TM: வினாத்தாளில் காணப்படும் பிழைகள், இஸட் புள்ளிகளின் ஒழுங்கீனம் ஆகிய முறைப்பாடகளைத் தொடர்ந்து பரீட்சைத் திணைக்களத்தின் மீதான மேற்பார்வைக்கு வலுவூட்டவும் அதன் செயற்பாடுகளை முழு அளவில் திருத்தியமைக்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரீட்சைகள் திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகளில் குறைபாடுகள் எவையும் ஏற்படாத வகையில் அதன் கடமைகளை மீள ஒழுங்கமைக்க தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரத்ன தெரிவித்தார்.
நாம், அதிகாரிகளின் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் அவர்களை மேற்பார்வை செய்தல் என்பவற்றில் கவனம் செலுத்தவுள்ளோம். செயன்முறை மற்றும் செயலொழுங்கு என்பவற்றைப் பற்றியும் மதிப்பீடு நடைபெறும். நாம் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்’ என அவர் கூறினார்.
இந்த விடயத்தில் நான் பொதுமக்களின் கருத்துக்களை வரவேற்கின்றேன். நான் புதன்கிழமைகளில் 500பேர் வரையிலானோரை சந்திக்கவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாடசாலைகளில் 20 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யப்போவதாக அவர் கூறினார்.
பாடசாலை நிர்வாக கட்டமைப்பில் செய்யவேண்டியுள்ள மாற்றங்களை நாம் இனங்கண்டுள்ளோம் என்று கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment