போர்க்களத்தில் பணிபுரிய பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. உலகின் பல நாட்டு ராணுவத்தில் பெண்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆண் வீரர்களுக்கும் பெண் வீரர்களுக்கும் வித்தியாசம் பார்க்க கூடாது. எல்லா பணிகளிலும் பெண்களை நியமிக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் போர்க்கள வீரர்களாக பெண்களை நியமிக்க உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கூறி வந்தனர்.
இதையடுத்து போர்க்களங்களில் எதிரிகளுடன் சண்டை போடும் பணியிலும் பெண்களை நியமிக்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தடை இன்று நீக்கப்பட உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராணுவ அமைச்சர் லியோன் பெனட்டா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கில் போர்க்கள வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவார்கள்.
மேலும், ராணுவத்தின் ஆண், பெண் என்ற வேறுபாடு இருக்காது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.எனினும், ராணுவத்தின் முடிவுக்கு ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
பின்னர் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்க வேண்டும். எனவே, போர்க்கள வீரர்களாக பெண்களை நியமிக்க முடிவு 2016ம் ஆண்டுதான் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment