Search This Blog

Pages

Monday, April 18, 2011

ஹம்பாந்தோட்டையில் சிறியளவிலான நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டையில் சிறியளவிலான தொடர் நிலநடுக்க சம்பவங்கள் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 10-11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சிற்சில இடங்களில் சிறியளவான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. அதன் காரணமாக தென்னிலங்கையின் கரையோரப் பகுதி மக்கள் பெரிதும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இலங்கையில் சுனாமித் தாக்கம் ஏற்படலாம் என்று பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் எதிர்வு கூறியுள்ள நிலையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ள நிலநடுக்கமானது அங்குள்ள மக்களை பெரிதும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. ஹம்பாந்தோட்டையின் சிறியளவான நிலநடுக்கங்கள் குறித்து இலங்கை பூகற்பவியல் திணைக்களமும் உறுதி செய்துள்ளது. அது தொடர்பில் தமக்கு பல தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரம் கடலின் அடியிலான கற்பாறைகள் மற்றும் துறைமுகப் பகுதியில் அமைந்திருந்த கற்பாறைகள் என்பவற்றை வெடி வைத்துத் தகர்த்தல் போன்று ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் பிரதிவிளைவுச் செயற்பாடுகள் காரணமாகவே மேற்குறித்தவாறான சிறியளவு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஹம்பாந்தோட்டைப் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment