Search This Blog

Pages

Wednesday, February 16, 2011

Removing directories

Removing directories

In concept removing directories is somewhat similar to removing files--you want the directory to not exist in your current working directories, but you also want to be able to retrieve old releases in which the directory existed.

The way that you remove a directory is to remove all the files in it. You don"t remove the directory itself; there is no way to do that. Instead you specify the "-P" option to cvs update, cvs checkout, or cvs export, which will cause CVS to remove empty directories from working directories. Probably the best way to do this is to always specify "-P"; if you want an empty directory then put a dummy file (for example ".keepme") in it to prevent "-P" from removing it.

Note that "-P" is implied by the "-r" or "-D" options of checkout and export. This way CVS will be able to correctly create the directory or not depending on whether the particular version you are checking out contains any files in that directory.


courtesy: a site

cvs importing new module(project)

Syntax:

cvs import -m "module description" modulename vendortag releasetag

Suppose one wants to import a folder called "project1". The following steps are to be followed.

1. login to cvs
2. get into project1 directory like cd c:/project1, cd /home/hi/project1
3. cvs import -m "This is project 1" project1 ven0 rel0

Now the module will be imported.
One can test the imported module using cvs ls command.

ஒரு விரலுடன் வாழும் மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு

சீனாவை சேர்ந்த விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள், மைக்கேல் பிட்மன் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சிறிய ஒரு விரல் டைனோசரை அடையாளம் கண்டுள்ளனர்.
மிகவும் அரிய வகையான இந்த புதிய உயிரினம் உலகிலேயே மிக கொடிய, ஒரு விரல் கொண்ட ஒரே உயிரினமான டி ரெக்ஸ் டைனோசர் இனத்தை சார்ந்ததாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலானது: புதிய டைனோசருக்கு ஒரு விரல் மட்டுமே உள்ளது. இது தெரோபாட் இனத்தை சேர்ந்த லின்ஹெனிகஸ் மோனோடாகிலஸ் வகை உயிரினம். ஒரு மீட்டர் உயரத்துடன் காணப்படும்.
இது அதிக பட்சமாக பச்சைக்கிளியின் எடையளவு உள்ளது. புலால் உண்ணும் வகையை சேர்ந்த பண்டைய தெரோபாட்களின் பரிணாம வளர்ச்சிதான் தற்போது பறவையாக உள்ளது. இவற்றின் ஒவ்வொரு கைகளிலும் தலா 3 விரல்கள் இருக்கும்.
தற்போது கண்டறியப்பட்டுள்ள உயிரினத்துக்கு ஒரே ஒரு விரல் மட்டும் பெரிய அளவில் உள்ளது. அதிலுள்ள நகத்தால் பூச்சிகளின் கூடுகளை கிளறி சிறிய புழுக்களை உணவாகக் உட்கொள்ளும். மிகக் குறைந்த உயரத்துக்கு பறக்கும் தன்மை இதற்கு இருந்திருக்க வேண்டும்.
பறக்க இயலாத பண்டைய தெரோபாட்கள் 5 விரல்களை உடையவை. கால மாற்றத்தில் இதிலும் மாற்றம் ஏற்பட்டு தற்போது இந்த வகைகளுக்கு 3 விரல்கள் உள்ளன. இத்தகைய உயிரினங்கள் பெரும்பாலும் அழிந்து விட்டதாகவே கருதப்பட்டு வரும் நிலையில், புதிய டைனோசர் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தொடர் ஆராய்ச்சியில் மேலும் பல அரிய தகவல்கள் தெரியவரும்.

கால்களுடன் வாழ்ந்த பாம்புகள் கண்டுபிடிப்பு

கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு ஒன்று லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாம்புகள் என்பன ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது. இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளது. பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். சுமார் 19 இஞ்ச் நீளம் உள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் 1 இஞ்ச் அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன.
அந்த எலும்புகள் 1/2 இஞ்ச் அளவில் வளர்ந்திருந்தன. இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முதன் முறையாக புதனுக்கு விண்கலம்

கடந்த 2004 ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய "மெசஞ்சர்"  என்ற விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு, புதன் கிரகத்தில் அடுத்த மாதம் தரையிறங்க உள்ளது.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதன் கோள் பற்றிய ஆராய்ச்சிக்காக "மெரைனர்10" என்ற விண்கலத்தை நாசா கடந்த 1973 ம் ஆண்டு அனுப்பியது.
அதன் பிறகு, பல ஆண்டு இடைவெளிக்கு பின் கடந்த 2004 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி "மெசஞ்சர்" என்ற விண்கலத்தை அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து மெசஞ்சர் விண்கலத்தை சுமந்துகொண்டு டெல்டா 2 ராக்கெட் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி தற்போது புதனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில் பாயும் இந்த ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு, தற்போது புதன் கிரகத்தை நெருங்கியிருக்கிறது.
சூரியனுக்கு ரொம்ப நெருக்கமான கிரகம் என்பதால் வெயில் அதிகம். பூமியில் இருக்கும் சூரிய வெப்பத்தைவிட 11 மடங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதிக வெப்பத்தையும் தாங்கும் விதத்தில் வெளிப்புற பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக மெசஞ்சர் திட்ட விஞ்ஞானி லூயிஸ் பிராக்டர் தெரிவித்தார்.

புதனின் மண்தன்மை, வெப்பம், சுற்றுப்பகுதி, வானிலை உள்பட சகல அம்சங்களையும் ஆராய்வதற்கு ஏற்ப அதிநவீன சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள், வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவிகள், நவீன கம்ப்யூட்டர்கள், கேமராக்கள் ஆகியவை மெசஞ்சர் விண்கலத்தில் உள்ளன.
6 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வகையில் புதனின் வட்டப்பாதைக்குள் மெசஞ்சர் அடுத்த மாதம் 17 ம் திகதி நுழைய உள்ளது. இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

உங்கள் டெஸ்க்டாப் வால்பேப்பரே உங்களை பற்றி சொல்லும்: புதிய வால்பேப்பர் சேவை

உங்கள் டெஸ்க்டாப் வால்பேப்பரே உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட்(WallCast)  சேவையைப் பயன்படுத்தலாம்.
வால்காஸ்ட்(WallCast) என்பது மிகவும் எளிதான மற்றும் புதுமையான சேவை. நாம் அனைவரும் விரும்பும் ஒன்று நமது கம்ப்யூட்டர் திரை வெறுமையாக இல்லாமால் கண்ணுக்கு இனிய வகையில் இருக்க வேண்டும் என்பதே. இதற்காக பல அழகிய காட்சிகளை கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் வ‌கையில் வால்பேப்பராக பயன்படுத்துகிறோம் அல்லது நம்மிடம் உள்ள புகைப்படத்தை அமைத்து கொள்கிறோம்.
வால்காஸ்ட் வழங்கும் சேவை என்னவென்றால், இதில் உறுப்பினராகி உங்களிடம் உள்ள புகைப்படங்களை சம்ர்ப்பித்தீர்கள் என்றால் வால்காஸ்ட் அவற்றை அழகான வால்பேப்பராக மாற்றி  தருகிறது. அதன் பிறகு உங்கள் கம்ப்யூட்ட்ரை பார்த்தால் வரிசையாக புகைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இதில் புதிய படங்களை பதிவேற்றும் போது உடனே அவற்றை வால்பேப்பராக மாற்றி விடுகிறது. எனவே கம்ப்யூட்டரின் திரை எப்போதுமே புதிப்பிக்கப்பட்டதாக இருக்கும்.
புகைப்படங்களை பெரிதாக்குவதோ, டெலிட் செய்வதோ சுலபம். அதே போல் உங்கள் நண்பர்கள் அனுப்பி வைக்கும் படங்களையும் இடம் பெற வைக்கலாம். உங்களுக்கான பக்கம் மை வால்பேப்பராக உருவாக்கி தரப்படும். அதன் மூலம் உங்கள் ப‌டங்களை விருப்பம் போல நிர்வகித்து கொள்ளலாம்.
படங்களை முழுவதுமாக பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்கள் பார்வைக்கு என்று சுருக்கியும் கொள்ளலாம். ஐபோன் போன்றவற்றில் இருந்து படம் எடுத்த கையோடு படங்களை பதிவேற்றும் வசதியும் உண்டு. எமெயில் மூலமும் படங்களை இணைக்கலாம்.
பேஸ்புக்கில் புகைப்படங்களை நண்பர்கள் பார்க்க பகிர்ந்து கொள்வது போல டெஸ்க்டாப் மூலமே படங்களை பகிர்ந்து கொள்ள வால்காஸ்ட் வழி செய்கிற‌து.
உங்கள் வால்பேப்பருக்கு உயிர் கொடுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து காட்டுகிறது.
இணையதள முகவரி

எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?

உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் இதுவரை பதில் கொடுத்தது இல்லை.
இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை பார்க்கலாம். பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம், அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம்.
ஆனால் நாள் ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ் ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம்.
ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது. எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.
பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.

90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
இருந்த போதிலும் நெருப்பு நரி(பயர்பாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூமியைத் தாக்க காத்திருக்கும் சிறிய கோள்

"அப்போஃபிஸ்" என்ற சிறிய கோளானது பூமியைத் தாக்க இருப்பதாக ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை கண்டறிந்துள்ளனர்.
இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37,000 முதல் 38,000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும், 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவித்தார்.
சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமம் எனவும்  நாசா தெரிவித்துள்ளது.
எனினும் இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது: ஆராய்சித் தகவல்

உலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படுவது சீன பெருஞ்சுவர்.
நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில்(கி.மு. 220-206) கட்டப்பட்டது.
இதன் சில பகுதிகள் மட்டுமே தற்போது சுவராக நீடிக்கிறது. அதன் பிறகு   கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு மன்னர்களின் காலக் கட்டத்தில் கட்டப்பட்டது. இடியும் நிலையில் இருக்கும் பகுதிகளும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு கிழக்கே ஹெபேய் மாகாணம் ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வரையில் பிரதான சுவர், கிளைச் சுவர் என சுமார் 8,850 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்டமாய் நீள்கிறது. மொத்த சுவரும் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. ஓக் மரத்தையும் கல் போல பயன்படுத்தி சுவர் கட்டியிருப்பது தொல்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி லயோனிங் கலாசார நினைவுச் சின்னங்கள் அமைப்பு மற்றும் மேப்பிங் துறை அதிகாரிகள் கூறியதாவது: மரப் பெருஞ்சுவர் பற்றி சீன வரலாறுகளில் கூறப்பட்டுள்ளன. அது உண்மைதான் என தற்போது தெரியவந்துள்ளது.
சீனாவின் வடகிழக்கில் லயோனிங் மாகாணத்தில் டாண்டோங் மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் ஓக் மரத்தை பயன்படுத்தி மிங் ஆட்சிக் காலத்தில்(கி.பி. 1368 – 1644) பெருஞ்சுவர் கட்டப்பட்டது. பின்னர் மரம் மக்கிப்போன பிறகு, அந்த இடங்களில் கற்களைக் கொண்டு சுவர் சீரமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.