Search This Blog

Pages

Monday, September 3, 2012

ஆப்கான் நேட்டோ தளத்துக்கு அருகில் தற்கொலைத் தாக்குதல்

0
ஆப்கானிஸ்தானின் மத்திய மாநிலமான வர்தாக்கில் அமைந்துள்ள நேட்டோ படைத்தளத்துக்கு அருகில் நடந்துள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 9 பொதுமக்களும் காவல்துறையினர் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரேய்ச்சல் கொலை வழக்கில் இஸ்ரேல் தீர்ப்பிற்கு ஐ.நா கண்டனம்!

UN
அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் ரேய்ச்சல் கோரியின் கொலையில் இஸ்ரேல் ராணுவத்திற்கு பங்கில்லை என்று கூறிய நீதிமன்ற தீர்ப்பை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.

தொழில்நுட்ப திருட்டு: சாம்சங் நிறுவனத்தின் மீதான ஆப்பிளின் வழக்கு தள்ளுபடி

samsung_vs_apple_v1
மென்பொருள் தொழில் நுட்பத்தை திருடியதாக சாம்சங் நிறுவனத்தின் மீது, ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஜப்பான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன் மொடல்களில் உள்ள மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பை தென்கொரியாவின் சாம்சங் பயன்படுத்தியதாகவும், காப்புரிமை பெற்ற இந்த தொழில்நுட்பத்தை திருடியதற்கு 5000 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரியும் பல்வேறு நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
ஆப்பிள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் சாம்சங் நிறுவனத்துக்கு 5,550 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஐ.என்.சி ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் கம்ப்யூட்டர் போன்றவற்றில் வீடியோ மற்றும் இசை பதிவுகளை பரிமாறும் மென்பொருள் தொழில்நுட்பத்தை திருடியதாக, சாம்சங்க்கு எதிராக டோக்கியோ நீதிமன்றத்தில் ஆப்பிள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி டமோட்சு ஷாஜி, சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் தயாரிப்புகளில் உள்ள தொழில்நுட்பங்கள் ஒரே மாதிரியானவையாக இல்லை. எனவே ஆப்பிள் நிறுவனத்தின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்படுகிறது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருமா..?

120817142306_sri_lanka_premier_league_624x351_slpl
உலகளவில் இருபது ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் மேலும் மேலும் பிரபலமடைந்து வரும் வேளையில், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைப் போன்றே இலங்கையிலும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று முடிந்தது.
இந்த வகை கிரிக்கெட் என்பது, ஒரு விளையாட்டு என்பதையும் கடந்து , தொலைக்காட்சியில், குடும்பத்துடன் கண்டு களிக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் லீக் எந்த அளவுக்கு மக்களிடையே வரவேற்பையும் வெற்றியையும் பெறும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த பிரீமியர் லீகின் ஒளிபரப்பு உரிமைகள் அளிக்கப்பட்ட விதம் கூட சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்தியாவின் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இலங்கைப் போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய வாரியம் தமது வீரர்களை அனுமதிக்காததும் இலங்கை தரப்பை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
பலவிதமான பிரச்சினைகளை கடந்து இப்போது நடைபெற்ற இலங்கை பிரீமியர் லீகில் அணிகளின் உரிமையாளர்களால் போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா என்பது இன்னமும் ஒரு பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.
போட்ட முதலீட்டையும் அதிலிருந்து இலாபத்தையும் எடுப்பதற்கு ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறுகிறார் இந்த லீகை நடத்தும் சோமர்செட் எண்டர்டெயின்மெண்ட் வென்சர்ஸ் அமைப்பின் தலைவர் சந்தீப் ப்ரெம்மர்.
எனினும் இதற்கான வர்த்தகச் சந்தை சிறியதாக இருப்பதாலும் இந்திய வீரர்கள் வராததன் காரணமாகவும் இலங்கை பிரீமியர் லீக் இப்போது பெரிதாக முன்னேற்றம் அடையவில்லை என்றும் ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இதில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தான் நம்புவதாக கூறுகிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ருஹுணு ராயல்ஸ் அணியின் பயிற்சியாளருமான வக்கார் யூனூஸ்.
இந்தப் போட்டிகளின் போது சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தை தடுக்கவும் ஊக்க மருந்து பயன்பாட்டை தடுக்கவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் விழிப்புணர்வுடன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதன் செயலர் நிஷாந்த ரணசிங்க கூறுகிறார்.

உலகளாவிய அள‌வி‌ல் உணவு பொரு‌ள் விலை உயர்வு – உலக வங்கி

World-Bank
உலகளாவிய அள‌வி‌ல் உணவு பொருட்களின் விலை 10 சத‌வீத‌ம் உயர்ந்துள்ளதா‌ல் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கோடிகணக்கான ஏழைகள் பாதிக்கபடுவார்கள் என உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.

உன் பெயராவது

உன் பெயரை என்
கைகளில் பொறித்தேன்
உன்னை மிகையாக
காதலிக்கிறேன்
என்று காட்ட அல்ல
...
என் இறுதி ஊர்வலத்தில்
உன் பெயராவது
என்னுடன் வரட்டுமே
என்று தான்....

சத்தியமாய் சாத்தியமாகாது

எத்தனை ஜென்மம் சென்றாலும்
சத்தியமாய் சாத்தியமாகாது
உன் நினைவு களைவது......

ஒற்றை முத்தம்

எத்தனை முறை
தோற்றாலும் பரவாயில்லை...
அன்பாய் நீ தரும்
ஒற்றை முத்தம்
எனக்கு கிடைக்குமாயின்...

Bottomless Pit - Monticello Dam Drain Hole

enna koduma sir ithu.....................