும்பப்பெறாத நிலையில் இருந்தனர். மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும், உடற்பருமனுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு காப்பீட்டு தொகை, வழங்க முன்வரவில்லை. இந்நிலையில், “உடற்பருமன் என்பது ஒரு நோய்; நீரிழிவு நோய் டைப்-2, மற்றும் இதயக் கோளாறுகளுக்கு உடற்பருமனே முக்கிய காரணமாக கருதப்படுவதால், உடற்பருமனை நோயாக கருத வேண்டும்’ என, அமெரிக்க மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ சங்க உறுப்பினர், டாக்டர் பட்ரைஸ் ஹாரீஸ் கூறியதாவது: அமெரிக்க மருத்துவ சங்கத்தின் இந்த அறிவிப்பு மூலம், நீரிழிவு நோய் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். காரணம், உடற்பருமனால்தான், இவை ஏற்படுகின்றன. உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவும் இயலும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமும் 3 முறை ரத்த கண்ணீர் வடிக்கும் பெண் : டாக்டர்கள் அதிர்ச்சி

voknews
சிலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தினமும் 3 முறை ரத்த கண்ணீர் வடித்து வருகிறார். ஒரு மாதமாக இது நடக்கிறது. என்ன சிகிச்சை அளித்தாலும் ரத்தம் நிற்காததால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சிலி நாட்டின் லாஸ் லாகோஸ் மாகாணம் புராங்க் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் ஒலிவா, கார்பென்டர். இவரது மகள் யாரிட்ஷா ஒலிவா (20). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். யாரிட்ஷா ஒலிவா இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு நாள் அழுத போது கண்ணில் இருந்து ரத்தம் வந்தது. ஒரு மாதமாக தினமும் 3 முறை கண்களில் இருந்து கண்ணீருக்கு பதில் ரத்தம் வருகிறது. இதனால் ஒலிவாவுக்கு பயங்கர வலி ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள கண் டாக்டரிடம் மகளை அழைத்து சென்றனர்.
ஒலிவாவுக்கு முதலில் கண்ணில் போடுவதற்காக சொட்டு மருந்து கொடுத்தனர். ஆனால், மருந்து போட்டும் ஒலிவாவுக்கு வலியும் குறையவில்லை, ரத்த கண்ணீர் வருவதும் நிற்கவில்லை. அதன்பிறகு பல கண் டாக்டர்களிடம் ஒலிவாவை பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால், டாக்டர்களால் ஒலிவாவின் பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை. ஹெமோலாக்ரியா என்ற அரிய நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து யாரிட்ஷா கூறுகையில், எனக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை, ஏன் இப்படி நடக்கிறது, நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லைÕ என்று பீதியுடன் கூறுகிறார். மகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். நல்ல மனம் படைத்தவர்கள் உதவி செய்யுங்கள் என்று ஜோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 2009ல் இதேபோல் ஹெமோலாக்ரியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் அழுத போதும் கண்ணில் இருந்து ரத்தம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1500 அடி ஆழ பள்ளத்தாக்கை கயிறு மூலம் கடந்து சாதனை

928804549g
அரிசோனா, ஜூன் 25- அமெரிக்காவில், 1,500 அடி ஆழம் உள்ள பள்ளத் தாக்கை கயிறு மூலம் கடந்து சாதனை படைத் துள்ளார், அந்நாட்டை சேர்ந்த வாலிபர்.
அமெரிக்காவின், அரி சோனா மாகாணத்தில் உள்ளது கிராண்ட் கேன் யான்’ பள்ளத்தாக்கு. 1,500 அடி ஆழ முடைய இந்த பள்ளத்தாக்கின் அருகில்தான், லிட்டில் கொலராடோ நதி பாய் கிறது. இந்நிலையில், இந்த பள்ளத்தாக்கின் ஒரு முனையிலிருந்து, மறு முனைக்கு, கயிறு மூலம் கடந்து சென்று, சாதனை படைத்துள்ளார், அந்நாட்டை சேர்ந்த வாலிபர், நிக் வாலண்டா, 34.
இது குறித்து நிக் வாலண்டா கூறுகையில், “எதிர்பார்த்ததை விட, காற்றின் வேகம் அதிக மாக இருந்தது. எனது தோள்பட்டையில் கடும் வலி இருந்த நிலையி லும், இந்த சாதனையை படைத்துள்ளேன்,” என்றார்.
இந்த மாபெரும் சாதனைக்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற வாலண்டா, கடை சியாக, புளோரிடாவில், கடும் பயிற்சி எடுத்து, 1,000 அடி தூரத்தை, கயிறு மூலம் கடந்தார்.
கடந்த ஆண்டு, உலகின் மிகப்பெரிய, நயாகரா’ நீர் வீழ்ச்சியை கயிறு மூலம் கடந்து சாதனை படைத்தார். தற்போது, 426 மீட்டர் நீளமுடைய இந்தப்பள்ளத்தாக்கை, இவர், 23 நிமிடத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

பல்கலைகழக மாணவர்களுக்கு மனநல சோதனை

uni
பல்கலைக்கழகங்களுக்கு எதிர்காலங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் மனநலத்தை சோதனைக்கு உட்படுத்துவதற்கு உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
உயர் கல்வியமைச்சு மற்றும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதற்கான ஆலோசனைகளை நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை நோக்குகின்றபோது பல்கலைக்கழகங்களுக்குள் எதிர்காலங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் மனநிலையை சோதனைக்கு உட்படுத்துவது உகந்ததாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பெண்களிடம் தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

mobile
கல்முனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பெண்களிடம் சில ஆட்டோ சாரதிகள் தொலைபேசி இலக்கங்களைக் கேட்டு தொல்லைபடுத்துவதாக பெண்கள் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்தும் சாரதிகள், நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக கல்முனை பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளில் தனியாகவும் கூட்டாகவும் பயணிக்கும் இளம் பெண்களிடம் சில ஆட்டோ சாரதிகள் அவர்களது தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்துகின்றனர். அது மாத்திரமின்றி எப்படியோ தொலைபேசி இலக்கத்தினை அறிந்து கொள்ளும் சாரதிகள் அவர்களது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து அப் பெண்களிடம் தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் ஆசை வார்த்தைகளையும் கூறி தொல்லைபடுத்துவதாக சிலர் முறைப்பாடுகளையும் தெரிவித்துள்ளனர்.
எனவே, தனியாக பயணிக்கும் பெண்களிடம் தொலைபேசி இலக்கமோ அல்லது தொல்லையோ கொடுக்கின்ற நபர்கள் பற்றிய தகவல்களை அந்தந்த சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களிடமோ அல்லது பொலிஸாரிடமோ தெரிவிக்குமாறு சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கல்முனை பிரதேசத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொலிஸ் நிலையத்தினால் பல்வேறு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆழ் கடலுக்குள் உருவாகும் உள் அலைகள் (INTERNAL WAVES)

internalwavessatellite
(எஸ்.ஹலரத் அலி-ஜித்தா) 
அல்லாஹ் படைத்த இப்பூவுலகில் பெரும்பாகம் கடல் சூழ்ந்த உலகமாக சுமார் 70% நீர் நிரம்பிய கோளமாகவே உள்ளது.மனிதன் விண்ணில் ஏறி நிலவை பிடித்துவிட்டான்.
ஆனால் அவன் காலடியில் கிடக்கும் கடலின் ஆழத்திற்கு சென்று அதன் அற்புதங்களை அறிய முடியாத நிலையிலே அவன் அறிவு இன்றும் இருக்கின்றது. ஆழ் கடல் மர்மங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
ஆறாம் நூற்றாண்டில் இறக்கி அருளப்பட்ட அல்குர்ஆனில் ஒரு வசனத்தில் அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு உதாரணமாக ஆழ் கடலின்  இருளுக்கு ஒப்பிடுகிறான்.
“ ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” —அல் குர்ஆன். 24:40
இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் நவீன அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்துகிறான். பொதுவாக கடலின் மேற்புறத்தில் காற்றின் தாக்கத்தால் அலைகள் உருவாகின்றன. இரவில் சந்திரனின் ஈர்ப்பின் காரணமாகவும் அலைகள் எழும்புகின்றன. இவ்வலைகள் எல்லாம் கடலின் மேற்பரப்பில் நிகழ்பவை.
ஆறாம் நுற்றாண்டில் இறக்கப்பட்ட அல்குர்ஆன் கூறுவது, ஆழ்கடல் அலைகளாலும்,அதற்கு மேல் மற்றொரு அலைகளாகவும் அதற்கும் மேல் மேகத்தாலும் மூடப்பட்டிருப்பதால் சூரிய ஒளி உட்புக முடியாமல் கடல் இருளாக இருக்கின்றது. ஆழ் கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பது பற்றிய அறிவு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதன் அறிந்து கொண்டான்.
1939   ம் ஆண்டு நார்வே நாட்டைச்   சேர்ந்த நோபெல் பரிசு பெற்ற கடல் ஆய்வாளர் நீல்சென், வடதுருவத்திற்கு செல்வதற்காக   கப்பலில் புறப்பட்டார்.   பனிப்பாறைகள் நிரம்பிய கடற்பகுதிக்கு   அவர் கப்பல் வந்தபோது மேலும் முன்னோக்கி செல்ல முடியாதவாறு கப்பல்   தடுக்கப்பட்டது.   அவர் கப்பலை நகர்த்த பல முயற்சிகள்   செய்தும் 20%   வேகத்தில் மட்டுமே நகர முடிந்தது.
காற்று ஏதுமின்றி அமைதியான   கடற்பரப்பில் கப்பல் நகராதது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.   இதன் காரணம் பின்புதான்   தெரிந்தது.   கடல் நீரானது பல அடுக்கு அடர்த்தி   நிலை,வெப்ப நிலை உப்புத்தன்மை மாறுபாடுகளைக் கொண்டது.   பனிப்பாறைகள்   ( Fiord )   உருகி நன்னீர் சேரும் மேற்பகுதி அடர்த்தி குறைவாகவும் உப்பு அதிகமுள்ள அடிப்புற   நீர் அடர்த்தி அதிகமாகவும் இருக்கும்.   அதிக அடர்த்தியுள்ள   கீழேயுள்ள நீரானது சுவர் போன்று கப்பலை தடுக்கிறது.   இதை (   Dead Water ) என்று   அழைக்கின்றனர்.
ஆழ்   கடலின் ஆழத்தில் உள்ள வெப்ப நிலை அடர்த்தி,   உப்புத்தன்மைக்கு ஏற்றவாறு   வெவ்வேறு அடர்த்தியுள்ள நீர்   ஒன்று சேரும் இடங்களில் ஆழத்தில் பெரும் அலைகள் உருவாகின்றன.   இவை சுமார்   100   மீட்டர் பிரமாண்ட  உயரமும்   ( 330   அடி) பல நூற்றுக்கணக்கான மைல்   நீளத்திலும் நீண்டு செல்லும்.கடற்பரப்பில் இவ்வலைகள் கண்ணுக்கு தெரியாது.
சூரிய ஒளி கடலில் பட்டு செங்குத்தாக   மேல் நோக்கி திரும்பிச் செல்வதால் ஆழ்கடல் உள் அலைகளின் பிரதி பலிப்பை (Reflected   Sunlight or Sunglint)   செயற்கை கோள் புகைப்படங்கள்   மூலமே காண முடியும்.   மேலேயுள்ள புகைப்படம் கடந்த ஜனவரி   18,   2013   ல்   (International Space Station)   சர்வதேச விண்வெளி   நிலையத்திலிருந்து  கரீபியன் கடற்பகுதியில் எடுக்கப்பட்டது.
கடலின் மேற்பகுதியில் காற்று, மற்றும் நீர் என இரு வெவ்வேறு அடர்த்தியுள்ள ஊடகங்களுக்கு மத்தியில் மேற்புற அலை தோன்றுகிறது. கடலின் ஆழத்தில் வெவ்வேறு அடர்த்தியுள்ள திரவங்களுக்கு மத்தியில் உள் அலைகள்  (Internal waves) உருவாகின்றன.
இதுபோன்ற   கடலடி அலைகள் உலகின் பல்வேறு கடற்பகுதிகளில் ஆழத்தில்  உருவாவதை செயற்கைக் கோள்   படங்கள் தெளிவாக நமக்கு காட்டுகின்றன.
அல்லாஹ் கூறும் இரண்டாவது அறிவியல்   உண்மை, கடல் நீரில் ஊடுருவும் சூரிய ஒளியானது ஆழம் செல்லச் செல்ல   தடுக்கப்பட்டுவிடும். (கடலுக்குள்ளிருந்து) “அவன்   கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.”  அல் குர்ஆன்.24:40.   சூரியனின் வெண்மை ஒளியானது பல அலைநீளம் உள்ள வண்ணங்களின் கலவையே.
சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,நீலம்,இன்டிகோ,வயலட்   அதிக அலை நீளத்திலிருந்து   குறைந்த அலை நீள வண்ணங்களை வரிசைப்படுத்தி VIBGYOR   என்று அழைப்பர்.   அதிக அலை நீளம் உள்ள   சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள் போன்ற நிறங்கள்,15,30,50   மீட்டர் ஆழத்திற்குமேல் ஊடுருவாது.   குறைந்த அலை நீளம் உள்ள   வயலட்,   பச்சை,   நீலம் போன்றவை இன்னும்   கூடுதலாக சுமார் 200   மீட்டர் ஆழம் வரைச் செல்லும்.

கடல் இருள் மயமாவதற்ககு காரணம் சூரிய ஒளியானது முதலில் மேகத்தால் தடுக்கப்படுகிறது. அதிலிருந்து தப்பி வரும் ஒளியை கடலின் மேற்புற அலைகள் தடுத்து விடுகின்றன. இன்னும் ஊடுருவிச் செல்லும் ஒளிகளை இருவித அடர்த்தியால் ஊருவாகும் உள் அலைகள் (Internal Gravity Waves) தடுத்து, கடலை இருளாக்கி விடுகின்றன. சூரிய ஒளியில்,
73%————1 செ.மீ. அல்லது ½” அங்குலம் ஆழமே ஒளி ஊடுருவும்.
44.5%———-1மீட்டர்  அல்லது 3.3 அடி ஆழமே செல்லும்.
22.5%———-10 மீட்டர் அல்லது 33 அடி ஆழமே செல்லும்.
0.53%———-100 மீட்டர் அல்லது 330 அடி ஆழமே செல்லும்.
   0.0062%——-200 மீட்டர் அல்லது 660 அடி ஆழம் வரையில் செல்லும்.
200-300 மீட்டர் ஆழத்திற்கு கீழ் முழுக் கடலும் இருள்மயமாகவே இருக்கும். இன்று ஆழ் கடலில் ஆக்சிஜன் வாயுவுடன் (SCUBA) மூழ்கிச் செல்பவர் தன் கையை நீட்டினாலும் ஒளி இல்லாததால் பார்க்க முடியாது.
ஒளி அலைக்கும் கடல் அலைக்கும் உள்ள தொடர்பு.
அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற மாஸாசூட்செட்ஸ் தொழில் நுட்ப கழகத்தின் ( MIT-Experimental and Nonlinear Dynamics Lab) ஆய்வகத்தில், பேராசிரியர் தாமஸ் பீகாக் தலைமையில் ஆழ் கடலில் எவ்வாறு உள் அலைகள் உருவாகின்றன, இதற்கும் ஒளிக்கும் உள்ள தொடர்பை ஆய்வு  செய்தனர்.
அதன் முடிவில், “ஆழ் கடலின் உள்ளே உருவாகும் அலைகளுக்கும், ஒளி ஊடுருவி செல்வதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும்,  ஒளியானது பல வகை அடர்த்தியுள்ள கண்ணாடி ஊடகத்தில் (Optical interferometers) செல்லும்போது ஒளியை தடுத்தும் சில அலை நீளங்களை கடத்தவும் செய்வதுபோல் கடலில் உருவாகும் உள் அலைகளும் (Internal Waves) வெவ்வேறு அடர்த்தியுள்ள கண்ணாடி ஊடகம் போல் செயல் படுகிறது. கடலடி அலைகளுக்கும் ஒளி ஊடுருவலுக்கும் உள்ள தொடர்பை தற்போதுதான் முதன் முறையாக கண்டுபிடித்துள்ளோம். இன்னும் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.”என்று அறிவித்தார்.
More information: Paper: prl.aps.org/abstract/PRL/v104/i11/e118501 Provided byMassachusetts Institute of Technology
http://phys.org/news191657531.html
இன்று அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அறிவித்த கடல் உள் அலைக்கும், ஒளி அலைக்கும் இடையில் உள்ள தொடர்பு, இந்த உண்மையை அல்லாஹ் 6 ம் நூற்றாண்டில் வெளிப்படுத்தி விட்டான்.
“….ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது; அதற்க்கு மேல் மற்றொரு அலை; அதற்குமேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்போது) அவன் தன் கையை வெளியே  நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” -அல் குர்ஆன்.24:40. 
கடலடி நீரின் அடர்த்தி மாறுபாட்டால் உருவாகும் உள் அலைகள், அடர்த்தி மாறுபாடுள்ள கண்ணாடி (Optical  interferometer)  எவ்வாறு ஒளியை தடுத்து பிரித்து விடுவதுபோல்  உள்  அலைகள் (Internal Waves) செயல் படுகின்றன. அலையையும், ஒளியையும் இணைத்து ஒரே வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவது ஓர் அறிவியல் அற்புதம்.
படைத்த இறைவனை மறுக்கும் நிராகரிப்பவர்களை, அல்லாஹ் ஆழ்கடல் இருளுக்கு உவமையாக கூறுகிறான். இதன் காரணம் என்ன என்று சிந்திக்கும்போது, உலகில் மிகச்சிலரே அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை மக்கள் மறுப்பவர்களாகவே உள்ளனர். எப்படி எனில்,
இப்பூமியில் நீர், நிலம் அனைத்திலும் உள்ள ஜீவராசிகளில் சுமார் 10% மட்டுமே சூரிய ஒளியை பெறுகின்றன. ஆழ் கடலில் வாழும் சுமார் 90% உயிரினங்கள் இருள் உலகிலே வசிக்கின்றன. ஆகவே நிராகரிக்கும் மக்களை அல்லாஹ் ஆழ் கடல் இருளுக்கு ஒப்பாக்குகின்றான். அல்லாஹ் அறிந்தவன்!
 “ நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும்,தெளிவுமுள்ள (திருக்குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
 அல்லாஹ் இதைக்கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகின்றான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.”   -அல் குர்ஆன்.5:15-17.

2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்

Nokia-Lumia-920-vs-Samsung-Galaxy-S-III
2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாக 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன, இக்காலப்பகுதியில் இலங்கையில்  0.57 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
சைபர் மீடியா ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனை நிறுவனமான பிரிமியர் IT எனும் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையை பொறுத்த மட்டில்  இந்த காலப்பகுதியில் நொகியா (Nokia) கையடக்க தொலைபேசிகள் அதிகளவு விற்பனையாகின, கையடக்க தொலைபேசிகள்  சந்தையில் 31.9% சந்தை வாய்ப்பை தன்னகத்தே கொண்டிருந்தது.
சம்சுங் (Samsung) கையடக்க தொலைபேசிகள் 17.4% உடன் இரண்டாமிடத்திலும், மைக்குரோமெகஸ் கையடக்க தொலைபேசிகள் 10.4% உடன் மூன்றாமிடத்திலும் காணப்பட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டில் சுமார் 22 கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் இலங்கைக்கு கையடக்க தொலைபேசிகளை ஏற்றுமதி செய்திருந்ததாகவும், ஸ்மார்ட் போன்களின் பாவனை மற்றும், அண்ட்ரொயிட் தொழில்நுட்பத்தில் அமைந்த கையடக்கதொலைபேசிகளின் பாவனை அதிகரித்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை கிறீன் பீல்ட் பூங்காவின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது

kmc

(ஹாசிப் யாஸீன்)
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில்நிர்மாணிக்கப்பட்டு வரும் கிறீன் பீல்ட் பூங்காவிற்கான வீதி அபிவிருத்தி வேலைகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்தார்.
கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கு முன்னால் செல்லும் குளத்தினை சுத்தப்படுத்தி அதனை மக்கள் பொழுது போக்கு இடமாக பயன்படுத்தக் கூடியவாறு இவ்வேலைத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது இவ்வீதி அபிவிருத்தி வேலைகளுக்கு தடையாகவிருந்த தனியார் கட்டிடங்கள் அகற்றப்பட்டதுடன் கிறீன் பீல்ட் பூங்காவின் அபிவிருத்தி வேலைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் குழுவினர் பார்வையிட்டனர்.
kalmunaihot3kalmunaihot2

அல்லாஹ் நாடினால் அப்துர் றஹ்மான் காத்தான்குடி மாநகர சபையின் முதலாவது மேயராக அமர்வார்!

hi-ar
அமையவுள்ள காத்தான்குடி மாநகர சபையில் அல்லாஹ் நாடினால் பொறியிலாளர் அப்துர் றஹ்மான் மாநகர மேயராக இருப்பார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அபிவிருத்தியும் சவால்களும் என்ற தலைப்பிலான பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா; பதவிகளை வழங்குபவனும் பதவிகளை பிடுங்கி எடுப்பவனும் அல்லாஹ்தான். எனக்கு இந்த பதவி அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் கிடைத்துள்ளது.
இதே போன்று பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அமையவுள்ள காத்தான்குடி மாநகர சபையில் மேயராக இருப்பார் அல்லாஹ் நாடினால் அது நடந்து விடும்.
கடந்த மாகாண சபை தேர்தலில் நான் பொறியியலாளர் அப்துர் றஹ்மானை வேட்டபாளராக நிறுத்தி அவரை மாகாண சபை உறுப்பினராக ஆக்குவதற்கு நாடினேன் ஆனால் அல்லாஹ் அதை விரும்பவில்லை.
பொறியியலாளர் சிப்லி பாறூக்கைத்தான் அல்லாஹ் விருமபியிருந்தான். பொறியியலாளர் சிப்லி ஒரு படித்தவர் மாத்திரமல்ல அவர் ஒரு தக்வாதாரியும் இறைவனுக்கு பயந்து கடமையாற்றுபவர்.
பொறியியலாளர் சிப்லி இந்த பதவிக்கு வருவதற்கு விரும்பவே இல்லை அல்லாஹ் விரும்பினான் அதனால் அவர் மாகாண சபை உறப்பினராக வந்து;ளளார்.
அல்லாஹ் நாடாமல் எதுவும் உலகத்தில் நடைபெறாது. காத்தான்குடியை மாநகர சபையாகவும், புதிய காத்தான்குடியை பிரதேச சபையாகவும் அமைக்க நடவடிக்கைகள் எடுத்துவருகின்றோம்.
அதில் அவ்வாறு காத்தான்குடி மாநகர சபையாக வருமாக இருந்தால் அல்லாஹ் நாடினால் அதன் மேயராக பொறியியலாளர் அப்துர் றஹ்மான் வரக் கூடும். அல்லாஹ் நாடினால் அதை யாரும் தடுக்க முடியாது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் அடிக்கடி எங்களை விவாதத்திற்கு அழைக்கின்றனர்.
விவாதிப்பது ஒரு முஸ்லிமின் பன்பல்ல பெருமானார் (ஸல்) அவர்கள் விவாதிப்பதை வெறுத்துள்ளார்கள். அதனால் உங்களுக்கு ஏதாவது சந்தேகமென்றால் அல்லது ஏதாவது திட்டத்தினை முன் வைக்க வேண்டுமென்றால் நாம் பேசுவோம். 3மாதங்களுக்கு ஒரு தடைவ பேசுவோம். பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அதை விடுத்து வீணான விமர்சனங்களை பொய்யான கட்டுக்கதைகளை முன் வைக்க வேண்டாம்.
அபிவிருத்திகளை தடை செய்யதீர்கள் அபிவிருத்திக்கான ஆலோசனைகளை முன்வையுங்கள்.
மீராபாலிகா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள சுரங்கப்பாதை ஒரு போக்கு வெள்ளத்தினால் பாதகிக்ப்படும் என்று கிண்டல் செய்தீர்கள். அல்லாஹ்வுடைய கிருபையினால் கடந்த வெள்ளத்தில் ஒரு பாதிப்பும் அதற்கு ஏற்படவில்லை.
இலங்கையின் இரண்டாவது சுரங்கப்பாதையான குருநாகலிலுள்ள சுரங்கப்பாதை கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. ஆனால் அல்லாஹ்வுடைய கிருபையினால் காத்தான்குடி சுரங்கப்பாதைக்கு எந்த பாதிப்பும் எற்படவில்லை.
எதற்கு எடுத்தாலும் விமர்சனம் ஊடகங்களில் அறிக்கை விடுகின்றீர்கள். இதைவிட்டு விட்டு ஆலோசனை கூறுங்கள் நல்ல திட்டங்களை முன் வையுங்கள்.
நீங்கள் என்மீது சுமத்தும் அத்தனை அபாண்டங்களுக்கும் அல்லாஹ்விடம் நாளை மஹ்ஸர் மைதானத்தில் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
நானும் மரணிப்பவன் நீங்களும் மரணிப்பவர்கள் அந்த இடத்தில் நிச்சயம் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்
நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன், வறுமை நிலையில் கல்வி கற்றவன், காத்தான்குடி சுக்ரியாஸ் பிடவைக்கடையில் நின்று கொண்டு அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு கல்வி கற்றவன்.
அப்படியான என்னை அல்லாஹ் இன்று இந்த நிலையில் வைத்துள்ளான். நாளை இன்னுமொரு நிலைக்கு ஆக்கலாம் அது இறைவனின் நாட்டம் எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.

இளைஞர்களே முன்வாருங்கள் திருமணம் செய்ய: அழைக்கிறார் முஹம்மது அஷ்ரப்

ashraff-
(எஸ்.அஷ்ரப்கான்)
வர்த்தகமும் வளங்களும் விருத்திபெற்று விளங்கும் கல்முனை மாநகரில் தன்னிறைவு கண்ட செல்வச் சிமான்கள் பலர் இருந்திட்ட போதிலும், வயது வந்த ஏழைக்குமர்களின் தொகையும், அவர்களை கரை சேர்க்க முடியாதா?என்ற ஏக்கத்தில் வாழும் ஏழைப் பெற்றோரின் தொகையும் அதிகரித்து வரும் நிலையில் இப்பிரதேச வள்ளல்கள் மனம் வைக்காததால் பிரஸ்தாப மக்களது அழுகுரல்  மௌன கீதமாய் எங்கும் ஒலிக்கிறது. இந்த அழுகுரல் வெளியுலகத்திற்கு கொண்டுவரப்படாமல் இருப்பது கண்டு மனவேதனை அடைகின்றேன்.
இவ்வாறு சமூக சிந்தனையோடு துணிவாக குரல்கொடுத்து வெளியுலகிற்கு தன்னை ஒரு சமூக சேவகனாக வெளிக்காட்டவும், பெருமையற்ற இறை திருப்தியையும், மறுமைப் பயனையும் மட்டுமே பிரதியுபகாரமாகக் கொண்டு ஏழைப்பெண்களின் திருமண விடயத்தில் தன்னாலான உதவிகளைச் செய்து, செயலாற்ற முன்வந்திருக்கும் கல்முனையைச் சேர்ந்த ஒருவர்தான் முஹம்மது அஷ்ரப் என்ற விசேட தேவையுடைய இளைஞனாகும்.
இவர் பற்றிய சுய விபரத்தை நாம் தருவதுடன், எமது சமூகத்தின் ஏனைய இளைஞர்கள் இவரை முன்மாதிரியாகக் கொண்டு செயலாற்ற முன்வர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
கல்முனையில் பிறந்த  முஹம்மது அஷ்ரப்.  இவர் விசேட தேவையுடையவராக இருக்கிறார். இவரது நற்குணங்களில் ஒன்று தொழில் செய்ய முடியாது விட்டாலும், யாரிடமும் யாசகம் கேட்காமல் கல்முனை வர்த்தக பிரதேசத்தில் போக்குவரத்து பயணிகளிடம் உணவுப்பண்டங்களை விற்பனை செய்து அதனுாடாக தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
இவர் திருமணம் முடித்தவர். தனது மனைவியிடம் எதனையும் எதிர்பார்க்காமல் தன் தாயினுடைய குடிசை வீட்டில் மனைவியை வைத்து இஸ்லாம் சொன்ன முன்மாதிரியான வாழ்க்கை வாழ்வது அனைவரையும் வியக்க வைக்கிறது.
ஏழைப் பெண்களின் திருமணம் செய்து வைப்பதற்காக  மணமகனாக இவர் நல்லுள்ளம் கொண்ட இளைஞர்களை தேடுகிறார்.
ashraff-
இவரை இது விடயமாக நாம் சிறிது நேர்கண்டோம். அவர் பின்வருமாறு கூறுகின்றார்;
ஏழைகளை இன்முகத்துடன் பொறுப்பேற்று திருமணம் செய்து கொள்வதில் எம் சமூகத்து இளைஞர்கள் அருகியே காணப்படுகின்றனர். ஏழையாகப் பிறந்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழைப் பெண்களையே திருமணமும் முடித்து எமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த முஹம்மது நபியின் (ஸல்) அவர்களின் வழிமுறையை நாம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
கட்டிய சிறு வீட்டை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பெற்றோர்கள் திணறுவதையும், இதனால் வயதேறிச் செல்லும் முஸ்லிம் யுவதிகளின் கண்ணீரும் கவலையும் எமது பிரதேசத்தை ஆட்கொண்டிருப்பதால் நோய்கள், நிம்மதியின்மை, பொருளாதார நெருக்கடி என்ற பல்வேறு கோணங்களில் எமக்கு சோதனைகள் வந்த வருகின்றது.
இதனை மறந்த நிலையில் வெள்ளைப் பெண்களையும் வேன், கார், பங்களாவையும் தேடி அலையும் இளைஞர் பட்டாளம் நாளைய தீர்ப்பு நாளை நினைத்துப்பார்க்க வேண்டும். கழிப்பறை இருக்கும் இடம்தெரியாத அளவு பிரமாண்டமான இல்லத்தை இலவசமாகப் பெற்று சொகுசு வாழ்ககை நடாத்தும் சகோதரர்கள் கப்றின் நெருக்கம் நிறைந்த காரிருளில் என்ன செய்யப்போகின்றார்கள்.
ஏழைகளோடு பேசத்தயங்கும் உங்களுடன் நாளை கியாமத் நாளில் அல்லாஹ் பேசமாட்டான் என்பததைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த முயற்சியில் என்னுடன் இணைந்து சமூகத்திற்கு சேவையாற்ற என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு
முஹம்மது அஷ்ரப்
76-4, சின்னத்தம்பி வீதி
கல்முனை-03

கண்கள் இன்றி பார்க்கும் அபூர்வ சிறுவன்.!

timthumb
தினம் தினம் உலகில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற விசித்திர பிறவிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கும் நபர் இவ்வுலகை விட்டு பிரிந்த ஒருவர். ஆனால் உயிருடன் இருக்கும் போது இவ்வுலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர்.
இவர் பற்றிய செய்திக்குறிப்பு கீழ் வருமாறு:- வென் அன்டர் வூட் எனப்படும் அமெரிக்காவைச்சேர்ந்த இளைஞன் இயற்கைக்கு மாறான அதீத மாற்றத்தை கொண்டிருந்தான்.
சிறுவயதில் இரு கண்களையும் இழந்த இச்சிறுவன் கண்கள் உள்ள மனிதன் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் இலகுவாக செய்யும் வல்லமையும் திறமையும் படைத்தவன் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும் கடந்த 1992 ம் ஆண்டு பிறந்த இச்சிறுவன் பிற்பாடு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு 1999 இல் இறந்தான்.
அழகிய நண்பர்கள் அழகான குடும்பத்துடன் அதீத திறமை படைத்தவனாக உலா வந்த இச்சிறுவனின் வாழ்கை வரலாறு இவனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இயக்கம்

aaaaaaaaaaaa
இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (ஹி.661728, கி.பி. 12631327) இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பேராற்றலும் செயற்திறனும்  பின் விளைவுச் செறிவும்   பெற்ற மனிதர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றார்.
இவர் பிறந்த காலம் இஸ்லாமிய உலகைப் பொறுத்த வரை தொயின்பியின் வார்த்தையில் குறிப்பிடுவதாயின் அரசுச் சமுதாயம் சின்னாபின்னப்பட்டிருந்த ஒரு காலமாகும்.
இமாம் இப்னு தைமிய்யாவின் காலம் சில விடயங்களில் இமாம் அஹ்மதின் காலத்தை ஒத்திருந்தது. ஆயினும், இமாம் அஹ்மதின் காலத்தைப் போலன்றி இவர் காலத்தில் அறிவியல் இயக்கம் தேக்க நிலையை அடைந்திருந்தது.

பிக்ஹுத் துறையானது மாசடைந்து அதன் தூய்மையை இழந்திருந்தது. முன்னைய இமாம்களதும் அவர்களின் மாணவர்களினதும் ஆக்கங்களை மனனமிட்டுப் பதிய வைத்துக் கொள்வதே சமூக முதன்மையைப் பெறுவதற்குரிய ஒரு தகைமையாகக் கருதப்பட்டது. அத்துடன் புதிய பிரச்சினைகளின் தீர்வுக்கு சட்ட மூலாதாரங்களை ஆதாரங்களாகக் குறித்துக் காட்டும் மரபு நீங்கி இமாம்களின் நூல்களையும் பத்வாக்களையும் ஆதாரமாகக் காட்டும் புதிய மரபு ஒன்றும் உருவாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து குறித்த ஓர் இமாமை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனைப் பாங்கும் வளர்ந்தது. இதன்வழி, குறித்த நான்கு இமாம்களுக்குப் பின் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டு விட்டது என்ற கருத்தோட்டமும் வலுப் பெற்றது. சுய சிந்தனாவழி, இஜ்திஹாத் என்பன புறக்கணிக்கப்பட்டு, மத்ஹபுகளை, அதன் இமாம்களை ஆராய்வின்றிப் பின்பற்றும் பண்பு வளர்ச்சி கண்டது. இப்பண்பே தக்லீத் எனப்படுகின்றது.

அறிவியல் ரீதியாகவும் இருவரது காலமும் வேறுபட்டு அமைந்தன. இமாம் அஹ்மதின் காலத்திலோ அப்பாஸிய கிலாபத் சில கலீபாக்கள் முஃதஸிலாக் கொள்கைச் சார்புடையோராக இருந்தபோதிலும் பலமிக்கதாகக் காணப்பட்டது. ஆனால், இப்னு தைமிய்யாவின் காலத்தில் இந்நிலை இருக்கவில்லை. அப்பாஸிய கிலாபத்தின் ஸ்திரநிலை குன்றியிருந்தது. அவர்களிடமிருந்த ஆட்சி, அதிகாரம், பொருளாதார வளம் என்பவற்றை முஸ்லிம் சிற்றரசுகள் அபகரித்திருந்தன.

ஆன்மிகத் தலைவர் என்ற நிலையில் மட்டுமே கலீபாவை சிற்றரசர்கள் அங்கீகரித்திருந்தனர். முஸ்லிம் ஸ்பெய்ன் அமீர்கள் அப்பாஸிய கலீபாவை ஆன்மிகத் தலைவராகவும் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்கள் தம் சுயமான ஆட்சியைக் கொண்டு நடத்தினர். இவ்வாறு அப்பாஸிய கிலாபத் ஐக்கியம் குறைந்து பலமிழந்து இருந்தபோது மேற்கேயிருந்து மேற்கொள்ளப்பட்ட சிலுவைப் படையெடுப்பினாலும் கிழக்கேயிருந்து வந்த மங்கோலியப் படையெடுப்பினாலும் இஸ்லாமிய அரசு மேலும் பலவீனமுற்றது.

இமாம் அஹ்மதின் காலம் முதல் முஸ்லிம் சமூகத்தினுள் செல்வாக்குச் செலுத்திய கிரேக்க, பாரசீக சிந்தனைகள் இமாம் இப்னு தைமிய்யாவின் காலத்தில் மேலும் வலுவடைந்தன. அவற்றினால் தோன்றிய சிந்தனா ரீதியிலான முரண்பாடுகள் மேலும் வளர்ச்சியடைந்தன. அரசியல் ரிதியாகத் தோன்றிய ஷீஆக்கள் இக்காலத்தில் சிந்தனா ரீதியான இயக்கமாக வளர்ச்சி கண்டனர்.

சுருக்கமாகச் சொல்வதாயின், இப்னு தைமிய்யாவின் காலம் என்பது முஸ்லிம் சமூகத்தின் அகீதா உயிரோட்டம் இழந்தும் நடத்தைகளில் ஊழல் மலிந்தும் தீமைகள் பரவியும் சிந்தனை தேக்கமடைந்தும் இஜ்திஹாத் செயல் இழந்தும் மக்கள் கருத்து முரண்பட்டு பல குழுக்களாகப் பிளவுபட்டும் இருந்த ஒரு காலமாகும்.

இப்பின்னணியில் தன் காலத்து சவால்களை சரியாக இனங்கண்ட இமாம் இப்னு தைமிய்யா, அவற்றுக்கு தூய இஸ்லாமிய வழிமுறையில் நின்று முகங்கொடுத்ததைக் காண முடிகின்றது. தன் காலத்து அறிவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இஜ்திஹாதையும் அரசியற் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ஜிஹாதையும் இவர் முன்வைத்தார். அரசியல் மட்டத்தில் ஜிஹாதும் அறிவு மட்டத்தில் இஜ்திஹாதும் முஸ்லிம் சமூக புனர்நிர்மாணத்திற்கான அவரது இயக்கத்தின் தூண்டற் சக்திகளாக அமைந்தன.

இமாம் இப்னு தைமிய்யாவும் இஜ்திஹாதும்


ஆரம்ப தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழியில் இமாம் அஹ்மதின் முறைமையில் நின்று இஜ்திஹாதின் அவசியத்தை வலியுறுத்திய இமாம் இப்னு தைமிய்யா, தூய இஸ்லாமிய அடிப்படைகளை வகுத்தும் எதிர்வாத சிந்தனையை விளக்கியும் சமகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்தும் செயற்பட்டதை அவதானிக்க முடிகின்றது. இவரது ஷமஜ்முஅதுல் பதாவா அல்குப்ரா| எனும் சட்டத் தீர்ப்புகளின் தொகுப்பை நோக்குகின்றபோது அன்றைய சன்மார்க்க வாழ்வியல் பிரச்சினைகளுக்கு அவர் தூய இஸ்லாமிய வழிமுறையில் இஜ்திஹாதின் துணையுடன் எவ்வாறு தீர்வுகளை முன்வைத்தார் என்பதனை அறிய முடியும்.

இஜ்திஹாதின் மூலம் தூய இஸ்லாமிய சிந்தனைக்கு புத்துயிர் அளித்தல் வேண்டும். போலிகளற்ற, இஸ்லாத்திற்கு அந்நியமான எத்தகைய இடைச் செருகலும் அற்ற தூய இஸ்லாமிய அடிப்படைகளில் மீண்டும் இஸ்லாமிய சமூகம் கட்டியெழுப்பப்படல் வேண்டும் என்பது இமாம் இப்னு தைமிய்யாவின் இலட்சியமாக இருந்தது.

சமூகப் புனரமைப்பிற்கு இவரது இரண்டாம் பெரும் ஆயுதமாக ஜிஹாத் அமைந்தது. தாத்தாரிய மன்னர் காஸான் ஷாம் பிரதேசத்தைத் தாக்கியபோது அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி கைதிகளை விடுவிக்க இமாம் இப்னு தைமிய்யா ஆவன செய்தார். இவ்வாறு சமாதான வழியில் எதிரிகளை அணுகி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்தார். எனினும், தாத்தாரியர் டமஸ்கஸ் கோட்டையை தமக்குக் கையளிக்குமாறு வேண்டியபோது அவர்களின் அநீதிகளையும் அராஜகங்களையும் கண்டு இனியும் சமாதான வழிமுறை வெற்றியளிக்காது என்பதை உணர்ந்த இப்னு தைமிய்யா, எந்நிலையிலும் கோட்டை கையளிக்கப்படலாகாது என்பதில் உறுதியாக நின்றார். தானே ஒவ்வோர் இரவும் கோட்டை மதிலைச் சுற்றி வந்ததுடன் மக்களுக்கு அல்குர்ஆனின் ஜிஹாத் பற்றிய வசனங்களை ஓதிக் காண்பித்து ஸ்திரமாக நின்று போராட்டத்தைத் தொடர அவர்களைத் தூண்டினார்.

மறுபக்கத்தில் தாத்தாரியர்களின் தொடர்ந்தேர்ச்சியான தாக்குதலின் காரணமாக இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நாடு பலவீனமுற்றிருந்த நிலையில் ஆட்சியாளர்கள் தீமைகளை ஒழிப்பதிலும் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதிலும் பராமுகமாக இருப்பதைக் கண்ட இமாம் இப்னு தைமிய்யா, தன்னோடு இருந்தவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று நன்மையை நிறைவேற்றும் நோக்குடன் செயற்படலானார். இதனால் மதுபான விற்பனை நிலையங்கள் தகர்க்கப்பட்டன. குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் சிந்தனா ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் சதிகளில் ஈடுபட்ட பாதினிகள், இஸ்மாஈலிகள் போன்றNhரை முறியடிக்கும் பணியிலும் இமாமவர்கள் முனைப்புடன் செயற்பட்டார்.

அறியாமை, மூடக் கொள்கைகள், நூதன அனுஷ்டானங்கள், இணைவைத்தற் செயற்பாடுகள் முதலானவற்றை எதிர்ப்பதில் இமாம் இப்னு தைமிய்யாவுக்கு இணையானவர் எவரையும் வரலாற்றில் காண்பது அரிது.

சுருக்கமாகக் கூறுவதாயின், இமாம் இப்னு தைமிய்யாவின் போராட்டம் தூய இஸ்லாமியக் கோட்பாட்டிற்கூடாக இஸ்லாத்திற்கு அந்நியமான எத்தகைய இடைச் செருகலுமற்ற தூய இஸ்லாமிய அடிப்படைகளில் மீண்டும் இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு முயற்சியாகும்.

இமாம் இப்னு தைமிய்யாவின் நிலைப்பாடுகள்


தூய இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு புத்துயிர் அளிக்கும் நோக்குடன் பிற, அந்நிய கொள்கைகளிலிருந்து பெறப்பட்ட விதிகளைப் புறக்கணித்து அல்குர்ஆனிய அளவுகோளை  மேம்படுத்தும் முகமாக இமாம் இப்னு தைமிய்யா முப்பெரும் விதிகளை வகுத்து முன்வைத்தார். அவையாவன:

• அல்அக்ல் அஸ்ஸரஹ் எனும் சீரான பகுத்தறிவு, அந்நக்ல் அஸ்ஸஹீஹ் எனும் நம்பகமான (குர்ஆன், சுன்னா ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்பட்ட) சட்ட வசனத்துடன் முரண்படுவதற்கில்லை.

• கிரேக்க தத்துவத்திலிருந்து பெறப்பட்ட சொற்பிரயோகங்களையும் எண்ணக்கருக்களையும் முஸ்லிம் தத்துவவியலாளர்கள் பயன்படுத்துவது ஆட்சேபனைக்குரியதாகும்.

• அரிஸ்டோட்டிலின் அளவையியல் கோட்பாடுகள் பிழையானவையும் மறுக்கத்தக்கவையும் அவசியமற்றதுமாகும்.

இம்மூன்று விதிகளும் கீழே சற்று விரிவாக விளக்கப்படுகின்றன.

முதல் விதிக்கூடாக இமாம் இப்னு தைமிய்யா சன்மார்க்கத்தின் மூலாதாரங்களிலிருந்து பெறப்பட்ட நம்பகமான சட்ட வசனங்கள், சீரான பகுத்தறிவு உறுதி செய்யும் தெளிவான அறிவுடன் முரண்பட மாட்டாது என்ற கருத்தை முன்வைத்தார். அவ்வாறு முரண்பாடு ஏதும் ஏற்பட்டால் இரண்டில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏதோ தவறிருக்கின்றது என்றே கொள்ள வேண்டும் என்றும் அவர் கருதினார்.

முதகல்லிம்களும் பிற தத்துவவியலாளர்களும் பயன்படுத்தி வந்த கிரேக்க கலைச் சொற்பிரயோகங்களை நிராகரிப்பது இவரது மற்றுமொரு நிலைப்பாடாகும். அவசியமான கலைச் சொற்கள் அனைத்தும் அல்குர்ஆனிலிருந்தே பெறப்படல் வேண்டும். அந்நிய கொள்கை, கோட்பாடுகளிலிருந்து வழிகாட்டல்களைப் பெறுவது முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். ஒரு மொழியிலிருந்து மற்றnhரு மொழிக்கு ஒரு பிரயோகத்தைப் பெயர்க்கும்போது மொழிகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகளின் காரணமாக நுணுக்கமான விடயங்களில் கருத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதே இமாமவர்களின் இந்நிலைப்பாட்டிற்கான நியாயமாகும்.

அரிஸ்டோட்டிலின் அளவையியல் கோட்பாடுகளை நிராகரித்தமை இவரது இன்னுமொரு நிலைப்பாடாகும். உலகில் நீண்ட காலம் எல்லோராலும் ஏற்று நம்பப்பட்டு வந்த அரிஸ்டோட்டிலிய அளவையியலை விமர்சித்த இவர், அதற்கு மாற்றீடாக அல்குர்ஆன், அஸ்ஸுன்னா இரண்டினதும் ஒளியில் ஒரு புதுத் தர்க்கவியலை முன்வைப்பதில் வெற்றி கண்டார்.

இமாம் இப்னு தைமியா வாழ்க்கைச் சுருக்கம்


தகியுத்தீன் அஹ்மத் இப்னு அப்தில் ஹலீம் இப்னு அப்திஸ் ஸலாம் என்பது இவரது முழுப் பெயராகும். இவர் ஹிஜ்ரி 661இல் (கி.பி. 1263) டமஸ்கஸுக்கு அருகிலுள்ள ஹர்ரான் எனும் ஊரில் பிறந்தார். மன்னன் ஹூலாகுவின் மங்கோலியப் படை பக்தாதைத் தாக்கி சூறையாடி சுமார் ஐந்து வருடங்களில் இப்னு தைமியாவின் பிறப்பு இடம்பெற்றது. தாத்தாரிய மங்கோலியரின் அச்சுறுத்தல் காரணமாக இவரது இளமைப் பருவத்திலேயே இவரது தந்தை இவரை டமஸ்கஸுக்கு அழைத்து வந்தார். இங்கு ஹதீஸ், பிக்ஹு முதலான கலைகளை ஆழமாகக் கற்றார். குறிப்பாக, இமாம் அஹ்மதின் சிந்தனைகளை ஆர்வத்துடன் பயின்றார். பதினேழு வயது முதலே கல்விப் போதனை, சட்டத் தீர்ப்பு வழங்கல், நூல் எழுதுதல் முதலானவற்றில் ஈடுபடலானார்.

ஹிஜ்ரி 1282இல் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து ஹன்பலி மத்ஹப் பிக்ஹுத் துறை இமாமாகப் பதவியேற்றார். முப்பது வயதில் ஷமுஹ்யுஸ்ஸுன்னா| (ஸுன்னாவுக்குப் புத்துயிரளிப்பவர்), ஷஇமாமுல் முஜ்தஹிதீன்| (முஜ்தஹிதிகளின் தலைவர்) முதலான பட்டங்களைப் பெற்றார்.

தாத்தாரியர்களின் தாக்குதல்களுக்கு முன்னால் இஸ்லாமிய அரசின் பலவீனத்தைக் கண்டு மனம் வெதும்பிய இமாம் இப்னு தைமிய்யா, மக்களை ஜிஹாதுக்காக அணிதிரட்டுவதற்காக கெய்ரோவுக்குச் சென்றார்.

மறுபக்கம் இவரது பல சன்மார்க்க நிலைப்பாடுகள் அன்றைய உலமாக்களின் அங்கீகாரத்தைப் பெறத் தவறின. இதனால் இவருக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்ந்து கருத்து மோதல்கள் நிலவின. குறிப்பாக, ஸூபிகளுடன் இவர் கடுமையாக முரண்பட்டார். இவரது இத்தகைய நிலைப்பாடுகள் காரணமாக டமஸ்கஸ், கெய்ரோ, அலெக்ஸாந்திரியா உட்பட மற்றும் பல இடங்களில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்னு தைமிய்யா ஒரு பன்னூல் ஆசிரியர், சிறையில் இருந்த காலத்திலும் இவர் எழுதினார். பேனாவும் மையும் இவருக்கு வழங்குவது தடை செய்யப்பட்டபோது கரித் துண்டுகளைப் பயன்படுத்தி எழுதினார்.

இவர் எழுதிய நூல்கள் 300 பாகங்களைக் கொண்டிருக்கும் என கைருத்தீன் அஸ்ஸர்காவி குறிப்பிடுகின்றார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவை:

01. மின்ஹாஜுஸ் ஸுன்னா
02. அத்தவஸ்ஸுல் வல்வஸீலா
03. அஸ்ஸியாஸது ஷரஇய்யது பீ ஸிலாஹிர் ராஈ வர் ரஇய்யா
04. அர்ரத்து அலல் மின்தகைன்
05. அல்புர்கான் பைன அவ்லியாஇர் ரஹ்மான் வஅவ்லியாஇஷ் ஷைத்தான்
06. உபூதிய்யா
07. இவரது சட்டத் தீர்ப்புக்கள், சிற்றேடுகள் தொகுக்கப்பட்டு ஷமஜ்மூஅது ரஸாஇல் வல்மஸாஇல்| எனும் பெயரில் பல பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
இறுதியாக நபிமார்கள், ஸாலிஹீன்களின் கப்றுகளைத் தரிசிக்கும் நோக்கத்துடன் புனிதப் பயணம் மேற்கொள்வது கூடாது என்று இவர் தனது கைப்பட வழங்கிய தீர்ப்பையடுத்து அன்றைய உலமாக்கள் கிளர்ந்து எழவே ஹிஜ்ரி 726 (கி.பி.1327)ஆம் ஆண்டு சிறையிலேயே மரணமானார், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவரது ஜனாஸாவில் முழு டமஸ்கஸ் வாசிகளும் கலந்து கொண்டனர். ஆச்சரியம் என்னவென்றால், இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் ஜனாஸா ஸூபிய்யாக்களின் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகும். மேலும் இமாம் இப்னு தைமிய்யா இறுதிவரை திருமணம் முடிக்காமலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.