மென்பொருள் தொழில் நுட்பத்தை திருடியதாக சாம்சங் நிறுவனத்தின் மீது, ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஜப்பான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன் மொடல்களில் உள்ள மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பை தென்கொரியாவின் சாம்சங் பயன்படுத்தியதாகவும், காப்புரிமை பெற்ற இந்த தொழில்நுட்பத்தை திருடியதற்கு 5000 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரியும் பல்வேறு நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
ஆப்பிள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் சாம்சங் நிறுவனத்துக்கு 5,550 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஐ.என்.சி ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் கம்ப்யூட்டர் போன்றவற்றில் வீடியோ மற்றும் இசை பதிவுகளை பரிமாறும் மென்பொருள் தொழில்நுட்பத்தை திருடியதாக, சாம்சங்க்கு எதிராக டோக்கியோ நீதிமன்றத்தில் ஆப்பிள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி டமோட்சு ஷாஜி, சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் தயாரிப்புகளில் உள்ள தொழில்நுட்பங்கள் ஒரே மாதிரியானவையாக இல்லை. எனவே ஆப்பிள் நிறுவனத்தின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்படுகிறது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment