மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பின் ஊடாக நீர் வந்தவண்ணமுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்ததாலேயே குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
பூரண சந்திரனின் தாக்கத்தினால் நீர்மட்டம் அதிகரித்திருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலைமை தொடர்பாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குறித்த பிரதேசத்திற்கு புவி ஆராய்ச்சியாளர் ஒருவர் அனுப்பப்ப்ட்டுள்ளதாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபையின் தலைவர் டாக்டர் என்.பி. விஜேயானந்த தெரிவித்தார்.
குறித்த சம்பவம் விரும்பத்தகாத அனர்த்தம் எனவும், அது எதனையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள பாரிய பூமியதிர்வுக்கு பின்னர் குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளமையால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு டாக்டர் என்.பி. விஜேயானந்த மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment