Points Pixels Ems Percent 6pt 8px 0.5em 50% 7pt 9px 0.55em 55% 7.5pt 10px 0.625em 62.5% 8pt 11px 0.7em 70% 9pt 12px 0.75em 75% 10pt 13px 0.8em 80% 10.5pt 14px 0.875em 87.5% 11pt 15px 0.95em 95% 12pt 16px 1em 100% 13pt 17px 1.05em 105% 13.5pt 18px 1.125em 112.5% 14pt 19px 1.2em 120% 14.5pt 20px 1.25em 125% 15pt 21px 1.3em 130% 16pt 22px 1.4em 140% 17pt 23px 1.45em 145% 18pt 24px 1.5em 150% 20pt 26px 1.6em 160% 22pt 29px 1.8em 180% 24pt 32px 2em 200% 26pt 35px 2.2em 220% 27pt 36px 2.25em 225% 28pt 37px 2.3em 230% 29pt 38px 2.35em 235% 30pt 40px 2.45em 245% 32pt 42px 2.55em 255% 34pt 45px 2.75em 275% 36pt 48px 3em 300%
Wednesday, February 16, 2011
Pixel to Point conversion (Pt)
Block vs. Inline Level Elements
Nearly all HTML elements are either block or inline elements. The characteristics of block elements include:
* Always begin on a new line
* Height, line-height and top and bottom margins can be manipulated
* Width defaults to 100% of their containing element, unless a width is specified
Examples of block elements include
* Always begin on a new line
* Height, line-height and top and bottom margins can be manipulated
* Width defaults to 100% of their containing element, unless a width is specified
Examples of block elements include
, ,
,
Drop caps using CSS - CSS Tricks
You can make a nice drop cap with CSS

p:first-letter{
display:block;
margin:5px 0 0 5px;
float:left;
color:#FF3366;
font-size:60px;
font-family:Georgia;
}
display:block;
margin:5px 0 0 5px;
float:left;
color:#FF3366;
font-size:60px;
font-family:Georgia;
}
Competitive Examinations in India
Listed here all the competitive exams conducted by the government of India.
- Agricultural Research Service Exam
- Assistant Central Intelligence Officer
- Engineering Assistants in All India Radio and Doordarshan Exam
- CRPF Exams
- BHEL Exams
- Entrance Exams
- Bank Exams
- LIC Exams
- GIC Exams
- Railway Recruitment Board Exams
- UPSC Exams
- Border Security Force Exams
- Indo-Tibetan Border Police Force Exams
- TamilNadu Uniformed Service Board Recruitment Exams
Tuesday, February 15, 2011
சேவ் பண்ணாத கோப்புகளை திரும்பப் பெற
நம்மில் பலர் அந்த முழு பைலையும் முடித்த பின்னர் தான் அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம். முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம்.
ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ் செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஆப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஆப்ஷன் கிளிக் செய்துவிடுவார்கள்.
அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள். வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தால் மீண்டும் அந்த பைலை உருவாக்குவார்கள். இவர்களுக்காகவே எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பில் AutoRecover என்ற ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை சேவ் செய்யப்படாத பைல்களையும் சேவ் செய்திடும் வகையில் செட் செய்திடலாம்.
இதை செயல்படுத்திட File டேப் கிளிக் செய்து, அதில் Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். ஆப்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் இடது பக்கம் உள்ள Save பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
வலது பக்கம் Save last auto saved version if I close without saving என்று இருப்பதனை செக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனிமேல் நீங்கள் சேவ் செய்திடாத பைலையும், மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.
சேவ் பண்ணாத பைலை திரும்ப பெறுவதற்கு File டேப் செல்லவும். இந்த டேப்பில் Recent என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனடியில் கிடைக்கும் தகவல்களில் கீழாக வலது மூலையில் Recover Unsaved Documents என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
இதனை கிளிக் செய்தவுடன், உங்களை புரோகிராம் தானாக நீங்கள் சேவ் செய்யாத பைலை சேவ் செய்திட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கே இத்தகைய பைல்கள் அனைத்தும் இருக்கும். உங்களுக்கு அப்போது எந்த பைல் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து பின்னர் Open என்பதில் கிளிக் செய்திடவும். பைல் திறக்கப்படும்.
கம்ப்யூட்டரில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்: பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், “பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்திடலாமா?" என்று பிழைச் செய்தி காட்டுகிறது.
இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்: இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம் அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும்.
இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும்.
இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
3.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்: ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது. அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம்.
இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.
4. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்: டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட்(TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.
5.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது: திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம்.
இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.
6. ஒரே ஒரு பேக் அப் அபாயம்: பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.
வோ்டில் கோடுகளுக்கான எண்கள்
பக்க எண், பிரிவு எண், மொத்தப் பக்கத்தில் கர்சர் இருக்கும் பக்க எண், அடுத்து வரி எண், கேரக்டர் எண் என வரிசையாகக் காட்டப்படும். பலர் இந்த வரி எண்கள் குறித்து கவலைப்படுவதோ, பயன்படுத்துவதோ இல்லை.
எப்போதும் பத்திகள், பிரிவுகள், பக்கங்கள் என்றே பார்க்கிறோம். ஆனால் வேர்ட் பக்க எண்கள் மற்றும் வரிகளைச் சுட்டிக் காட்டிச் செல்லும் வசதியைக் கொண்டுள்ளது. நாம் ஒரு குறிப்பிட்ட பக்கம் மற்றும் வரிக்கு செல்லும் வசதி வேர்டில் தரப்பட்டுள்ளது.
டாகுமெண்ட்டினைத் திறந்து எப்5 ஐ அழுத்துங்கள். Go To What என்ற பிரிவில் Line என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Enter Line Number என்பதில் செல்ல வேண்டிய வரி எண்ணை டைப் செய்திடவும். அடுத்து Go To என்பதில் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கர்சர் அந்த வரிக்குச் செல்லும்.
இதில் இன்னொரு வசதியும் உள்ளது. உங்கள் கர்சர் உள்ள வரிக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ உள்ள வரிக்கு நீங்கள் செல்ல விரும்பலாம். எடுத்துக்காட்டாக கர்சர் உள்ள வரிக்கு பத்து வரிகள் பின்னால் செல்ல வேண்டும் எனில், Line என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், Enter Line Number என்பதில் +10 என டைப் செய்து, அடுத்து எணி கூணி என்பதில் கிளிக் செய்திடவும்.
கர்சர் பத்து வரி பின்னதாகச் செல்லும். முன்பகுதியில் 7 வரிகள் முன்னதாகச் செல்ல வேண்டும் எனில் –7 என அமைத்து கிளிக் செய்திடலாம்.
விண்டோஸ் Safe Mode ஏன் ? எதற்காக?
குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?
வழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது. இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.
1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.
2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.
3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.
4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில் testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.
5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sys என்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.
6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு ( batch ) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் ( Virtual Device Drivers – VxDs ) என்று அழைக்கப்படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.
7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.
8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது. நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.
சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும். அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும். இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம். ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.
கணனியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்களை அறிய
விவரங்களை அறிய
1. முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி
தண்ணீர் மூலம் இயங்கும் கார்: வாலிபரின் சாதனை
இவர் தண்ணீரில் இயங்க கூடிய காரை வடிவமைத்துள்ளார். சோதனை முயற்சியாக 3 லிட்டர் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி 300 km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார். தண்ணீரில் இயங்க கூடிய இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுவது சுற்று சூழலிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இல்லை என்பதே.
வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இவரது தொழிநுட்பத்தை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டும், இந்த தொழில்நுட்பத்தை தாய் நாட்டிற்காக சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்து விட்டார்.
Subscribe to:
Posts (Atom)