இரண்டு மாத குழந்தைகளுக்கு அம்மா தன்னை எப்போது தூக்கிக் கொஞ்சுவார் என்பது நன்றாக தெரியும் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வாசு ரெட்டி, தனது ஆய்வின் முடிவில், பிறந்து இரண்டு முதல் நான்கு மாதங்களே ஆன இளம் சிறார்களுக்கு தன்னைச் சுற்றி நடப்பவைகளாஇப் புரிந்து கொள்ள இயலும் எனத் தெரிவித்துள்ளார்.
அதுவும் அம்மா அருகில் வருகிறார் என்றால், தன்னைத் தூக்கி கொஞ்சுவதற்கோ அல்லது உணவு கொடுப்பதற்கோ தான் வருகிறார் என்பது அந்த குட்டிகளுக்கு நன்றாகவே புரியுமாம். எனவே, அதற்குத் தக்கவாறு உடலை விரைப்பாக்கி, தோள்பட்டையைத் தூக்கி அம்மா தூக்குவதற்கு வசதியாக ரெடியாகி விடுமாம் குழந்தை.
No comments:
Post a Comment