பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 58 வது வருடாந்த மாநாடு இன்று 07 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகிறது.
செப்டம்பர் 15 ஆம் திகதி வரை இம் மாநாடு நடைபெறும். பிரதான மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை தாமரை தடாக அரங்கில் நடைபெறும்.
சபாநாயகர் தலைமையிலான ஆலோச னைக் குழுவும், பிரதிச் சபாநாயகர் தலை மையிலான ஏற்பாட்டுக் குழுவும் மா நாட்டுக்கான ஒழுங்குகளை மேற் கொண்டுள்ளன.
மாநாட்டின் பல்வேறு அம்சங்களை கவனிப்பதற்காக பதினாறு உப குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
‘எதிர் காலத்துக்கு பொருத்தமான பொதுநலவாய அமைப்பை உறுதிப்படு த்துதல்’ என்பதே மாநாட்டின் தொனிப் பொருளாகும். பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கிய செயலமர்வுகள் 12 ஆம் திகதி நடைபெறும். இதில் பேராளர்கள் பங்கு பற்றுவர்.
‘சுகாதாரம், கல்வி, தொழில் பயிற்சி ஆகியவற்றுக்கு எதிர்கால தலைமுறையி னரை வலுவூட்டுதல்’ என்ற தலைப்பில் செயலமர்வு நடைபெறும். பல்வேறு தலைப்புக்களில் கருத்துப் பரிமாறல்களில் பேராளர்கள் பங்குகொள்வர்.
No comments:
Post a Comment