கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 9 இல் பயில்கின்ற ஜே. எம். பயாஸ் என்கிற மாணவன் பயன்படுத்தப்பட்ட பேனா மூடிகளைப் பயன்படுத்தி மிகவும் அற்புதமான முறையில் மினி ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.
சிறிய இரு மின்கலங்களின் பயன்பாட்டால் நடத்தல், சுழலுதல் போன்ற செயற்பாடுகளை இந்த ரோபோவால் செய்ய முடிகின்றது.
இவரது கண்டுபிடிப்புகளுக்கு அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் பேராதரவும், பாராட்டும் வழங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment