Search This Blog

Pages

Tuesday, October 9, 2012

மூடுவிழா காணும் கூகுளின் சேவைகள்


google-puzzle
தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.
கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது ”Spring Cleaning” என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.
கூகுள் சேவைகளுக்கு மூடுவிழா என்னும் பதிவின் தலைப்பை மாற்றி இந்த பதிவு. அந்த பதிவில் உள்ள முதல் பத்தியையே இங்கும் கொடுத்துள்ளேன்.
சில சமயம் மற்ற வசதிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக சில வசதிகளை நீக்கும்.
Adsense for feeds:
நம் தளத்தின் செய்தியோடைகளில் ஆட்சென்ஸ் விளம்பரம் வைக்கும் வசதி இருந்தது. வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் புதிதாக யாரும் அதனை பயன்படுத்தமுடியாது. ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால், வரும் டிசம்பர் 3-ஆம் தேதியிலிருந்து அதில் விளம்பரங்கள் தெரியாது.
Classic Plus:
Classic Plus என்பது கூகுளின் முகப்பு பக்கத்தில் நமக்கு விருப்பமான படங்களை வைக்கும் வசதியாகும். வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் படங்களை நாம் அப்லோட் செய்ய முடியாது. நவம்பர் மாதம் முதல் இந்த வசதி முற்றிலும் நீக்கப்படும்.
Google Storage:
கூகுளின் Cloud Storage வசதியான  கூகிள் ட்ரைவ் தளத்தில் நமது கோப்புகளை சேமித்து வைப்பதற்கு இலவசமாக 5 GB கொள்ளளவு கொடுத்திருந்தது. அதே போல நமது போட்டோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியான பிகாஸா தளத்தில் இலவசமாக 1 GB கொள்ளளவு கொடுத்திருந்தது. இன்னும் சில மாதங்களில் இரண்டையும் ஒன்றிணைக்கப் போகிறது கூகுள். இதன் மூலம் Google Drive, Picasa இரண்டையும் சேர்த்து 5 GBகொள்ளளவு மட்டுமே கிடைக்கும்.

Saturday, October 6, 2012

உடலில் உள்ள இரத்த அணுக்களை அதிகரிக்க


f-pic-RBCs
உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் அனீமியா என்னும் மறதி நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே அத்தகைய இரத்தத்தை அதிகப்படுத்த கடைகளில் நிறைய மருந்துகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றை சாப்பிடுவதால் மட்டும் உடலில் இரத்தம் அதிகரிக்காது.
ஒரு சில இயற்கையான வழிகளையும் தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும் உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.
உணவுகள்
உடலில் இரத்தம் அதிகரிக்க வேண்டுமென்றால் நல்ல ஆரோக்கியமான, இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
அதாவது கொய்யாப்பழம், டார்க் சாக்லேட், கீரைகள், உருளைக்கிழங்கு, பூசணிக்காய் விதை, பயிர் வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
நன்னாரி வேர்
மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.
கற்றாழை
கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மாசடைந்த காற்று
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், வீட்டில் பயன்படுத்தும் கொசுவர்த்தி மற்றும ஏர் ப்ரஸ்னர்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இதில் இருந்து வரும் கெமிக்கல் கலந்த வாசனையை நுகர்வதால், அந்த கெமிக்கல் இரத்தத்தில் கலந்து புற்றுநோய், சுவாசக்கோளாறு, ஹார்மோனில் சில தொந்தரவு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
க்ரீம்கள்
உடலுக்கு தடவும் பாடி க்ரீம்கள் அல்லது லோசன்கள் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் சில சமயங்களில் அந்த கெமிக்கல்கள் உடலில் ஊடுருவி, இரத்தத்தில் கலந்து ஏதேனும் தொற்றுநோய்களை ஏற்படுத்தும்.
ஆகவே எப்போதும் கெமிக்கலால் ஆன பொருட்களை பயன்படுத்துவதை விட கற்றாழை, மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

மூன்றாம் உலகப் போரை ஆரம்பித்து வைத்தன துருக்கி, சிரியா


Syria and Turkish start world war 3
துருக்கி – சிரியாவுக்கு இடையில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிரிய இராணுவம் துருக்கி எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடத்திய மோட்டார் தாக்குதலில் துருக்கியின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து துருக்கி இராணுவம் சிரியா மீது தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சிரிய இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சிரிய எல்லைகள் மீது துருக்கி தாக்குதல்களை ஆரம்பித்திருப் பதாக துருக்கி அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டது. துருக்கி, சிரியாவின் டல் அல் அல்யாத் எல்லைப் பகுதி மீது நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
துருக்கி எல்லையோர நகரான அக்ககிள் நகர் மீது சிரியா நடத்திய ஷெல் தாக்குதலில் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் கொல்லப்பட்டனர். அதேபோன்று ஒரு துருக்கி பாதுகாப்பு அதிகாரியும் காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்தே துருக்கி, சிரியா மீது எறிகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 18 மாதங்களாக சிரியாவில் நிலவும் பதற்ற நிலையில் சிரியா பல முறை துருக்கி எல்லை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் துருக்கி பதில் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதனையொட்டி எல்லையோரத்தில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு விலகி இருக்குமாறு துருக்கி அரசு அறிவுறுத்தியுள்ளதோடு 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாதுகாப்புச் சபையும் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து ஆலோசிக்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோன்று துருக்கி அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பும் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் சிரியாவின் செயலுக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளதோடு துருக்கிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் பரிந்துரைக்கு அமைய நேற்று முன்தினம் இரவு நேட்டோ இந்த அவசர கூட்டத்தை நடத்தியது.
நேட்டோ விதியின் 4 ஆவது அதிகாரத்தின் கீழ் நடத்தப்படும் இந்த அவசர கூட்டம் அரிதாக இடம்பெறு வதாகும். தமது அங்கத்துவ நாடொன்றின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போதே நேட்டோ இவ்வாறான கூட்டத்தை நடத்துவது வழக்கம்.
எனினும் இந்த கூட்டத்தின் போது நேட்டோவின் 5 ஆவது அதிகாரத்திற்கமைய தமது அங்கத்துவ நாடொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அனைத்து அங்கத்துவ நாடுகளும் இணைந்து பதில் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதில் லிபியா போன்று நேட்டோ சிரியாவில் தலையிடாது என குறிப்பிட்ட நேட்டோ செயலாளர் நாயகம் அன்டர்ஸ் பொக் ரஸ்முஸன், துருக்கியின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கையை எடுக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
எனினும் எல்லை தாண்டிய படை நடவடிக்கை குறித்து துருக்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். சிரியாவின் தாக்குதலைத் தொடர்ந்து துருக்கி அரசு பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில் சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற துருக்கி வாக்கொடுப்பை நடத்தியது.இதில் பெரும்பான்மை அடிப்படையில் அனுமதியும் கிடைக்கப்பெற்றது.
“கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி தொடக்கம் சிரிய அரபு குடியரசின் இராணுவம் எமது எச்சரிக்கைகள் மற்றும் இராஜதந்திர தொடர்புகளையும் மீறி எமது எல்லைகளில் அத்துமீறி செயற்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியு ள்ளது” என்று துருக்கி அமைச்சரவை கோரியுள்ளது.
சிரியாவின் எல்லை மீறிய செயலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு துருக்கி, பாதுகாப்புச் சபையை கோரியுள்ளது.
இது குறித்து துருக்கி பிரதமர் ரிசம் தய்யிப் எர்டோகன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வெறுக்கத்தக்க தாக்குதலுக்கு எல்லையோரத்தில் இருக்கும் எமது ஆயுதப்படை பதிலளிக்கும். சிரிய அரசின் எமது தேசிய பாதுகாப்புக்கு எதிராக இவ்வாறான அத்துமீறிய செயலை துருக்கி சும்மா விட்டுவிடாது” என்று குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த எல்லை தாண்டிய தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என சிரிய அரசு கூறியுள்ளது.
இது குறித்து சிரிய ஊடகத்துறை அமைச்சர் இம்ரான் சொவாபி வெளியிட்டுள்ள அறிக் கையில், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் எமது நட்பு துருக்கி நாட்டவர் களிடம் சிரியா சார்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சிரியாவில் அரச படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான உக்கிர மோதல்கள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அசாத்தின் இராணுவம் பலத்த பின்னடைவை சந்தித்துள்ள இந்த நிலையில் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு மீதான கிளா்ச்சிப்படையின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் முக்கிய உறுப்பினா் ஒருவரை கொலை செய்த கிளா்ச்சிப்படை நேற்று லெபனானிலுள்ள அவர்களின் ஆயுத கிடங்கு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் ஹிஸ்புல்லாஹ் அமைப்பினை சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்பாக உள்ள நிலையில் இப்போது இந்த பிரச்சினை ஆரம்பித்துள்ளது.தன்னை பாதுகாத்துக்கொள்ள நட்பு நாடுகளை அழைப்பதற்கு தகுந்த காரணமே சிரியாவிற்கு தேவைப்படுவது.அது இப்போது நிறைவேறியுள்ளது.
சிரியா மீது ஏனைய நாடுகள் போர் தொடுத்ததால் நேரடியாக எங்கள் இராணுவம் களமிறங்கும் என்று ஈரான் அறிவித்துள்ள நிலையிலேயே இப்போது துருக்கி போர் தொடுத்துள்ளது. அப்படியாயின் ஈரான் துருக்கியை போர்க்களத்தில் சந்திக்குமா ?  ஈரானிய ஏவுகனைகளுக்கு துருக்கி இலக்கானால் நேட்டோ உருப்பு நாட்டின் மீதான தாக்குதலை பார்த்துக் கொண்டிருக்குமா ?  நேட்டோ நட்பு நாட்டின் மீது போர் தொடுப்பதை ரஷ்யா மற்றும் சீனா அனுமதிக்குமா ? இவ்வாறு உலகம் முழுவதும் பரவ உள்ள யுத்தத்தில் இஸ்லாமிய புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றிய பிராந்திய  நாடுகளின் பங்கு எவ்வாறு இருக்கப்போகிள்றது ? நிச்சயமாக அவை இஸ்ரேல் ஆதரவான மோற்கு நாடுகளுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை அப்படியாயின் இவர்களின் ஆதரவு ?
எது எவ்வாறு இருப்பினும் சிரியா  மீதான அந்நியநாடுகளின் தாக்குதல் உலகுக்கு ஆபத்தானது

தங்கத்தை உருவாக்கும் பக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு


bacteria_gold_001
சுத்தமான 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடிய பக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது திரவ தங்கத்தை உருவாக்கக் கூடிய “கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ்” என்ற பக்டீரியாவைக் கண்டுபிடித்தனர்.
இந்த பக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து தங்க குளோரைடை இந்த பக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர்.
ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக(தங்கக் கட்டி) மாறியிருந்தது. அது 24 கேரட் தங்கத்தின் தரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தங்கக்கட்டிகளைக் கொண்டு ஒரு கலைப்பொருளையும் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அதை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்று வரும் கலைப் போட்டியில் கண்காட்சிக்கு வைத்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் உடன் இணைகிறது Skype


skype-microsoft-facebook
இணையத்தின் வழியே உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் நண்பர்களை வீடியோ இணைப்பில் பார்த்து பேச Skype பயன்படுகிறது.
Skype-யை இதுவரை தனியே ஒரு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளோம்.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள Skype-ன் சோதனை பதிப்பில், பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் கணக்கிற்கான பயனர் பெயர், கடவுச்சொல்லை பயன்படுத்தலாம்.
மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் நிறுவன பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தின் விளைவே இந்த புதிய வசதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதிகள் Skype சோதனை பதிப்பான 5.11ல் தரப்படுகிறது. இந்த பதிப்பில் மேலும் ஆறு மொழிகளை, Skype இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காந்திப் படுகொலையும் , கோட்ஸே சொல்லும் காரணகளும்


421685_349682965050782_378777790_n
சுதந்திர இந்தியா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2-ஆம் தேதியை காந்தி பிறந்த தினமாகவும், ஜனவரி 30-ஆம் தேதியை இரத்தசாட்சி தினமாகவும் அனுஷ்டித்து வருகிறது. ஆனால், காந்தி ஏன் கொல்லப்பட்டார்? என்பது மறந்துபோன ஒன்றாக மாறிவிட்டது.
காந்தி என்ற மகாத்மா, அவரைக் கொன்ற கொலைகாரன் கோட்ஸே, அவனது கும்பல் பரப்புரைச் செய்த அரசியல் சித்தாந்தம், அன்று நீடித்த தேசிய சூழல், சர்வதேச சூழல்கள், நீதிமன்றத்தில் கோட்ஸே வெளியிட்ட காரணங்கள்-ஆகியவற்றை இணைக்க முயன்றால் பல இடங்களில் பொருத்தமில்லாமையை நாம் உணரலாம். ஆகையால் காந்தி படுகொலை குறித்த மீளாய்வில் கூடுதலாக ஏதேனும் கூறவேண்டியது அவசியமாகும்.
1966-ஆம் ஆண்டுவரை காந்தி படுகொலை குறித்த ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டதற்கு மக்களின் மறதிக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பதுதான் காரணமா?
1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி மாலை 5.10 க்கு பிர்லா ஹவுஸிலிருந்து பிரார்த்தனை ஹாலிற்கு புறப்பட்டுச் சென்ற காந்தியடிகளை வினாயக் நாதுராம் கோட்ஸே என்பவன் வழியில் தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். கோட்ஸேயை தவிர காந்தியடிகளுடன் வந்தவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். தப்பிக்க கூட முயலாமல் கோட்ஸே தனது இரு கரங்களையும் நீட்டி போலீசாரை அழைத்து தன்னை கைது செய்ய கோரினான்.
பின்னர் நடந்த விசாரணையில் கோட்ஸே நீதிமன்றத்தில் 5 மணிநேரம் கொலையை நியாயப்படுத்தி வாக்குமூலம் அளித்தான். காந்தியை கொலை செய்தது குறித்து பெருமைக் கொள்வதாகவும், இக்கொலை முன்னரே நிகழ்த்தியிருக்க வேண்டியது எனவும் கூறினான்.
கோட்ஸே காந்தியை கொலைச் செய்ய கூறிய முக்கிய காரணங்களை பார்ப்போம்:
1.‘ஹிந்து-முஸ்லிம் பிரச்சனைகளில் காந்தி முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்.
2. ஜின்னாவின் தேசப் பிரிவினைக்கு ஆதரவளித்தார்.
3.பிரிவினைக்கு பிறகும் அரசு கருவூலத்திலிருந்து பங்குத் தொகையான 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு அளிக்கவேண்டும் என காந்தி இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்தார்.
4. பிரிவினையை தொடர்ந்து உருவான கலவரத்தில் காந்தி ஹிந்துக்களை நிராயுதபாணிகளாக மாற்றினார்.
5.காந்தி பாகிஸ்தானின் தேசத் தந்தையாவார்.’
என்பதாகும்.
கோட்ஸேவின் இக்கூற்று உண்மைக்கு உகந்ததா?
என்பதை ஆராய நீதிமன்றம் தயாராகவில்லை. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி நீதிமன்றம் தண்டனையை வழங்கியது.
கோட்ஸே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்கு மரணத் தண்டனையும், இதர நான்கு பேருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டன. சாவர்க்கர் மீதான குற்றத்திற்கு ஆதாரமில்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. காந்தி படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சவர்க்கரை குற்றமற்றவர் என கூறி நீதிமன்றம் விடுதலைச் செய்தது விவாதத்தை கிளப்பியது.
பின்னர் காந்தி படுகொலையை குறித்து மறுவிசாரணை நடத்திய கபூர் கமிஷன் கண்டறிந்தது என்னவெனில் காந்தி படுகொலையில் சாவர்க்கர் முக்கிய சூத்திரதாரி என்பதாகும். இதுக்குறித்து மீண்டும் ஆய்வுச்செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். விசாரணையின் போது காந்திக்கு எதிராக கோட்ஸே முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை குறித்து புரிந்துக் கொள்வதற்கான மீளாய்வை காந்தியிலிருந்தே நாம் துவங்குவோம்.
1947-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘ஹிந்துராஷ்ட்ரா’ என்ற நாளிதழில் கோட்ஸே இவ்வாறு எழுதினான்:
‘சகோதரர்களே! நமது தேசம் துண்டிக்கப்பட்டுவிட்டது!’
பின்னர் காந்திக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக எழுதுகிறான்,
‘பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததன் மூலம் நீங்கள் பாரதத்தின் நெஞ்சத்தை கோடாரியால் பிளந்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றவில்லையெனில் அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிவரும்’.
ஆனால் நாடு பிரிவினையை குறித்து வரலாறு கூறுவது இதற்கு மாற்றமானதாகும். தேசப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர் காந்தியடிகள் ஆவார். காலனியாதிக்க ஹிந்துத்துவா சக்திகள் பல பத்தாண்டுகளுக்கு முன்பே பிரிவினைக்கு ஆதரவான சூழலை வளர்த்துக்கொண்டு வந்தனர்.
1921-ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய ‘ஹிந்துத்துவா’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார், ’ஹிந்துவும், முஸ்லிமும் இரண்டு தேசங்கள் ஆவர்’.
1923-ஆம் ஆண்டு ஹிந்து மகாசபையின் மாநாட்டில் மதன்மோகன் மாளவியா உரை நிகழ்த்தினார். அதில் அவர்,’இந்தியா ஒருபோதும் ஒரு ஒன்றிணைந்த தேசம் அல்ல’ என தெரிவித்தார்.
1924-ஆம் ஆண்டு லாலா லஜபதிராய் ‘த ட்ரிப்யூன்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது என்னவெனில், ’இந்தியா தனி நாடல்ல’ என்பதாகும்.
1937-ஆம் ஆண்டு கோட்ஸேவின் சித்தாந்த குரு சவர்க்கர் அஹ்மதாபாத்தில் நடந்த ஹிந்து மகாசபை மாநாட்டில் கூறியது என்னவெனில், ’இந்தியாவால் ஒரு ஒன்றிணைந்த நாடாக மாற இயலாது’ என்பதாகும். இந்த கருத்துக்களையெல்லாம் காந்தி அங்கீகரிக்கவில்லை.
1940-ஆம் ஆண்டு லாகூர் தீர்மானத்தின் மூலம் முஸ்லிம் லீக் ’பாகிஸ்தான்’ என்ற வாதத்தை முன்வைத்தது. இதனையும் காந்தியடிகள் அங்கீகரிக்கவில்லை. ஆனால்,
1945-ஆம் ஆண்டு காங்கிரஸைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியும் பிரிவினைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அப்பொழுது கூட காந்தி பிரிவினையை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தார்.
ஒரு கட்டத்தில் ஜின்னாவை பிரதமராக்கி பிரிவினையை தவிர்க்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். அதேவேளையில், ஷியாம்பிரசாத் முகர்ஜி போன்ற காலனியாதிக்க ஹிந்துத்துவாவாதிகள் பிரிவினைக்கான ரகசிய செயல்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
முஸ்லிம்களும், தலித்துகளும் ஒன்றிணைந்தால் உயர் ஜாதியினர் அதிகாரத்தின் படிக்கட்டுகளுக்கு வெளியே சென்றுவிடக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என ஷியாம் பிரசாத் முகர்ஜி அஞ்சினார். இறுதியாக தலைபோனாலும் பரவாயில்லை, தலைவலி மாறினால் போதும் என்ற முடிவை காங்கிரஸ் செயற்குழு எடுத்தது. அங்கேதான் காந்தி மெளனியாக மாறினார்.
கோட்ஸே நீதிமன்றத்தில் வரலாற்றை வளைத்ததற்கு காரணம் ஏதோ ஒன்றை மூடி மறைப்பதற்காகும். கோட்ஸே காந்தி படுகொலைக்கு கூறிய அடுத்த காரணம்,
அரசு கருவூலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய பங்கான 55 கோடி ரூபாயை இந்தியா முடக்கி வைத்தபோது காந்தி தலையிட்டு பாகிஸ்தானுக்கு அப்பணத்தை கொடுக்கவேண்டும் என கூறினார் என்பதாகும்.
இங்கே புரியாத காரணம் என்னவெனில், நாட்டை பிரிப்பதற்கான திட்டங்களை தீட்டிய சங்க்பரிவாரத்திற்கு நாடு துண்டாடப்பட்டதை விட பெரிதா 55 கோடி ரூபாய்? என்பதாகும்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை அந்நாட்டிற்கு வழங்கவேண்டும் என காந்தி கூறியது அவரை கொலைச்செய்ய எவ்வாறு காரணமாகும்? அவ்வாறெனில் நானூறு ஆண்டுகள் இந்தியாவை காலனியாதிக்க நாடாக மாற்றி ஆட்சிபுரிந்த பிரிட்டீஷார் இந்தியாவின் பெரும் செல்வங்களை கொள்ளையடித்தனர். ஆனாலும், சங்க்பரிவாரத்திற்கு ஏன் பிரிட்டீஷாரின் மீது துவேசம் ஏற்படவில்லை? 55 கோடி ரூபாய் விவகாரத்தில் காந்தி யாரையும் திருப்திப்படுத்துவதற்காக செயல்படவில்லை. மாறாக, உண்மை என்று தான் கருதியதை ஆதரித்ததேயாகும்.
அடுத்த காரணமாக கோட்ஸே கூறியது, முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலேயே காந்தி குறியாக இருந்தார் என்பதாகும். “பிரிவினையைத் தொடர்ந்து நடந்த வகுப்பு கலவரத்தில் காந்தி ஒருதலைபட்சமாக ஹிந்துக்களிடம் கலவரத்திலிருந்து விலகுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்தார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணர்வுக்கு பலியாகினர்”. இதிலும் உண்மை கோட்ஸேவிற்கு எதிராகவே அமைந்துள்ளது.
ஜவஹர்லால் நேரு 1947-ஆம் ஆண்டு வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில், “கலவரத்தின் பின்னணியில் அதிகமாக செயல்படுவது ஹிந்துக்களும், சீக்கியர்களும்தான்” என தெரிவித்துள்ளார்.
எந்த வன்முறையையும் எதிர்க்கவேண்டும் என்பது காந்தியின் அகிம்சை கொள்கையின் ஒரு பகுதியாகும். வன்முறை உருவானதன் காரணமாக ஒரு கட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை கூட காந்தி நிறுத்தி வைத்தார்.
1921-ஆம் ஆண்டு ஒத்துழையாமை போராட்ட வேளையில் சவுரிசவ்ரா என்ற இடத்தில் வன்முறை வெடித்தபொழுது காந்தி போராட்டத்தை வாபஸ் பெற்றார். கிலாஃபத்தின் நிழலில் வளர்ந்துவந்த கேரளாவின் மாப்பிள்ளைகள் போராட்டத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததாக கேள்விப்பட்ட வேளையில் மலபார் போராட்டத்தை காந்தி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இவ்விவகாரத்தில் கோட்ஸே உண்மையை மூடி மறைத்துள்ளார்.
இந்நிலையில், கோட்ஸே கூறிய காரணங்களெல்லாம் பொய்யானவையாக இருக்கும்போது ஒரு கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது. ஏன் காந்தி கொல்லப்பட்டார்? என்பதுதான் அக்கேள்வி.
இதனைப் புரிந்துக்கொள்ள வேண்டுமெனில் ஏகாதிபத்திய-சியோனிஷ்டுகளுடன் சங்க்பரிவார்களுக்கு இருந்த ரகசிய உறவை அடையாளம் காணவேண்டும்.
சாவர்க்கரும் அவரது கூட்டாளிகளும் வளர்த்தது தேசிய ஹிந்துத்துவ அரசியல் அல்ல. மாறாக ஏகாதிபத்திய-சியோனிஷ விருப்பங்களை பாதுகாக்கும் காலனியாதிக்க ஹிந்துத்துவா அரசியலாகும்.
அது ஒரு ஏகாதிபத்திய கொள்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும் மாற்றியமைத்து தங்களுக்கு சாதகமான காலனியாதிக்க மனோநிலையை உருவாக்குவதுதான் இவர்களது திட்டம். அதற்காக புதிய அமைப்புகள், மதங்கள், மனித தெய்வங்கள் என எதனையும் ஏகாதிபத்திய சக்திகள் உருவாக்கும்.
காங்கிரஸ் என்றதொரு இயக்கத்தை உருவாக்கியது ஏ.ஓ.ஹ்யூம் என்ற பிரிட்டீஷ் காரர் ஆவார் என்பது இங்கே சிந்திக்கவேண்டிய விஷயமாகும்.
இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து ‘காதியானிசம்’ என்றதொரு காலனியாதிக்க பிரிவை உருவாக்கினர்.
அதுபோலவே சங்க்பரிவார் என்ற காலனியாதிக்க ஹிந்துதுத்துவா இயக்கமும் உருவானது.
நாத்திகவாதியான சாவர்க்கர் தனது இளமைப் பருவத்தில் பிரிட்டீஷ் எதிர்ப்பு போராட்டங்களில் விருப்பங்காட்டினார்.
1857-ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போராட்டத்தைக் குறித்து சாவர்க்கர் 1909 ஆம் ஆண்டு ஒரு நூலை எழுதினார். அதில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஐக்கியத்துடன் போராடியதை குறிப்பிடுகிறார். மேலும் முஸ்லிம்கள் செய்த தியாகத்தை தனியாக பாராட்டி எழுதியுள்ளார்.
பின்னர் உயர்கல்வியை கற்பதற்காக சவர்க்கர் பிரிட்டனுக்கு சென்றார். ஆனால், அங்கே அவர் சற்று தீவிரமாக இந்திய அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சாவர்க்கரின் நண்பர் ஒரு பிரிட்டீஷ்காரரை கொலைச்செய்த வழக்கில் சாவர்க்கரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். விசாரணையில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனையை விதித்தது. இதனைத் தொடர்ந்து அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வைத்து அவரது அரசியல் சித்தாந்தம் மாற்றம் அடைந்தது.
வாழ்க்கை முழுவதையும் சிறையில் கழிப்பதை விரும்பாத சாவர்க்கர் பிரிட்டீஷ் அரசுடன் சமாதானமாக செல்லும் நோக்கில் மன்னிப்பு கடிதத்தை எழுதினார்.
பிரிட்டீஷ் எதிர்ப்பு செயல்பாடுகளிலிருந்து விலகுவதும், மீதமுள்ள காலத்தை பிரிட்டீஷாருக்கு சேவை புரிவதில் கழிப்பதும் அக்கடிதத்தின் உள்ளடக்கமாகும்.
1913-ஆம் ஆண்டு அந்தமான் சிறையை பார்வையிட சென்ற பிரிட்டீஷ் அதிகாரி ஸர் ரெஜினால்ட் க்ராடக்குடன் சாவர்க்கர் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தினார். இதன் பலனாக, சிறையில் படிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபடவும், வெளி உலகத்துடன் தொடர்புக் கொள்ளவும் அதிக சுதந்திரம் அவருக்கு கிடைத்தது. இவ்வாறு அந்தமான் சிறையில் வைத்து
1921-ஆம் ஆண்டு சவர்க்கர் ‘ஹிந்துத்துவா’ என்ற நூலை எழுதினார். ’ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தேசமல்ல’ என்ற வாதத்தை இந்நூலில் அவர் குறிப்பிடுகிறார்.
1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவானபோது சாவர்க்கர் சிறையில் இருந்தார். அவ்வியக்கத்தின் துவக்க விழாவில் பங்கேற்க தனது பிரதிநிதியாக தனது சகோதரர் கோபால் கோட்ஸேவை அனுப்பி வைத்தார்.
சங்க்பரிவாரத்தின் ‘காந்தி எதிர்ப்பு’ கொள்கை பிரிவினையின் பிறகு உருவானதல்ல.
1926-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் ஹெட்கேவார், ”காந்தியின் அகிம்சை வழி நாட்டில் அதிகரித்துவரும் ஆவேசத்தை கெடுத்துவிடுகிறது. ஆகையால் காந்தியை ஆதரிக்க இயலாது” என தெரிவித்தார்.
ஆனால், மறுபுறம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் ஆயுத போராட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது. இதற்கான காரணத்தை ஆர்.எஸ்.எஸ் விளக்கவில்லை. காங்கிரஸ் நடத்திய அனைத்து போராட்டங்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது.
ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் “ஆர்.எஸ்.எஸ் முதுகில் குத்தியது.”
இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான ஷியாம் பிரசாத் முகர்ஜி பிரிட்டீஷ் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், ”போர் உறுதியாகிவிட்டது. இக்கட்டத்தில் காங்கிரஸ் போராட்டத்தை வலுப்படுத்தினால் பிரிட்டீஷ் அரசு அதனை கடுமையாக எதிர்கொள்ளவேண்டும்” என தெரிவித்தார்.
1948-ஆம் ஆண்டு காந்தி படுகொலையின் விசாரணை வேளையில் கோட்ஸே கூறியவை 1947-ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த நிகழ்வுகளுடன் தொடர்புடையவனவாகும். அவ்வாறெனில், 1944-ஆம் ஆண்டு காந்தியை கொல்ல ஏன் கோட்ஸே விரும்பினார்? சுருக்கமாக கூறவேண்டுமெனில், கோட்ஸே காந்தியை படுகொலைச் செய்ய தூண்டியதற்கு கூறிய காரணங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவையாகும்.
மனிதர்களை நேசித்த காந்தியடிகளுக்கு ஹிந்து விரோதமோ, முஸ்லிம் விரோதமோ, பிரிட்டீஷ் விரோதமோ இல்லை.
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் வேளையிலும் நெருக்கடியான காலக்கட்டங்களில் பிரிட்டீஷாருக்கு உதவியுள்ளார். பிரிட்டனுக்கும், டச்சுக்காரர்களுக்கும் (நெதர்லாந்து) இடையே நடந்த போவர் போர், முதல் உலகப்போர் ஆகியவற்றில் பிரிட்டீஷாருக்கு ஆதரவாக சேவை புரிந்தார்.
சமூகத்தில் காணப்படும் அநீதி, சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பை தனது வாழ்க்கை முறையாக கொண்டவர் காந்தியடிகள். ஆகையால்தான் இருபது ஆண்டுகளாக நீடித்த ஆப்பிரிக்க போராட்டம் முடிந்து இந்தியாவுக்கு திரும்பியதும் ஓய்வெடுக்காமல் பிரிட்டீஷாருக்கு எதிராக போராட துவங்கினார்.
இவ்வேளையில் உலகின் பல இடங்களில் நடந்த அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
அதில் முக்கியத்துவம் வாய்ந்தது 1938-ஆம் ஆண்டு “சியோனிஸ்டுகள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்ததை எதிர்த்து, அரபுக்களின் உரிமைகளை ஆதரித்து குரல் கொடுத்ததாகும்.”
காந்தியின் நிலைப்பாடு சியோனிஸ்டுகளுக்கு சர்வதேச தளத்தில் மிகப்பெரிய தலைவலியாக மாறியது.
அதேவேளையில் சாவர்க்கரும் அவரது கூட்டாளிகளும் சியோனிஸ்டுகளை ஆதரித்தனர். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு காந்தி அதிகாரத்தில் பங்கேற்காமல், ஓய்வெடுக்காமல் மற்றொரு போராட்டத்திற்கு செல்வார் என்பதை சியோனிஸ்டுகள் புரிந்துக்கொண்டனர். ஆதலால் காந்திக்கு தடை விதிப்பது அவர்களது முக்கிய தேவையாக இருந்தது.
இந்த பணியை ஏற்றுக் கொண்டவர்கள் இந்தியாவில் சியோனிஸ்டுகளின் நம்பிக்கை பாத்திரமான காலனியாதிக்க ஹிந்துத்துவா சக்திகளாவர்.
காந்தி படுகொலையின் பலனை யார் அனுபவித்தார்கள் என்பதும், யாரெல்லாம் ஆதாயம் பெற்றார்கள் என்பதையும் ஆராயவேண்டும்.
முதலாவதாக, சர்வதேச தளத்தில் பெரும் சலனங்களை உருவாக்கிய காந்தியின் சியோனிஷ எதிர்ப்பு அணைந்து போனது.
இரண்டாவதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் காலனியாதிக்க ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் முகத்திற்கு தேசிய ஹிந்துத்துவா முக மூடியை அணியவும் சாத்தியமானது.
தொடர்ந்து உருவாக்கிய முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் கொள்கையின் மூலமாக தாங்கள்தாம் ஹிந்துக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற உணர்வை சாமான்யர்களின் உள்ளங்களில் நிறுவுவதை முக்கிய பணியாக கொண்டு செயலாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் மிகப்பெரும் அழிவுசக்தியாக மாறிவருகிறது என்பதை அண்மையில் இந்த தேசத்தை உலுக்கிய குண்டுவெடிப்புகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி..


planet focusing earth
நிலவை விட 15 மடங்கு பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வர உள்ளது. இந்த வால் நட்சத்திரத்துக்கு வானியலாளர்கள் ‘இஸ்கான்’ என பெயரிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றும் இந்த வால் நட்சத்திரத்தை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பகலில் காண முடியும். இது நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வால் நட்சத்திரத்தை ரஷ்யாவைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் அறிவியல் ஆப்டிகல் ஒருங்கிணைப்பு தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இது இப்போது சூரியனின் வட்டப் பாதையில் 20 இலட்சம் மைல் தொலைவில் ‘பர வளையத்தில்’ சுற்றி வருகிறது. இது சூரியனின் வெளிவட்டப் பாதையில் உள்ள ஊர்ட் பகுதியில் உருவானதாகக் கருதப்படுகிறது. இங்குதான் மிக அதிக அளவிலான உறைந்த குப்பை கூளங்கள் உள்ளன.
இந்த வால் நட்சத்திரம் இப்போது வியாழன் கிரகத்தின் உள்வட்டப் பாதையை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிகிறது. அது அப்படியே படிப்படியாக பூமியை நோக்கி வரும் என நம்பப்படுகிறது.
அழுக்குகள் நிரம்பிய ஐஸ்பந்தாக சுற்றிவரும் இஸ்கான் வால் நட்சத்திரம் நிலவை விட அதிக ஒளியை உமிழ்ந்தபடி இருப்பதால் இதை பகல் நேரத்தில் வெறும் கண்ணால் காண முடியும். கடந்த நூறாண்டுகளில் இதுதான் மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரமாக இருக்கும் என வானியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் ஹாலே வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது 75 முதல் 76 ஆண்டுக்கு ஒருமுறை உருவாகும் என கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல இஸ்கான் எரிநட்சத்திரம் அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மாலை வேளையில் லண்டனில் தெரியும் என பிரபல வானியல் அறிஞர் ராவின் ஸ்கேகெல் தெரிவித்துள்ளார்.

கூகுளுக்கு மாற்றீடாக புதிய தேடுதல் பொறியை தயாரிக்கிறது ஈரான்


go
இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
பக்ர் என்ற பெயரில் தேடுதல் பொறியையும், பஜ்ர் என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையையும் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈரான் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைபடத்தின் முன்னோட்டத்தை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கூகுள் மறுத்ததை தொடர்ந்து ஜி-மெயிலை ஈரான் முடக்கியது. ஈரானில் 50 சதவீதம் பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்.
இந்நிலையில் ஜிமெயிலை முடக்கியது பயனீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கவனத்தில் கொண்டு புதிய தேடுதல் பொறி மற்றும் மின்னஞ்சல் சேவையை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

Friday, October 5, 2012

The Worst Car Accident I've Ever Seen

My last post was a while ago - June 23, 2010. I posted in the morning. That afternoon, I drove my son to his girlfriend's house. On the way home, I witnessed the worst car accident I've ever seen. Unfortunately, I witnessed it from behind the wheel of one of the two cars involved.

I've been planning to write about my accident for a long time, but I've put it off for several reasons. One is, I've been busy. I've been hospitalized twice since June 23, and the second time was for extensive surgery to my severely broken right leg. Another reason is, quite honestly, it's been very difficult for me to wrap my mind around what happened and talk about it with a sufficiently detached attitude.

I'm pretty sure I'm finally to that point now. I plan to post about my wreck over the next few days. There's a lot to say about it. But before I say anything in words, I thought I'd start out with pictures. I don't think that what I have to say about what happened will mean anything without the visual understanding of how serious this accident really was.

To help you understand these photos, they were taken at the auto body yard after the accident. In a few shots, you can see a blond head (my son) sitting in the car. He's behind the wheel in those shots, so you'll have a better idea of where I was when the accident happened.

Also, it's important that I clarify that I was cut from the car. The roof was cut so that I could be pulled straight up and out. In most of these photos, there are random pieces of car body just thrown on top of the car that are nearly impossible to recognize. I assume they are pieces that were cut away.

Okay - here are the pictures.






I know; I can't believe it either.

I hope to write more about the accident and how it changed me soon.