BBC: நட்பு ரீதியாக கால்பந்து விளையாட்டில் கலந்துகொள்ள தமிழகத்துக்கு வந்த இலங்கை கால்பந்து குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார்.
Tuesday, September 4, 2012
இலங்கை அணியை வெளியேற்ற ஜெயலலிதா உத்தரவு
BBC: நட்பு ரீதியாக கால்பந்து விளையாட்டில் கலந்துகொள்ள தமிழகத்துக்கு வந்த இலங்கை கால்பந்து குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார்.
நம்பிக்கையீனத்கை போக்க கல்விக் கொள்கையில் மாற்றங்கள்- கல்வி அமைச்சின் செயலாளர்
TM: வினாத்தாளில் காணப்படும் பிழைகள், இஸட் புள்ளிகளின் ஒழுங்கீனம் ஆகிய முறைப்பாடகளைத் தொடர்ந்து பரீட்சைத் திணைக்களத்தின் மீதான மேற்பார்வைக்கு வலுவூட்டவும் அதன் செயற்பாடுகளை முழு அளவில் திருத்தியமைக்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரீட்சைகள் திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகளில் குறைபாடுகள் எவையும் ஏற்படாத வகையில் அதன் கடமைகளை மீள ஒழுங்கமைக்க தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரத்ன தெரிவித்தார்.
நாம், அதிகாரிகளின் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் அவர்களை மேற்பார்வை செய்தல் என்பவற்றில் கவனம் செலுத்தவுள்ளோம். செயன்முறை மற்றும் செயலொழுங்கு என்பவற்றைப் பற்றியும் மதிப்பீடு நடைபெறும். நாம் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்’ என அவர் கூறினார்.
இந்த விடயத்தில் நான் பொதுமக்களின் கருத்துக்களை வரவேற்கின்றேன். நான் புதன்கிழமைகளில் 500பேர் வரையிலானோரை சந்திக்கவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாடசாலைகளில் 20 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யப்போவதாக அவர் கூறினார்.
பாடசாலை நிர்வாக கட்டமைப்பில் செய்யவேண்டியுள்ள மாற்றங்களை நாம் இனங்கண்டுள்ளோம் என்று கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.
நாம் அறியாமல் போன அறிவின் விதைகள்
இருண்ட காலம் எவ்வாறு அறிவியலின் உச்சத்தை தொட்டது..?
அதற்குள் உலகம் அறியாமல் போன இரகசியம் என்ன..?
இவற்றை மீண்டுமொருமுறை நம் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே இது!
வரலாற்று பக்கங்கள் இரண்டு நிறங்களை கொண்டதாகும் முதலாவதானது கருப்பு அது அறிவு ஜீவிகளின் பேனா மை இரண்டாவதானது சிகப்பு அது தியாக செம்மல்களின் செங்குருதி இப்படியான இரண்டு மைகளையும் உள்ளடக்கியது தான் முஸ்லிம்களின் கடந்த கால வரலாறு.
முஸ்லிம்கள் எட்டு திக்கிலும் வீறு கொண்டு வெற்றி முரசு கொட்டிய காலத்தை நாம் உற்று நோக்கினால் நமக்கு புலப்படுவது இஸ்லாமிய அறிவியலின் முதிர்ச்சியும் முஸ்லிம் அறிஞர்களின் அறிவு ஞானமும் தான். அந்த அளவிற்கு மருத்துவம், கணிதம், புவியியல், உயிரியல், வானசாஸ்திரம் என எல்லா துறைகளிலும் முஸ்லிம்களின் ஆதிக்கம் இருந்தது. ஏன் இன்றைய அறிவியலின் அறிவு பெட்டகமாக விளங்கும் ஐரோப்பாவிற்கே அறிவியலை தந்தது முஸ்லிம்கள் தான் என்றால் அது மிகையாகது.
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம்’ என்னும் நூலில் கூறுகிறார் ஸ்பெயினின் எழுநூறு வருட முஸ்லிம்களின் ஆட்சி ஆச்சரியத்தை பயப்பதாக இருக்கிறது. அதைவிட பெரிய ஆச்சரியம் அரேபியரின் உயர்ந்த நாகரிகமும் கலைப் பண்புமேயாகும். ஐரோப்பா முழுவதும் அறியாமையிலும் போரிலும் மூழ்கிக்கிடந்த போது மேற்கு உலகிற்கே அறிவு, நாகரிகத்தின் ஒளியை பரப்பியது அரேபிய ஸ்பெயின் தான் என்று. அந்த அளவிற்கு அரேபிய ஸ்பெயினுடைய ஆட்சி சிறந்து விளங்கியிருகின்றது.
மேலும் ராபர்ட் பாரிபால்ட் என்னும் ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் தனது ‘மேகிங் ஆப் ஹுயுமாநிட்டி’ என்னும் நூலில் கூறுகிறார் அரேபியர்களின் வானவியல் ஒரு கோபர் நிக்கொசையோ அல்லது நியூட்டனையோ உருவாக்கவில்லை என்றாலும் அரேபியர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு கோபர் நிக்கொசோ, நியூட்டனோ உருவாகியிருக்க முடியாது என்று. அந்த அளவிற்கு விஞ்ஞான துறையில் அரேபியர்களுடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது.
இப்படி மேலோங்கி இருந்த முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலை அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆனால் நம் முன்னோர்களிடமிருந்து அறிவியல் கல்வியினை பெற்ற மேற்குலகினர் இன்று அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதை காணமுடிகின்றது. ஆக நம் சமூக முன்னேற்றத்திற்காக நம் முன்னோர்களின் வரலாறுகளையும் அதில் உள்ள படிப்பினைகளையும் ஆய்வு செய்து அதனை நம் வாழ்வினுள் உட்படுத்தினோம் என்றால் நம் சமூகத்தின் கடந்த கால வரலாறு திரும்பும் என்ற சீரிய நோக்கத்துடன் ஒரு மாற்றதிற்க்காகவே இந்தத் தொடர்…
இப்படி ஒரு அசம்பாவிதத்தை எங்காவது பார்த்ததுண்டா? (வீடியோ)
வீதி நாடகம் ஒன்றிற்காக ஒப்பனை செய்து கொண்டிருந்த கலைஞர் ஒருவரை பார்வையாளர் ஒருவருடன் வந்த நாய் வம்புக்கு இழுத்ததால், சற்றும் எதிர்பாராத இந்தச் சம்பவத்தினால் குறித்த கலைஞர் தடுமாறியுள்ளார்.
சிரியாவின் வீழ்ச்சி:விமானப்படை தளத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்
சிரியாவில் பஷர் அல்-ஆசாத் தலைமையின் கீழ் அதிபர் ஆட்சி நடந்து வருகிறது. ரஷ்யாவின் நேச நாடாக இருக்கும் சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள்.
இந்த புரட்சிப் படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு ராணுவத்தினர் மீது புரட்சிப் படையினர் எதிர் தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.
புரட்சிப் படையினர் பதுங்கியுள்ள இடங்களின் மீது விமானப் படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். விமானப்படையின் பலத்தை குறைத்துவிட்டால், அதிபரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என திட்டமிட்டு புரட்சிப்படையினரும் விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் சிரியாவின் விமானப்படை தளத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். புரட்சிப் படையினர் அங்கிருந்த 16 விமானப்படை வீரர்களையும் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் சிரியா முழுவதும் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 74 பொதுமக்கள், 29 ராணுவத்தினர், 29 புரட்சிப்படையினர் என 125 பேர் கொல்லப்பட்டனர். அல்பு கமால் பகுதியில் உள்ள மிக முக்கியமான விமானப்படை தளத்தை கைப்பற்றிய புரட்சிக்காரர்கள் அங்கிருந்த ஏவுகனைகளையும் தங்கள் வசம் ஆக்கிக் கொண்டனர்.
இதன் மூலம் சிரியா அரசின் விமான தாக்குதல் முடிவுக்கு வரும் என இங்கிலாந்தைச் சேர்ந்த போர் கண்காணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானப்படை தளத்திலிருந்து பறந்த போர் விமானங்கள் தான் கடந்த வாரம் 60ஆயிரம் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் குண்டுகளை வீசி தாக்கியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிர் இழந்தனர்.
இப்போது இதற்கு பழிதீர்க்கும் வகையில் விமானப்படை தளத்தை புரட்சி படையினர் தாக்கி கைப்பற்றிவிட்டனர். இது சிரியா அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
போலியான கணக்குகள் மூலம் நண்பர்களின் முகநூல் கணக்கினை அபகரிக்கமுடியும்
உஷார்!!!
போலியான கணக்குகளை அனுமதிப்பவர்களுக்கு ஆபத்து
இந்த செயல் மிகசாதாரணமானதன்று ஏனெனில் முகநூல் கணக்குகளானது மிக கடுமையான பாதுகாப்புடன் அமைக்கபட்டுள்ளன.
இந்த முகநூல் கணக்கில் கடவுச்சொற்கள் மறந்துவிட்டால் அதனை மீட்பதற்காகThreeTrusted Friends feature என்ற வசதியுள்ளது. இதுவே முகநூல் கணக்கினை அபகரிப்பு செய்பவர்களுக்கான நுழைவுவாயிலாக அமைந்துள்ளது இதுவே முகநூலின் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாகும் இதில்bruteforcing,dictionaryattacks,DDOSattackபோன்றவைகள் செயல்படமுடியாது.
ஆனால்Keyloggers,Phishingwebsitesபோன்றவைகள் தாக்குதலுக்கான மாற்றுவழியாக இருந்தாலும் அவைகளும் இந்த முகநூலில் செயல்படுத்த சிரமமாகும் அதனால் இந்தThreeTrustedFriendsfeatureஎன்ற வசதிமூலம் மூன்று போலியான முகநூல் கணக்குகளை (fakeFacebookaccounts)உருவாக்கி அபகரிக்க விரும்பும் நண்பர்களின் கணக்கில் பட்டியலிடசெய்து அதன்பின் குறிப்பிட்ட முகநூல் கணக்கினை அபகரிக்கலாம்.
இது உண்மையில் முகநூல் கணக்கிற்கு பாதிப்பெதுவும் ஏற்படுத்தாது இணையஉலாவியில் முகவரிபட்டையில் இந்த ஜாவாஸ்கிரிப்ட் இயங்கசெய்து சரிபார்க்கலாம்.
இதற்காக internet explorer,google chrome,firefox ஆகிய ஏதேனுமொரு இணையஉலாவியை செயல்படுத்துக பின்னர் அதில் இந்த facebook இணைய பக்கத்தை திறந்து கொள்க உலாவியின் முகவரி பட்டையில் பின்வரும் ஜாவா வரிகளைவெட்டிஒட்டும் செயல்மூலம் நகலிடுக javascript:document.body.contentEditable=’true’; document.designMode=’on’; void 0 இதன்பின்நாம் விரும்பும் செயலை செய்திடுக இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே அதாவது இந்த இணையபக்கத்தை ரீஃபிரஸ் செய்தால் இந்த செயல் மறைந்துவிடும் என்பதை மனதில் கொள்க இந்த ஜாவா வரியில் உள்ள javascript:document.body.contentEditable=’true’; என்ற பகுதியானது நம்முடைய உலாவியின் மூலம் ஏதேனுமொரு இணையபக்கத்தை திருத்தம் செய்ய உதவுகின்றது.
document.designMode=’on’;என்ற பகுதியானது அந்த இணையபக்கத்தின் வடிவமைப்பு நிலையை செயலுக்கு கொண்டுவருகின்றது void 0என்ற பகுதியானது பிழையெதுவும் சுட்டிகாட்டவேண்டாம்எனகுறிப்பிடுகின்றது இந்த ஜாவா வரிகளை பயன்படுத்தி முகநூல் கணக்கினை அபகரிக்குமாறு செய்யலாம்.
நெருங்கும் மறுமையும் அதன் சில அடையாளங்களும்
தொழில்நூட்ப உலகில் தொலைந்துவிட்ட எம் மனதை சற்று நிறுத்தி நாம் இதனை கேட்டுப் பார்ப்போம் மறுமை எம்மை நெருங்கிவிட்டதாக சொல்லுவது உண்மையா? இல்லையா? என்று இதில் எத்தனை நடந்து முடிந்துவிட்டன இனி நடக்கப்போவது என்ன என்பதனை நாம் தெறிந்து கொள்ள வேண்டாமா?
மகளின் தயவில் தாய்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4777, 50)
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி 50
குடிசைகள் கோபுரமாகும்
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 7121
விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ‘எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள். நூல் : புகாரி 59, 6496
பாலைவனம் சோலை வனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது நூல் : முஸ்லிம் 1681
காலம் சுருங்குதல்
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். நூல் : திர்மிதீ 2254)
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். நூல் : திர்மிதீ 2254)
கொலைகள் பெருகுதல்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல் : புகாரி 85, 1036, 6037, 7061
நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல்: புகாரி 1036, 7121
பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016, 12079, 12925, 13509.
நெருக்கமான கடை வீதிகள்
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: அஹ்மத் 10306
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: புகாரி 81, 5231, 5577, 6808
ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும். நூல் : முஸ்லிம் 3971, 5098
உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 11365
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493
பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493
சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: புகாரி 7115, 7121
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: புகாரி 3609, 7121
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
‘உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள். நூல்: புகாரி 3456, 7319
யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ‘முஸ்லிமே இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும். நூல்: புகாரி 2926
கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ‘கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி. நூல் : புகாரி 5179
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.நூல் : புகாரி 7119
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.நூல் : புகாரி 3517, 7117
அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 5183
எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 5191
செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. நூல் : புகாரி 1036, 1412, 7121
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். ‘நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 1424
மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள். நூல் : புகாரி 3609, 7121, 6936
பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நூல் : புகாரி 3176
மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 2451
அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 3546
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 3546
மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – (அதிசயப்) பிராணி
4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 – ஈஸா (அலை) இறங்கி வருவது
6 – யஃஜுஜ், மஃஜுஜ்
7 – கிழக்கே ஒரு பூகம்பம்
8 – மேற்கே ஒரு பூகம்பம்
9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 – இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.
புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும். (அல்குர்ஆன் 44:10,11)
உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள். (அல்குர்ஆன் 21:96)
ஈஸா(அலை) அவர்களின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)
மூன்று பூகம்பங்கள்
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்
பெரு நெருப்பு
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
Monday, September 3, 2012
அணு ஆயுதமில்லாத பிராந்திய முயற்சி: ஈரானுக்கு பான் கீ மூன் புகழாரம்!
மேற்காசியாவை அணு ஆயுதம் இல்லாத பிராந்தியமாக மாற்ற ஈரான் நடத்தும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் புகழாரம் சூட்டியுள்ளார்.
பள்ளிகள் உடைக்கப்பட்டதாக நிரூபித்தால் பதவி விலகுவேன்: அஸ்வர்
இலங்கையில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலுள்ளவர்களாவது அப்பள்ளி உடைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னால் நான் அனைத்துப் பதவியையும் விட்டு இராஜினாமாச் செய்வேன். இந்தச் சவாலை ஏற்று என்னை எந்தப் பள்ளிக்காவது கூட்டிச் செல்லுங்கள்’ என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று சவால் விடுத்தார்.
ஆதிக்க சக்திகளை எதிர்த்து நிற்க முடியும் என்பதை ஈரானும் இலங்கையும் நிரூபித்துள்ளன: அலி கமேனி
மேலாதிக்க சக்திகளை எதிர்த்து நிற்க முடியும் என்பதை ஈரானும் இலங்கையும் நிரூபித்துள்ளதாக ஈரானிய ஆன்மீக தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)