சீனாவின் மொத்த மக்கள்தொகை 135 கோடியாக இருக்கும் நிலையில், அங்கு மொபைல் போன் இணைப்புகளின் எண்ணிக்கை 111 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 135 கோடியே 40 லட்சம் என்று கணக்கிடப்பட்டது. இது 2011ம் ஆண்டைக் காட்டிலும் 66 லட்சம் அதிகம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில், பொதுமக்களில் 100ல் 82.6 பேரிடம் மொபைல் போன் இருந்தது. தற்போது சீனாவில் மொத்தம் 111 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன என்று அந்நாட்டு தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொபைல் போன்கள் மற்றும் இதன் இணைப்பில், உலக நாடுகளில் சீனாதான் முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் குறிப்பிடத்தக்க சாதனையாக, புதிதாக 12 கோடியே 59 லட்சம் புது மொபைல் போன் இணை ப்பு வழங்கப்பட்டது.
இவற்றில் 10 கோடியே 43 லட்சம் இணைப்புகள், 3ஜி இணைப்புகள். இதன் மூலம் அந்நாட்டில் 3ஜி மொபைல் இணைப்பு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 28 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் இன்டர்நெட் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் சீனாவில் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது 56 கோடியே 40 லட்சம் பேரிடம் இன்டர்நெட் இணைப்பு உள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 42 கோடி பேர் தங்கள் மொபைல் போனிலேயே இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
No comments:
Post a Comment