Search This Blog

Pages

Saturday, April 30, 2011

A van belong to Maruthamunai met with an accident


A van from Maruthamunai met with an accident yesterday night near Mannampitiya. Seven people were travelling and reports says that only one left and other six were dead. The four bodies were found while 2 people are still reported missing.

The victims were travelling from Kalmunai to Colombo at the time of the incident. Four bodies were recovered and sent to the Polonnaruwa hospital mortuary.
Dr. Aasick and his family were the people who were engaged in this accident. He was working as a doctor in Oman and he visited his home land for his vacation. Also he is the only person who is left from the accident.

மட்டக்களப்பு- கொழும்பு வீதியில் விபத்து: ஐவரைக் காணவில்லை


  மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி மன்னம்பிட்டிய பகுதியில் வேன் ஒன்று நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் ஐவர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ் விபத்தில் சிக்கியதாகவும் இவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்;டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இதேவேளை வேனில் இருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். _

Thursday, April 28, 2011

இலக்கணச் சுருக்கம்

1873இல் முதற்பதிப்பாக தவத்திரு ஆறுமுகநாவலர் அவர்களால் வெளியிடப்பட்ட அரியநூலான இலக்கணச் சுருக்கம், தனது 25வது பதிப்பை காண்பதிலிருந்து இந்நூலின் முக்கியத்துவம் அறியப்படக்கூடிதாகும்.

வீ

ஒரு பூவின் பருவத்தை பல்வேறு தமிழ்ப் பெயர்களில் குறிப்பிடுகின்றோம். கன்னி, நுகும்பு, அரும்பு, மொட்டு, முகை, போது, மலர், அல், வீ, என்பன அவை. வீ என்பது Pழடடரயெவநன கடழறநச. பூத்தன்மையை இழந்து சூலுற்று காய்த்தன்மையைப் பூடகமாக உள்வாங்கிய நிலை. எஸ்பொ தன் இலக்கியப் பயணத்திலும் அத்தன்மையைப் பெற்றுவிட்டதன் குறியீடாக இந்த முதற் சிறுகதைத் தொகுதிக்கு இத்தலைப்பினை இட்டுள்ளார். இந்நூலில் 1946ம் ஆண்டிலிருந்து எழுதப்பெற்ற சிறுகதைகளுள் தேர்ந்த 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கால்நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஈழத்தமிழ் மக்களின் வாழ்வையும் வளத்தையும் இந்நூலில் தரிசிக்கலாம். மித்ர வெளியீட்டகத்தின் முதல் வெளியீடு இதுவாகும்.

அ. முத்துலிங்கம் கதைகள்

தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஆசிரியரின் 77 சிறுகதைகள் இப்பெருந்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை புலம்பெயர்ந்த நாடிழந்த ஒருவரின் கதைகள். இவரது ஆக்கங்களில் இவ்வேக்கம், தவிப்பு வெளிவருவதில்லை. ஆனால் அவரது சகல கதைகளினதும் அடிநாதமாக இந்த மனநிலை புதையுண்டு கிடக்கின்றது. புலம்பெயர்ந்து வாழ்வதால் எதிர்கொள்ளும் இழப்புக்களின் ஈடுகட்டலாக இவரது கதைகளில் மொழியின் மீதான இம் மீள்பயணம் நிகழ்கின்றது. யூதர்கள் இரண்டாயிரம் வருடம் தங்கள் நிலத்தை மொழியில் சுமந்துதான் உலகமெல்லாம் அலைந்தார்கள். மண்ணும் தேசமும் விதைவடிவில் இக்கதைகளில் கருக்கட்டியுள்ளன. யூதர்கள் தம் மொழியை நட்டுத் தம் தேசத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் உருவாக்கியது போல, முத்துலிங்கத்தின் கதைகளுக்குள் உலர்ந்து நீளுறக்கத்தில் மூழ்கிய விதைகள் ஒரு மழையில் முளைத்துக் காடாக மாறமுடியும்.

மிக அதிகாலை நீல இருள்

ஆத்மாவின் கவிதைகளில் ஆங்காங்கே உயிர்கூடத் தொடங்கியிருக்கி;ன்றது. வரண்ட தரையில் மழைக்கு முளைத்தெழும் பசிய புற்களைப் போல பசுமையாக, குளுமையாக. அதைவிடப் பெரிய விடயம், கவிதைக்கு உயிர் முக்கியம் என்பது இந்த ஆத்மாவுக்கு விளங்கியிருப்பது, அது போதும். - சோலைக்கிளி (முன்னுரையில்)

வாழ்ந்து வருதல்

வாசுதேவனின் 27 கவிதைகள் இன்றைய ஈழத்து வாழ்வின் நெருக்குதல்களை கவிதைப் படிமங்களாக வெளிக்கொண்டு வருகின்றன. கலாநிதி எம்.ஏ.நுஃமானின் முன்னுரை கவிதைகளுக்கு காத்திரமான விமர்சனமாகின்றது.

பொறியில் அகப்பட்ட தேசம்

காலனித்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்புக்;குரலான இவ்வரசியல் கவிதை 2001 செப்டெம்பர் 11 அமெரிக்காவில் நடந்த விமானத் தற்கொலைத் தாக்குதல் ஏற்படுத்திய சர்வதேச அதிர்ச்சியின் கிளர்ச்சியாகவும் அமைந்துள்ளது. காலம் காலமாக அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்ளோடியிருந்த உலகின் கண்டனப் பார்வை இங்கு இலக்கிய வெளிப்பாடாகியுள்ளது. அதே வேளை இதே அமெரிக்காவே முற்போக்குச் சக்திகளின் உருவாக்கத்திற்கும் அவற்றின் போராட்டத்திற்கும் விளைநிலமாக இருந்திருக்கின்றது என்பதையும் மறக்க முடியாது. சமாந்தரமாக அத்தகைய போக்கும் இங்கே அவிழ்கின்றது. தினக்குரலில் தொடராக வெளிவந்த கவிதைத் தொடர் இது.

வன்னி மான்மியம்

மண் பட்டினங்கள், பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் 3, வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்குப் போதல் ஆகிய நான்கு பரிசோதனைக் கதைகளின் தொகுப்பு. மண்பட்டினங்கள், தமிழர்களின் பூர்வீகத்தை அடிநாதமாகக் கொண்டு அவர் தம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் உட்கொண்ட தொடர்வரலாறு. மற்றைய மூன்றும் வன்னியின் வேர்களை ஊடுருவி வரலாற்றுச் சம்பவங்களையும் ஐதீகங்களையும் நிகழ்காலச் சம்பவங்களுடன் இணைப்பதன் மூலமான பேசுகையாக அமைந்தவை. பின்னுரையாக நிலாந்தனின் படைப்புக்கள் பற்றிய மு.திருநாவுக்கரசு, கருணாகரன் ஆகியோரின் மதிப்பீடுகளும் இடம்பெற்றுள்ளன.

மண்பட்டினங்கள்

அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புக்களில் மிகவும் தனித்துவமானது. வரலாறு, நாடகம் என்னும் ஊடகங்களிடையே கவிதையை ஓடவிட்டும், கவிதை, நாடகம், வரலாறு என்னும் இலக்கிய உருவங்களின் கலப்பாகவும் அவற்றின் உடைப்பாகவும் மண்பட்டினங்கள் அமைகின்றது. தமிழ்மக்களுக்கு அவர்களின் வரலாற்றுணர்வை ஏற்படுத்தவும், அதன்வழிவரும் எழுச்சியை பிரயோகப்படுத்துவதற்குரியதாக வழிகாட்டும் அரங்க அளிக்கையாகவும் இந்நூலை நிலாந்தன் ஆக்கித்தந்துள்ளார்.

உயிர்வெளி

சமகாலக் காதல் கவிதைகள் காதலின் பல்வெறு சாயைகள் பற்றிப் பேசும் அதே சமயம் காதல் பற்றிய பெண்களின் நவீன சிந்தனையோட்டத்தையும் காட்டுகின்றன. காதல் பற்றிய விவாதத்தையும் எழுப்பகின்றன. மனிதருக்கிடையேயான உறவில் ஏற்படும் பல்வேறு சுழிப்புகளும் ஏற்ற இறக்கங்களும் காதலர்களுக்கு இடையேயும் ஏற்படுவது இயல்பேயாகும். இத்தகைய சிக்கல்களையும் பன்முகத் தன்மைகளையும்கூட இவை எடுத்துக்காட்டுகின்றன. இவ்வகையில் காதலின் பல்பரிமாணத் தன்மையை இக்கவிதைகள் தொட்டுச் செல்கின்றன.
உயிர்வெளி (1.39 MB)

விலங்கிடப்பட்ட மானுடம்

இன்றைய ஈழத்துப்பெண்களின் கலாசார விழிப்புணர்வையும் சம காலப் பிரச்சினைகள் பற்றிய அவர்களது பிரக்ஞையையும் வெளிப்படுத்தும் 20 கவிதைகளின் தொகுப்பு. பெண்(1983) என்ற கவிதை தவிர்ந்த அனைத்தும் 1990-95ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்டவை. சுல்பிகா, சமூகப் பிரக்ஞை கொண்ட ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் எண்பதுகளின் பிற்பகுதியில் வந்து சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர் சுமார் 10 ஆண்டுக்காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளொமா பட்டம் பெற்ற இவர் இலங்கை தேசிய கல்வி நிறவனத்தில் செயல்திட்ட அதிகாரியாக, கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிகின்றார்.

பதுங்குகுழி நாட்கள்

அகிலனின் கவிதைகளில் தூக்கலாகத் தெரிகின்ற ஒரு விடயம் துயர். இத்துயர் இசை போல் அல்லாது இன்துயர்ப் பெருக்காய் எல்லாக் கவிதைகளின் கீழும் மௌனித்து ஓடுவது தெரிகின்றது. அனுபவங்களின் கொடூரம் புதிய மொழியை, புதிய சொல்முறையைச் சிருட்டித்துள்ளதையும் காணமுடிகின்றது. இவரது கவிதைகளில் காணப்படும் சிறுசிறு சொற்கையாள்கை கவிதைக்கு அணிசேர்க்கும் சிறப்பம்சமாகும்.

ஏகலைவ பூமி



இத்தொகுதியில் உள்ள கவிதைகளில் இசைக்கப்படக்கூடியவை மூன்று உள்ளன. இன்னுமொன்று சீரான மரபுசார்ந்த சந்தவடிவிலானது. மற்றையவை வடிவில் மரபுடன் எளிதாக உறவுகாட்ட முடியாதவை. பெண்நிலை தொடர்பான கவிதைகள் புவனம் என்ற புனைபெயரில் ஆசிரியரால் தாயகம் (கனடா) இதழில் வெளியிடப்பட்டவை. இக்கவிதைகளுட் சர்வதேச நிலவரங்கள் தொடர்பானவை சில சுவடுகள் (நோர்வே) இதழில் பிரசுரமானவை. இந்நூல் இவரது ஐந்தாவது கவிதைத் தொகுதியாகும்.

Gear

A gear is a rotating machine part having cut teeth, or cogs, which mesh with another toothed part in order to transmit torque. Two or more gears working in tandem are called a transmission and can produce a mechanical advantage through a gear ratio and thus may be considered a simple machine. Geared devices can change the speed, magnitude, and direction of a power source. The most common situation is for a gear to mesh with another gear, however a gear can also mesh a non-rotating toothed part, called a rack, thereby producing translation instead of rotation.

The gears in a transmission are analogous to the wheels in a pulley. An advantage of gears is that the teeth of a gear prevent slipping.

When two gears of unequal number of teeth are combined a mechanical advantage is produced, with both the rotational speeds and the torques of the two gears differing in a simple relationship.

In transmissions which offer multiple gear ratios, such as bicycles and cars, the term gear, as in first gear, refers to a gear ratio rather than an actual physical gear. The term is used to describe similar devices even when gear ratio is continuous rather than discrete, or when the device does not actually contain any gears, as in a continuously variable transmission

Gears_animation.gif

Automatic transmission

An automatic transmission (often informally shortened to auto, and abbreviated to AT) is a motor vehicle transmission that can automatically change gear ratios as the vehicle moves, freeing the driver from having to shift gears manually. Similar but larger devices are also used for heavy-duty commercial and industrial vehicles and equipment.

Most automatic transmissions have a defined set of gear ranges, often with a parking pawl feature that locks the output shaft of the transmission. Continuously variable transmissions (CVTs), which are very different to conventional automatic transmissions, can change their 'ratios' over a wider 'stepless' range, rather than between a set of fixed gear ratios. CVTs have been used for decades in two-wheeled scooters; but have only seen use in a few automobile models. Recently, however, CVT technology has gained greater acceptance among manufacturers and customers, especially in Audi and Nissan automobiles, and gas-electric hybrid vehicles.

Some machines with limited speed ranges or fixed engine speeds, such as some forklift trucks and lawn mowers, only use a torque converter to provide a variable gearing of the engine to the wheels.

220px-Automatic_transmission_cut.jpg

gear ratio

The gear ratio is the relationship between the numbers of teeth on two gears that are meshed or two sprockets connected with a common roller chain, or the circumferences of two pulleys connected with a drive belt

200px-Gears_large.jpg

Sprocket

A sprocket is a profiled wheel with teeth that meshes with a chain, track or other perforated or indented material. It is distinguished from a gear in that sprockets are never meshed together directly, and from a pulley by not usually having a flange at each side.

Sprockets are used in bicycles, motorcycles, cars, tanks, and other machinery either to transmit rotary motion between two shafts where gears are unsuitable or to impart linear motion to a track, tape etc

Chain.gif

Wednesday, April 27, 2011

வடலி


சமகால மக்களின் வாழ்வின் பின்புலத்தில் போர்க்கால மனிதர்களின் வாழ்வின் அவலங்களையும் நெருக்கீடுகளையும் உணர்வுகளையும் தீண்டிவரும் முயற்சியாக இக்கவிதைகள் அமைகின்றன. ஈழத்துக்கவிஞர்களின் வரிசையில் மக்கள் நலனுக்கும் கவித்துவத்தின் அழகியல் அடிப்படை அம்சங்களுக்குமிடையில் சமநிலை கண்டு சமூகமாற்ற நோக்கில் கவிதை படைக்கும் கவிஞர் சிவசேகரத்தின் மற்றுமொரு படைப்பிது.
வடலி (1.30 MB)

இன்னொன்றைப் பற்றி


கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத்துத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம். பிரதேசம், பால் எல்லைக்கள் உட்பட்டும் அவ்வெலைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடப்பனவாகவும் அமைகின்றன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்த படிப்போர் உணரமுடியும். கருத்து நுணக்கங்களினூடாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றல் இவரத கவிதைகளில் நாம் காணலாம்.
இன்னொன்றைப் பற்றி (1.32 MB)

சொல்லாத சேதிகள்



அ.சங்கரி. சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின் 24 கவிதைகளின் தொகுப்பு. இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி யாகவும் அமையும் இந்நூலில் பெண் என்ற நிலையிலிருந்து அவர்களது உணர்வுகள், கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

தரப்பட்டுள்ள அவகாசம்


1987 முற்பகுதி முதல் 1988 பிற்பகுதி வரை எழுதப்பட்ட கவிதைத் தொகுதி இது. அக்கால கட்டத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்த புத்திஜீவி ஒருவனின் கொதிநிலை அடைந்த மன வெளிக்காட்டலாகவும், அதே வேளை ஒவ்வொரு பொதுமகனும் தன்னால் புரிந்து கொள்ள முடியாது தனக்குள்ளேயே ஜீரணித்துவிட்ட உணர்வுகளின் பொதுப் பதிவாகவும் நிற்கின்ற கவிதைகள் இவை. இத் தொகுதியில் உள்ள கவிதைகள் எதற்கும் தலைப்பிடப்படவில்லை.
தரப்பட்டுள்ள அவகாசம் (1.32 MB)

திருக்கோணமலையின் வரலாறு


பிரித்தானிய இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் G.P.தோமஸ் 1940இல் திருக்கோணமலை கடற்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். ஆரம்ப காலம், ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கள், கி.பி.1500, பிரித்தானிய ஆட்சியின் நிறுவுகை ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ், திருக்கோணமலையின் மூலவேர்களையும் 3000 ஆண்டுகளுக்கான வரலாற்றின் ஆவணங்களையும் இந்நூல் ஆராய்கின்றது. நகரத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கு மிகப்பழமைவாய்ந்த “குளக்கோட்டன் கம்பசரித்திரம்” என்னும் புராண நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திருக்கோணமலைப் புராணம் ஆகிய மரபுவழியான புராணக் கதைகளையும் இலக்கியங்களையுமே நம்பியிருக்க வேண்டியிருந்த போதிலும் பின்னைய வரலாறுகளுக்கு பிரித்தானிய நிர்வாக ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை இந்நூலின் முக்கியத்துவமாகும். மொழிபெயர்க்கப்பட்ட இப்பதிப்பு வரலாற்றுத்துறை மாணவர்களின் பயன்கருதி பதிப்பாசிரியரின் தந்தையார் அமரர் வல்லிபுரம் கனகசபாபதி அவர்களின் (14.2.1921-16.12.2003) நினைவஞ்சலி மலராக வெளியிடப்பட்டது.

காகம் கலைத்த கனவு



கல்முனை, வியூகம் பதிப்பகத்தின் எட்டாவது நரகம் என்ற தொகுப்பின் கவிதைகளுடன் வேறு கவிதைகளும் சேர்க்கப்பட்டு இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் பயன்படுத்திய வட்டார வழக்குகள், சமய-பண்பாட்டு வழக்ககள் ஆகியவற்றுக்கான பொருள் விளக்கப் பட்டியலொன்றும் தரப்பட்டுள்ளது. அனுபவ உணர்வுநிலை வெளிப்பாடான 51 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

அறியப்படாதவர்கள் நினைவாக



1968 முதல் 1981 வரையிலான காலப்பகுதியில் இயற்றப்பெற்ற புதுக்கவிதைத் தொகுப்பு.

அறியப்படாதவர்கள் நினைவாக (734 KB)

Showing total messages count in Thunderbird

In Thunderbird it only shows total unread messages near each folders.

But to see total messages too alongside the folders follow the steps:

* Goto Tools --> Options --> Advanced tab
* Check out "show expanded columns in folder pane"
* Click "OK"
* Now click the icon next to "Name" in folder pane
* Select the "Total" from the drop down
* It will show you the total number of messages in each folders. Smile


EMAIL SIGNATURE GENERATOR

Did you know that every time you post your e-mail address a robot can find you?

Well worry no more, get yourself a free unique looking signature from SignatureGenerator.net.

They will generate signatures via an image file for your Gmail, Yahoo, MSN, Hotmail and AOL accounts keeping you safe and happy.

Get your protection now at SignatureGenerator.net.

scrap.gif

Ten Steps To Prevent File Corruption in Outlook Express

If you follow the ten stops outlined here, you will greatly reduce the chances that your DBX files will become corrupt.

1. Disable the e-mail scan in your anti-virus program.

2. If you have not installed Windows XP SP2, disable automatic background compaction.

3. Keep the Inbox as empty as possible by moving messages to other folders you create.

4. Be careful that the Sent Items folder does not grow to an unmanageable size (2,000 or so messages seems a good target).

5. Compact all folders on a regular basis, such as bi-weekly, or more often if you make extensive use of e-mail or newsgroups.

6. When compacting, do not use your computer until the process is finished.

7. Purchase a copy of DBXtract for emergency use.

8. Keep your computer and anti-virus products up to date with the latest patches.

9. Backup your entire Store Folder on a regular basis.

10. Remember that you can store important messages, or messages with large attachments, outside of Outlook Express simply by dragging them from the message list and dropping them on your desktop. Then delete the original message in the message list to keep the DBX file smaller.

These simple steps will help keep your Outlook Express working in tiptop shape so that hopefully you will never need that emergency copy of DBXtract.

How to Block a Sender in Outlook Express?

Blocking a sender

Outlook Express has an easy Block Sender feature that allows you to block a specific sender based on the sender's e-mail address. To block a sender, just select the offending message and click Block Sender on the Message menu. Outlook Express will then ask if you wish to delete all messages from that sender that are in the current folder. Any new message you receive from that sender will be immediately moved to the Deleted Items folder.

block_sender.gif


Blocking a sender is easy, but not always effective when a spammer changes his address.

While Block Sender is easy and fast to use, it does have drawbacks. It downloads the complete message, rather than deleting it directly on the server. It blocks only by e-mail address, but spammers seldom use the same address more than once anyway. For a greater level of control you need to filter mail using message rules.

Message rules

Message rules offer many more options than Block Sender. Not only can a rule delete messages from a particular address, but also those containing certain words or phrases in the Subject line or message body, or those above a certain size. They can also block messages by what they do not contain, such as those without your own address in the To or CC lines.

Creating a message rule to block a specific sender is almost as easy as using Block Sender.

1. Select a message from the sender for whom you wish to create a rule.

2. On the Message menu, click Create Rule From Message. A new message rule window will open with the From address of the sender already entered as the rule's condition.

3. In the Actions box, scroll to the bottom of the list of possible actions and select Delete it from the server.

4. Type a name for the rule in the Name box, then click OK.

5. An info box will inform you that the rule has been successfully added.

Remember that Block Sender simply moves the filtered message to the Deleted Items folder. This rule deletes the message directly on the server, thus saving you the trouble of downloading it before deleting it. Be very careful therefore that you really do mean to block that sender. Once the message is deleted from the server it is too late to change your mind.

You can also create message rules from scratch, as well as copy or edit existing rules.

1. On the Tools menu, point to Message Rules, and then click Mail.

2. To create a new, blank rule, click the New button.

3. To create a new rule based on an existing rule, select a rule and click the Copy button.

4. Use the Modify button to change an existing rule.

5. Use the Move Up and Move Down buttons to arrange rules in the proper order.

message_rule.gif


Message Rules offer a more powerful way of controlling mail than the simple Block Sender feature.


Resource:http://www.microsoft.com/


Create new profile in Mozilla Thunderbird

> To create new profile close thunderbird by file->exit or Alt+F4.

> Go to run command, start->run.

> Type "thunderbird.exe -ProfileManager" as,

run.gif

> Thunderbird Choose Profile window will open like,

profile.gif

> Select "create profile" and give the name of the profile.

> Hit "finish" button.

> A new profile will be created as "3zqgv3tw.Default User" in the location where you have the thunderbird.
For eg in windows it will be in,
C:\Documents and Settings\[User Name]\Application Data\Thunderbird\Profiles

> Then select "Start thunderbird".

> Thunderbird will be started with the user you have selected in Choose Profile window.

profile.gif

> If you want to use your old profile then select the profile name in "Choose Profile" window and hit "Start Thunderbird".

Top 10 Free Email Services

1. Gmail - Free Email Service

2. AIM Mail - Free Email Service

3. GMX Mail - Free Email Service

4. Yahoo! Mail - Free Email Service

5. Gawab.com - Free Email Service

6. Inbox.com - Free Email Service

7. FastMail Guest Account - Free Email Service

8. Windows Live Hotmail - Free Email Service

9. Yahoo! Mail Classic - Free Email Service

10. BigString.com - Free Email Service

Tuesday, April 26, 2011

மரணத்துள் வாழ்வோம்



31கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு. சமகால ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு. மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்



மஹாகவி, முருகையன், நீலாவணன், மு.பொன்னம்பலம், நுஃமான், சண்முகம் சிவலிங்கம், தா.இராமலிங்கம், சி.சிவசேகரம், அ.யேசுராசா, வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் ஆகிய 11 கவிஞர்களின் தேர்ந்த கவிதைகளும் கவிஞர்களது வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.

காற்றுவழிக் கிராமம்



யுத்த காலத்தில் சிதைக்கப்பட்ட ஈழத்தின் கிராமங்களின் பதிவை உள்வாங்கிய ஆவணமாக இக் கவிதைத்தொகுப்பு அமைகின்றது.

கனவின் மீதி



ஒரு நாட்டில் வாழகின்ற ஓர் இனத்திலுள்ள அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன். - கா.சிவத்தம்பி (முன்னுரையில்) இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன.

இனி ஒரு வைகறை


இவை எனது குறிப்பேடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டவை. எழுத்துக்களினாலான இவ்வுணர்வுகள் கவிதைகளாயிருப்பின் போராளியாயிருந்த ஒருவன் கவிஞனாகின்றான். - கி.பி.அரவிந்தன் (முகவுரையில்)
இனி ஒரு வைகறை (1.84 MB)

முகம் கொள்


இக்கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்து அனுபவங்கள், தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்தனுபவங்கள், அகதி வாழ்வின் பாதிப்புக்கள். இக்கவிதைகள் வரலாற்று அனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல, அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால் பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.
முகம் கொள் (1.99 MB)

அகங்களும் முகங்களும்

என்னைப் பாதித்தவற்றை உள்ளுறை அனுபவ ஒளி கொண்டு பின்னி இழைத்தெடுத்து வேய்ந்ததோர் சிறு கவிக்குடில் இது. -ஆசிரியர் (முன்னுரையில்)


அகங்களும் முகங்களும் (2.32 MB)

Add new user account - fedora 10

(*) Go to System menu button (on the Panel) -> Administration -> and click on Users and Groups
(*) The User Manager interface display the available user on the system with the user information. 
user_manager.png
(*) To add a new user to the system, click the Add User button 
create_new_user.png
Type in the User Name, Full Name and Password in appropriate fields, then retype the password in the Confirm Password field. Make sure the password length must be at least six characters long. 
(*) Then click OK button to create the user.

Monday, April 25, 2011

இருவர் - கவிதை (உன்னோடு நான் இருந்த)

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயதோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே (2)

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் - பாரதியின் கவிதை

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)
(My fav stanza)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)


4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5. புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திரந் தேகேட் டிருப்போம். (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டேறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்
எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)

7. விழையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலத்தைக் கேளா திழுப்பான்;
இளயாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மக்தே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்: - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

கடைசிப் பக்கம்

இன்னும் இரண்டொரு
மணித்துளிகள் நீளலாம்
நெருஞ்சி முற்களாய் காயப்படுத்தும் - அதை
யாரிடமாவது சொல்லிவிட வேண்டும்

திறக்க முடியாத இமைகளுக்குள்
இருள் பரவிக்கிடக்கிறது
குரல்வளைக்குள் காற்றைத் திணிக்கும்
ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைகிறது
அடுத்தடுத்த இதயத் துடிப்பிற்கிடையே
இடைவெளி குறைகிறது
மார்புக்கூட்டின் இடதுபக்கத்திலிருந்து
மிதமான குளிர் பரவுகிறது
கடைசி சுவாசத்தின் உள்ளீட்டீல்
தன்னிச்சையாய் வெளிவருகிறது
இரு கண்ணீர்த் துளிகள்

இப்படியாக முடிகிறது
இறக்கி வைக்க முடியாது
இறந்து போனவளின் - கடைசி
இரண்டு மணித்துளிகள்