Search This Blog

Pages

Wednesday, April 27, 2011

திருக்கோணமலையின் வரலாறு


பிரித்தானிய இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் G.P.தோமஸ் 1940இல் திருக்கோணமலை கடற்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். ஆரம்ப காலம், ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கள், கி.பி.1500, பிரித்தானிய ஆட்சியின் நிறுவுகை ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ், திருக்கோணமலையின் மூலவேர்களையும் 3000 ஆண்டுகளுக்கான வரலாற்றின் ஆவணங்களையும் இந்நூல் ஆராய்கின்றது. நகரத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கு மிகப்பழமைவாய்ந்த “குளக்கோட்டன் கம்பசரித்திரம்” என்னும் புராண நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திருக்கோணமலைப் புராணம் ஆகிய மரபுவழியான புராணக் கதைகளையும் இலக்கியங்களையுமே நம்பியிருக்க வேண்டியிருந்த போதிலும் பின்னைய வரலாறுகளுக்கு பிரித்தானிய நிர்வாக ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை இந்நூலின் முக்கியத்துவமாகும். மொழிபெயர்க்கப்பட்ட இப்பதிப்பு வரலாற்றுத்துறை மாணவர்களின் பயன்கருதி பதிப்பாசிரியரின் தந்தையார் அமரர் வல்லிபுரம் கனகசபாபதி அவர்களின் (14.2.1921-16.12.2003) நினைவஞ்சலி மலராக வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment