இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கதே மிடில்டன் திருமணம் கடந்த 29 ம் திகதி லண்டனில் கோலாகலமாக நடந்தது.
இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. தற்போது அவை மென்தட்டுகளாக மாற்றி விற்பளை செய்யப்பட உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளில் மென்தட்டு மற்றும் கணணிகளில் தரவிறக்கம் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து கிடைக்கும் நிதி முழுவதும் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹேரி அறக்கட்டளைக்கு வழங்கப்படும். இளவரசர் வில்லியம் திருமண வீடியோ மென்தட்டில் கிடைக்கும். மேலும் பி.பி.சி. தொலைக்காட்சியின் 2 மணி நேர வீடியோ தலா 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மென்தட்டு விற்பனையில் கிடைக்கும் பணத்தின் மூலம் போரில் காயமடைந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான போர் வீரர்கள் மற்றும் ஊனமுற்ற இளைஞர்கள் பயன் அடைவார்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகும். எனவே வழக்கத்துக்கு மாறாக இதை மிக விரைவில் வெளியிட உள்ளோம் என பி.பி.சி. தொலைக்காட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து, பாகிஸ்தான் அரசுக்குக் கூட தெரிவிக்காமல் பின்லேடனை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் இறையாண்மையை மீறி விட்டது அமெரிக்கா.
முன்னாள் பாகிஸ்தான் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப், தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இதுதொடர்பாக சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஒசாமா பின் லேடன் வீழ்த்தப்பட்டது வரவேற்புக்குரியது. தீவிரவாதத்திற்குக் கிடைத்துள்ள பெரிய அடி என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம், பாகிஸ்தான் மண்ணுக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் அரசுக்குக் கூட தெரிவிக்காமல் பின்லேடன் வேட்டையை அமெரிக்கா மேற்கொண்டது அத்துமீறிய செயல். பாகிஸ்தான் இறையாண்மையை மீறிய செயலாகும். பாகிஸ்தானுக்குள் அமெரிக்கப் படைகள் வருகின்றன, தாக்குதல் நடத்துகின்றன, திரும்புகின்றன. இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது சரியல்ல.
பாகிஸ்தான் அரசையும் இதில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அந்நிய படையினர் பாகிஸ்தான் மண்ணுக்குள் அத்துமீறி நுழைவதை பாகிஸ்தான் மக்கள் விரும்ப மாட்டார்கள். பாகிஸ்தான் எல்லையை மீறி அமெரிக்கப் படையினர் வந்திருக்கக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபடும் போது ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும். நம்பிக்கை தான் இங்கு அவசியம், முக்கியம். ஆனால் பாகிஸ்தான் அரசை நம்பாமல் அமெரிக்கப் படையினர் செயல்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இது மோசமானது.
பின்லேடன் அப்போத்தாபாத்தில் தங்கியிருந்த போது அவருக்கு பாகிஸ்தான் அரசுத் தரப்பில் சிலர் உதவியதாக கூறப்படுவது தவறானதாகும். அதற்கான வாய்ப்பே இல்லை. அதேபோல பாகிஸ்தான் தரப்பிலும் உளவுப் பிரிவினர் தவறு ஏதும் செய்யவில்லை.அமெரிக்க உளவுப்படையினரிடம் உள்ள வசதிகள் பாகிஸ்தானிடம் இல்லை. இதுதான் பின்லேடன் குறித்த தகவலை முன்கூட்டியே பெற முடியாமல் போனதற்குக் காரணம். பின்லேடனின் மரணம் பாகிஸ்தான் மக்களுக்கும், உலக மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை என்றார் முஷாரப்.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம் மரபணு சோதனைக்குப் பின்னர் லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.
பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால் அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறிவிடும் என்ற காரணத்தால் உடலை தரையில் புதைக்காமல் கடலில் வீசியுள்ளது அமெரிக்கா.
அப்போத்தாபாத்தில் நடந்த சண்டையில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், உடலை வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றது. அந்த இடம் ஆப்கானிஸ்தான் என்று கூறப்படுகிறது. பின்னர் அவரது முகம் மற்றும் உடல் பாகங்களை வைத்து பின்லேடனை அடையாளம் காண்பதற்கான மரபணு சோதனைகளை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து பின்லேடனின் உடலை கடலில் புதைத்து விட்டனர், அதாவது வீசி விட்டனர்.
இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் கையாளப்பட்டதாகவும், உடல் அடக்கம் நடந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு அவர்கள் விளக்கம் தரவில்லை. உடலை ஏதாவது ஒரு இடத்தில் புதைத்தால் அது நினைவிடமாக மாறி விடலாம் என்பதால் அதைத் தவிர்க்கவே கடலில் உடலை வீசியதாக தெரிகிறது.
கடலில் எந்த இடத்தில் உடல் வீசப்பட்டது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இதனால் உடல் உண்மையிலேயே கடலில் தான் வீசப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
American News ஒசாமா பின்லேடன் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஓபரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.
சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லேடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான்.
இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான்.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்க இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா.
இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில் தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர்.
இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று ஒசாமா அமெரிக்க படையின் ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இந்த முறை ஒசாமா பலி உறுதி செய்யப்பட்டுள்ளது. இவனது உடலை டி.என்.ஏ பரிசோதனை மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.
சமீபத்தில் அல்குவைதா வெளியிட்ட சீ.டியில் தங்கள் தலைவர் ஒசாமாவை கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒபாமா கொல்லப்பட்டிருக்கிறான்.
நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள் புகலிடத்தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று காட்டும் கதை.
கிழக்கிலங்கை தந்த எழுத்தாளர் ஹனிபாவின் 15 சிறுகதைகள் இதில் அடங்கியிருக்கின்றன. இன்சான், இளம்பிறை, சுதந்திரன், சுடர், வீரகேசரி, சிந்தாமணி, பூரணி, கணையாழி, பாமிஸ் ஆகிய இதழ்களில் வெளியான இக்கதைகளில் கிழக்கிலங்கை வாழ்க்கைமுறையினை மானுஷீகத்தின் அழகு சிதையாமல் காட்ட முனைகிறார்.
ஈழத்தின் கலை இலக்கியத் துறையில் ஏற்கெனவே அறிமுகமான கோவிலூர் செல்வராஜன் புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் தற்போது வாழ்கின்றார். தமிழ் உணர்வுகளினாலும், ஆக்கங்களினாலும் நிரந்தர உபாசகராகத் தம்மை அங்கேயும் நிறுவியுள்ளார். நோர்வே நாட்டு வாழ்க்கைக் கோலங்கள், அதிலே தமிழர் எதிர்நோக்கும் அவலங்கள் ஆகியவற்றை நல்ல சிறுகதைகளாகப் படைத்துள்ளார். விடியாத இரவுகள் அத்தகைய படைப்புக்களையும் உள்ளடக்கிய அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். 1997இல் தமிழ்நாடு கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசுத்திட்டத்தில் இரண்டாவது பரிசினைப் பெற்ற நூல்.