Search This Blog

Pages

Wednesday, February 16, 2011

முதன் முறையாக புதனுக்கு விண்கலம்

கடந்த 2004 ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய "மெசஞ்சர்"  என்ற விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு, புதன் கிரகத்தில் அடுத்த மாதம் தரையிறங்க உள்ளது.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதன் கோள் பற்றிய ஆராய்ச்சிக்காக "மெரைனர்10" என்ற விண்கலத்தை நாசா கடந்த 1973 ம் ஆண்டு அனுப்பியது.
அதன் பிறகு, பல ஆண்டு இடைவெளிக்கு பின் கடந்த 2004 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி "மெசஞ்சர்" என்ற விண்கலத்தை அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து மெசஞ்சர் விண்கலத்தை சுமந்துகொண்டு டெல்டா 2 ராக்கெட் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி தற்போது புதனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில் பாயும் இந்த ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு, தற்போது புதன் கிரகத்தை நெருங்கியிருக்கிறது.
சூரியனுக்கு ரொம்ப நெருக்கமான கிரகம் என்பதால் வெயில் அதிகம். பூமியில் இருக்கும் சூரிய வெப்பத்தைவிட 11 மடங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதிக வெப்பத்தையும் தாங்கும் விதத்தில் வெளிப்புற பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக மெசஞ்சர் திட்ட விஞ்ஞானி லூயிஸ் பிராக்டர் தெரிவித்தார்.

புதனின் மண்தன்மை, வெப்பம், சுற்றுப்பகுதி, வானிலை உள்பட சகல அம்சங்களையும் ஆராய்வதற்கு ஏற்ப அதிநவீன சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள், வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவிகள், நவீன கம்ப்யூட்டர்கள், கேமராக்கள் ஆகியவை மெசஞ்சர் விண்கலத்தில் உள்ளன.
6 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வகையில் புதனின் வட்டப்பாதைக்குள் மெசஞ்சர் அடுத்த மாதம் 17 ம் திகதி நுழைய உள்ளது. இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

No comments:

Post a Comment