
இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் சனிக்கிரகத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் நிலை உச்சத்தை அடையலாம் என்று இலங்கை வானியலாளர்கள் சங்கத்தின் தலைவர் காவன் ரணசிங்க தெரிவிக்கின்றார்.
வானம் தெளிவாக இருக்கும் நிலையில் கிழக்கு வானில் மாலை ஏழு மணியளவில் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் சனிக்கிரகத்தை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
இரவு நேரத்தில் நம் தலைக்கு மேலாகத் தென்படும் சனிக்கிரகம் அதிகாலை நான்கு மணியளவில் மேற்கு வானில் தென்படத் தொடங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment