செவ்வாய்க் கிரகத்தின் நிலத்துக்கு அடியில் கிடைத்திருக்கும் தாது பொருட்களை தீவிரமாக ஆய்வு செத போது செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின் உதவியுடன் நடத்திய ஆய்வின் முடிவுகள் நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
கிரகங்களை விண்கற்கள் மோதும்போது நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் அழுத்தத்தின் காரணமாக மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகின்றன. செவ்வாய்க் கிரகத்தில் அவ்வாறு விண்கல் மோதி ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் பாறைகளில் உள்ள தாதுக்களை ஆராயும்போது அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரியாத நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் நிலத்துக்குள்ளே நுண்ணியிர்கள் வாழ்ந்துள்ளது உறுதிசெய்யப்படுமானால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment