Search This Blog

Pages

Monday, September 3, 2012

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருமா..?

120817142306_sri_lanka_premier_league_624x351_slpl
உலகளவில் இருபது ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் மேலும் மேலும் பிரபலமடைந்து வரும் வேளையில், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைப் போன்றே இலங்கையிலும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று முடிந்தது.
இந்த வகை கிரிக்கெட் என்பது, ஒரு விளையாட்டு என்பதையும் கடந்து , தொலைக்காட்சியில், குடும்பத்துடன் கண்டு களிக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் லீக் எந்த அளவுக்கு மக்களிடையே வரவேற்பையும் வெற்றியையும் பெறும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த பிரீமியர் லீகின் ஒளிபரப்பு உரிமைகள் அளிக்கப்பட்ட விதம் கூட சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்தியாவின் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இலங்கைப் போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய வாரியம் தமது வீரர்களை அனுமதிக்காததும் இலங்கை தரப்பை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
பலவிதமான பிரச்சினைகளை கடந்து இப்போது நடைபெற்ற இலங்கை பிரீமியர் லீகில் அணிகளின் உரிமையாளர்களால் போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா என்பது இன்னமும் ஒரு பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.
போட்ட முதலீட்டையும் அதிலிருந்து இலாபத்தையும் எடுப்பதற்கு ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறுகிறார் இந்த லீகை நடத்தும் சோமர்செட் எண்டர்டெயின்மெண்ட் வென்சர்ஸ் அமைப்பின் தலைவர் சந்தீப் ப்ரெம்மர்.
எனினும் இதற்கான வர்த்தகச் சந்தை சிறியதாக இருப்பதாலும் இந்திய வீரர்கள் வராததன் காரணமாகவும் இலங்கை பிரீமியர் லீக் இப்போது பெரிதாக முன்னேற்றம் அடையவில்லை என்றும் ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இதில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தான் நம்புவதாக கூறுகிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ருஹுணு ராயல்ஸ் அணியின் பயிற்சியாளருமான வக்கார் யூனூஸ்.
இந்தப் போட்டிகளின் போது சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தை தடுக்கவும் ஊக்க மருந்து பயன்பாட்டை தடுக்கவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் விழிப்புணர்வுடன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதன் செயலர் நிஷாந்த ரணசிங்க கூறுகிறார்.

No comments:

Post a Comment