இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
பக்ர் என்ற பெயரில் தேடுதல் பொறியையும், பஜ்ர் என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையையும் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈரான் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைபடத்தின் முன்னோட்டத்தை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கூகுள் மறுத்ததை தொடர்ந்து ஜி-மெயிலை ஈரான் முடக்கியது. ஈரானில் 50 சதவீதம் பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்.
இந்நிலையில் ஜிமெயிலை முடக்கியது பயனீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கவனத்தில் கொண்டு புதிய தேடுதல் பொறி மற்றும் மின்னஞ்சல் சேவையை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
No comments:
Post a Comment