Search This Blog

Pages

Saturday, October 6, 2012

உடலில் உள்ள இரத்த அணுக்களை அதிகரிக்க


f-pic-RBCs
உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் அனீமியா என்னும் மறதி நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே அத்தகைய இரத்தத்தை அதிகப்படுத்த கடைகளில் நிறைய மருந்துகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றை சாப்பிடுவதால் மட்டும் உடலில் இரத்தம் அதிகரிக்காது.
ஒரு சில இயற்கையான வழிகளையும் தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும் உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.
உணவுகள்
உடலில் இரத்தம் அதிகரிக்க வேண்டுமென்றால் நல்ல ஆரோக்கியமான, இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
அதாவது கொய்யாப்பழம், டார்க் சாக்லேட், கீரைகள், உருளைக்கிழங்கு, பூசணிக்காய் விதை, பயிர் வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
நன்னாரி வேர்
மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.
கற்றாழை
கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மாசடைந்த காற்று
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், வீட்டில் பயன்படுத்தும் கொசுவர்த்தி மற்றும ஏர் ப்ரஸ்னர்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இதில் இருந்து வரும் கெமிக்கல் கலந்த வாசனையை நுகர்வதால், அந்த கெமிக்கல் இரத்தத்தில் கலந்து புற்றுநோய், சுவாசக்கோளாறு, ஹார்மோனில் சில தொந்தரவு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
க்ரீம்கள்
உடலுக்கு தடவும் பாடி க்ரீம்கள் அல்லது லோசன்கள் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் சில சமயங்களில் அந்த கெமிக்கல்கள் உடலில் ஊடுருவி, இரத்தத்தில் கலந்து ஏதேனும் தொற்றுநோய்களை ஏற்படுத்தும்.
ஆகவே எப்போதும் கெமிக்கலால் ஆன பொருட்களை பயன்படுத்துவதை விட கற்றாழை, மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

No comments:

Post a Comment