Search This Blog

Pages

Wednesday, January 12, 2011

கடும் மழையால் முற்றாக மூழ்கியுள்ள மருதமுனை

100% of the Maruthamunai is under water now due to the continuous rain. People from the 
France city and 65m housing scheme were displaced to Shams Central College already. If sources to believe says that the particular people also have again move to Al-Manar Central College. Now most of the Maruthamunai people have lost their belonging due to this continuous rain.


We, Maruthamunai Online team ask you to help the people who not capable even to full fill their basic needs. Also we ask the organizations to share the resource to entire Maruthamunai without targeting a group of people.



தொடர்ந்து பெய்து வரும் கடும் அடை மழையினால் மருதமுனை மேட்டுவட்டைப் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச வைத்தியசாலைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
மேலும் இந்த வைத்தியசாலைக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி வளாகத்துக்குள் நான்கு அடி வெள்ள நீர் தேங்கியுள்ளது
இப்பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கியுள்ளது


பிரஞ்ச் சிட்டிவீட்டுத்திட்டம், யூ. என். ஹெபிடாட் வீட்டுத்திட்டம் என்பன முற்றாக வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இங்கு குடியிருந்த மக்கள் கூன்று மாடிக் கட்டடமான மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்குள் இடம் பெயர்ந்துள்ளனர்

மேலும் அக்பர் கிராமத்திலுள்ளவர்கள் அக்பர் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கட்டடங்களிலும், மக்பூலியாப் பிரதேசத்திலுள்ளவர்கள் மக்பூலியா பள்ளிவாசலிலும், ஏனையோர்கள் அல் - மதீனா வித்தியாலயத்திலும், சிலர் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் இடம் பெயர்ந்துள்ளனர்

பொது நிறுவனங்கள், தனவந்தர்களின் உதவியினாலும், கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment