இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கதே மிடில்டன் திருமணம் கடந்த 29 ம் திகதி லண்டனில் கோலாகலமாக நடந்தது.
இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. தற்போது அவை மென்தட்டுகளாக மாற்றி விற்பளை செய்யப்பட உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளில் மென்தட்டு மற்றும் கணணிகளில் தரவிறக்கம் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து கிடைக்கும் நிதி முழுவதும் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹேரி அறக்கட்டளைக்கு வழங்கப்படும். இளவரசர் வில்லியம் திருமண வீடியோ மென்தட்டில் கிடைக்கும். மேலும் பி.பி.சி. தொலைக்காட்சியின் 2 மணி நேர வீடியோ தலா 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மென்தட்டு விற்பனையில் கிடைக்கும் பணத்தின் மூலம் போரில் காயமடைந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான போர் வீரர்கள் மற்றும் ஊனமுற்ற இளைஞர்கள் பயன் அடைவார்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகும். எனவே வழக்கத்துக்கு மாறாக இதை மிக விரைவில் வெளியிட உள்ளோம் என பி.பி.சி. தொலைக்காட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment