Search This Blog

Pages

Tuesday, February 15, 2011

சேவ் பண்ணாத கோப்புகளை திரும்பப் பெற

எம்.எஸ். ஓபீஸ் தொகுப்பில் ஏதேனும் ஒரு வேர்ட், எக்ஸெல் தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள்.
நம்மில் பலர்  அந்த முழு பைலையும் முடித்த பின்னர் தான் அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம். முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம்.
ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ் செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஆப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஆப்ஷன் கிளிக் செய்துவிடுவார்கள்.
அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள். வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தால் மீண்டும் அந்த பைலை உருவாக்குவார்கள். இவர்களுக்காகவே எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பில் AutoRecover என்ற ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை சேவ் செய்யப்படாத பைல்களையும் சேவ் செய்திடும் வகையில் செட் செய்திடலாம்.
இதை செயல்படுத்திட File டேப் கிளிக் செய்து, அதில் Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். ஆப்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் இடது பக்கம் உள்ள Save பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
வலது பக்கம் Save last auto saved version if I close without saving என்று இருப்பதனை செக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனிமேல் நீங்கள் சேவ் செய்திடாத பைலையும், மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.
சேவ் பண்ணாத பைலை திரும்ப பெறுவதற்கு File டேப் செல்லவும். இந்த டேப்பில் Recent என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனடியில் கிடைக்கும் தகவல்களில் கீழாக வலது மூலையில் Recover Unsaved Documents என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
இதனை கிளிக் செய்தவுடன், உங்களை புரோகிராம் தானாக நீங்கள் சேவ் செய்யாத பைலை சேவ் செய்திட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கே இத்தகைய பைல்கள் அனைத்தும் இருக்கும். உங்களுக்கு அப்போது எந்த பைல் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து பின்னர் Open என்பதில் கிளிக் செய்திடவும். பைல் திறக்கப்படும்.

No comments:

Post a Comment