தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மைல்கல்லாக பொறியியல் பீடம் அமைப்பதற்கான அங்கீகாரத்தினை பல்கலைக்கழக ஆணைக்குழு வழங்கியுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மிக நீண்ட நாள் தேவைகளுள் ஒன்றாக காணப்பட்ட பொறியியல் பீடத்தினை அமைப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அந்த முயற்சி தற்போது வெற்றியளித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் பொறியியல் துறையில் கல்வி பயில்வதற்காக கொழும்பு மற்றும் பேரதெனிய பல்கலைக்கழகங்களுக்கே இதுவரையும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவ்வருடம் முதல் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களை சேர்ந்த தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் இப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயிலும் சந்தர்ப்பத்தைப் பெறவுள்ளனர்.
இந்த வருடம் முதல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு்ள்ள பொறியியல் துறை மாணவர்களை முதற் தொகுதியாக கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள இப் பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகத்தில் செயற்படவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் துறையினை பெற்றுக் கொள்வதற்கு உதவிய அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக , பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக ,தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கே.எம்.இஸ்ஹாக் மற்றும் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோருக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment