இருமல் நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் கொரெக்ஸ்- டி ( Corex- D) என்ற பெயரினைக் கொண்ட சிரப் வகைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரெக்ஸ் ரக இருமல் சிரப் வகைகளை விற்பனை செய்யவோ, விநியோகம் செய்வோ கூடாது என இலங்கை சுகாதார அமைச்சு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கொரெக்ஸ் ரக இருமல் நிவாரணிகளுக்கு தடை விதிக்கப்பதாக தேசிய மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அறிவித்துள்ளது.
போதைக்காக இந்த மருந்து வகைகளை அதிகளவான இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைக்காக இவ்வாறு அதிகளவு இந்த ரக மருந்தைப் பருகிய ஆறு பேர் கடந்த இரண்டு வாரங்களில் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து குறித்த ரக மருந்துப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்ய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
கொரக்ஸ் – டி மருந்துப் பொருள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அளவிற்கு அதிகமாக கொரக்ஸ் – டி மருந்து உட்செல்லுமாயின் மரணத்தை விளைவிக்கும் எனவும்,சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment