Search This Blog

Pages

Wednesday, January 12, 2011

4 பேர் மரணம் 7 லட்சம் பேர் பாதிப்பு 50 ஆயிரம் பேர் இடம்பெயர்வு உடமைகளுக்கு பலத்த பாதிப்பு !


கண்டி, மாத்தளை, தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் பல இடங்களில் மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது அந்த பகுதிகளில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன் இன்னும் பல கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் இலங்கையின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 7 லட்சம் பேர் பாதிக்கபடுள்ளதாகவும் 50 ஆயிரம் பேர்வரை இடம்பெயர்ந்துளதாகவும் இதுவரை 4 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டகளப்பு, காத்தான்குடி, கல்முனை , சாய்ந்தமருது , நிந்தவூர், பொத்துவில் ஓட்டமாவடி, திருகோணமலை கின்னியா, மூதூர் போன்ற பிரதேசங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது அங்கு கடல்படை, விமானபடை ஆகியவற்றின் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் மீட்கப்பட்டு   விரிவாக வருகின்றனர் என்று அறிவிக்கப்ட்டுள்ளது மத்திய மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் நாளை பாடசாலைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பேராதனை இரண்டாம் ராஜசிங்க வீதியில் இடம்பெற்ற மண்சரிவில் 5 வீடுகள் புதையுண்டு இருப்பதாகும். இவற்றுள் 15 பேர் வரையிலானோர் புதையுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 6 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அம்பிட்டிய மொனரங்க மரியவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட இருவரில் 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும். மற்றையவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் பாரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் 90 வரையான முகாம்கள் அமைக்கபட்டு மக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment