படம் : புதிய முகம்
பாடல் : கண்ணுக்கு மை அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
(கண்ணுக்கு மை...)
மழை நின்ற பின்னாலும் இல்லை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு (2)
இளமாரும் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு
(கண்ணுக்கு மை...)
ஆனந்த மஞ்சத்தில் அவழ்ந்தாலும் குழல் அழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு
(கண்ணுக்கு மை...)
No comments:
Post a Comment