உணவுக்காக பயன்படுத்தப்படும் நண்டு மற்றும் இரால் போன்ற நீர் விலங்கு வகைகள் தமது ஓட்டின் மேல் மின்சாரம் பாயும்போது அதனை உணருகின்றன.
மின்சாரம் வருகிறது என்று தெரியும் இடங்களை அவை தவிர்க்கப் பார்க்கின்றன என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வலியை உணரும் தருணங்களில் இரால் மற்றும் நண்டுகள் தமது இயல்பை மாற்றி்க் கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்திருந்தனர்.
பத்துக் கால்கள் கொண்ட ஓடுடைய கடல் பிராணிகளான சிங்க இரால்களும்கூட இதேபோன்ற இயல்பு மாற்றங்களை வலி ஏற்படும் சூழ்நிலையில் வெளிப்படுத்துகின்றன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment