Search This Blog

Pages

Friday, March 1, 2013

கிழக்கு மாகாண பாடசாலைகளில் பாலியல் புகார்கள்!


school
கிழக்கு மாகாண பாடசாலைகளில் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் பேரில் இதுவரை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசரா ஊழியர்கள் என 25 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
பாடசாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறும் அவர், முறைப்பாடு பதிவு செய்யப்படாத சம்பவங்களும் இருப்பதால்  நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கூறுகின்றார்.
விசாரணைகளின் முடிவில் சிலர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதேவேளை இன்னும் சிலர் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.
தமிழ், முஸ்லீம் சமூகங்களிடமிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் வெளிவருவதில்லை. சிங்கள சமூகத்திடமிருந்துதான் பெரும்பாலான முறைப்பாடுகள் வந்துள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒருசிலர் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். ஆனால் சாட்சியங்கள் இல்லாத நிலையில் சிலர் நிரபராதி என விடுதலையான சம்பவங்களும் உள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
முறைப்பாட்டாளர்களும் சாட்சிகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வராதமையால் பாடசாலை  மாணவிகளுக்கு எதிரான பாலியல் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தடைகள் காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாடசாலைகளில் ஆசிரியர்களின் கட்டளைகளுக்கு அமைவாக மாணவர்கள் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றமையே இவ்வாறான துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில நாடுகளை பின்பற்றி இலங்கையிலும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக முன்பள்ளிகள் தொடக்கம் விழிப்புணர்ச்சி விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி விழுது அமைப்பின் தலைவி சாந்தி சச்சிதானந்தம் கூறினார்.

111 கோடியை தொட்டது சீனாவின் கையடக்க தொலைபேசி இணைப்பு


china mobile
சீனாவின் மொத்த மக்கள்தொகை 135 கோடியாக இருக்கும் நிலையில், அங்கு மொபைல் போன் இணைப்புகளின் எண்ணிக்கை 111 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 135 கோடியே 40 லட்சம் என்று கணக்கிடப்பட்டது.  இது 2011ம் ஆண்டைக் காட்டிலும் 66 லட்சம் அதிகம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில், பொதுமக்களில் 100ல் 82.6 பேரிடம் மொபைல் போன் இருந்தது. தற்போது சீனாவில் மொத்தம் 111 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன என்று அந்நாட்டு தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொபைல் போன்கள் மற்றும் இதன் இணைப்பில், உலக நாடுகளில் சீனாதான் முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் குறிப்பிடத்தக்க சாதனையாக, புதிதாக 12 கோடியே 59 லட்சம் புது மொபைல் போன் இணை ப்பு வழங்கப்பட்டது.
இவற்றில் 10 கோடியே 43 லட்சம் இணைப்புகள், 3ஜி இணைப்புகள். இதன் மூலம் அந்நாட்டில் 3ஜி மொபைல் இணைப்பு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 28 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் இன்டர்நெட் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் சீனாவில் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது 56 கோடியே 40 லட்சம் பேரிடம் இன்டர்நெட் இணைப்பு உள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 42 கோடி பேர் தங்கள் மொபைல் போனிலேயே இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.

மீண்டும் ஷைபர் தாக்குதலில் இலங்கை


Board-of-Investment-of-Sri-Lanka-Hacked-by-Davy-Jones-Investor-Data-Leaked
இலங்கையின் முன்னனி வலைத்தளங்கள் பல ஷைபர் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இலங்கையின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
புதிதாக இலங்கை முதலீட்டுச் சபையின் வலைத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்த பல தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் ”Davy Johns” எனும் பெயரில் ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது.
மேலும்  மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கு வலைத்தளமும் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்விரு வலைத்தளங்களும் தற்போது வழமை போன்று இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இலங்கையின் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களின் வலைத்தளம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் வலைத்தளங்களும் ஹெக் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தரக்குறைவான மருந்து இறக்குமதிக்கு எதிராக கடும் நடவடிக்கை : சுகாதார அமைச்சு


health ministry srilanka
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தரக்குறைவான மருந்து பொருட்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் அதன் அதிகாரிகளினை கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்ற வாரம் அரசாங்க வைத்தியசாலை மருந்து போத்தல் ஒன்றினுள் கண்ணாடித் துண்டொன்று காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி மருந்துப் பொருள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
மேலும் மேற்படி தரக்குறைவான மருந்துப் பொருட்களினை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் இறக்குமதி தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரத்தினை உணரும் இறால் மற்றும் நண்டுகள்

crab
உணவுக்காக பயன்படுத்தப்படும் நண்டு மற்றும் இரால் போன்ற நீர் விலங்கு வகைகள் தமது ஓட்டின் மேல் மின்சாரம் பாயும்போது அதனை உணருகின்றன.
மின்சாரம் வருகிறது என்று தெரியும் இடங்களை அவை தவிர்க்கப் பார்க்கின்றன என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வலியை உணரும் தருணங்களில் இரால் மற்றும் நண்டுகள் தமது இயல்பை மாற்றி்க் கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்திருந்தனர்.
பத்துக் கால்கள் கொண்ட ஓடுடைய கடல் பிராணிகளான சிங்க இரால்களும்கூட இதேபோன்ற இயல்பு மாற்றங்களை வலி ஏற்படும் சூழ்நிலையில் வெளிப்படுத்துகின்றன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

போர்க் களத்தில் பெண்கள் அனுமதி : அமெரிக்க ராணுவம்

US_Woman_Soldier
 போர்க்களத்தில் பணிபுரிய பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. உலகின் பல நாட்டு ராணுவத்தில் பெண்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆண் வீரர்களுக்கும் பெண் வீரர்களுக்கும்  வித்தியாசம் பார்க்க கூடாது. எல்லா பணிகளிலும் பெண்களை நியமிக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில்  போர்க்கள வீரர்களாக பெண்களை நியமிக்க உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கூறி வந்தனர்.
இதையடுத்து போர்க்களங்களில் எதிரிகளுடன் சண்டை போடும் பணியிலும் பெண்களை நியமிக்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தடை இன்று  நீக்கப்பட உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராணுவ அமைச்சர் லியோன் பெனட்டா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்  ஆயிரக்கணக்கில் போர்க்கள வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவார்கள்.
மேலும், ராணுவத்தின் ஆண், பெண் என்ற வேறுபாடு இருக்காது என்று பலர் கருத்து  தெரிவித்துள்ளனர்.எனினும், ராணுவத்தின் முடிவுக்கு ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
பின்னர் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்க வேண்டும். எனவே, போர்க்கள வீரர்களாக  பெண்களை நியமிக்க முடிவு 2016ம் ஆண்டுதான் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

நேரம் தவறாது நடப்போம்



time
நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு.
“அவன் கிடக்கான் குப்பை, பத்து நிமிஷம் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டான்” என்ற எண்ணம் உங்களுக்கு வருமேயானால் கிட்டத்தட்ட அதே எண்ணம் அவருக்கும் உங்கள் மீது இருக்கும். நேர தவறுதல் ஏன் ஏற்படுகிறது? அக்கறையின்மையால்.
எதன் மீது? எந்தக் காரியத்திற்காகப் போகிறோமோ அதன் மீது நமக்கு முழு ஈடுபாடு இல்லை. எட்டு மணி அலுவலகத்திற்கு ஏழே முக்காலுக்கு நுழைபவர்தான் சரியான மனிதர்.
ஸ்கூட்டரை அலுவலக வாசலில் நிறுத்தி விட்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு  காலை வணக்கம் சொல்லி,  இன்றைய பொழுது இந்த அலுவலகத்தில் நல்லபடி நகர வேண்டுமே என்ற அக்கறையோடு சில விநாடிகள் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக இருப்பின், நிச்சயம் அந்த நாள் பலம் பொருந்தியதாக இருக்கும்.
இந்த ஐந்து நிமிட நேரத்தில் மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியாகி விடும்.  மாறாக, எட்டு பதினேழுக்கு அரக்கப் பறக்க நுழைந்து,   கையெழுத்துப் போட்டு விட்டு வியர்த்து வழிய, நெஞ்சு படபடக்க சுற்றியிருப்பவர்களுக்கு முகமன் சொல்ல மறந்து போய், மூச்சு வாங்க உட்கார்ந்திருக்கும் போது, நீங்கள் கேலிப் பொருளாக மாறி விடுவீர்கள். சீக்கிரம் வந்தவர்கள் உங்களை அதிசயமான பிராணியாகத்தான் பார்ப்பார்கள்.
உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழிக்கின்ற அலுவலகத்தில் நீங்கள் எந்த மரியாதையும் இல்லாமல் தாமதமாக வருவது, உங்கள் வேலை மீது உங்களுக்கு மதிப்பும் மரியாதையும்  இல்லை என்பதை நிச்சயமாக்குகிறது. உங்கள் வேலையை நீங்கள் நேசிக்கவில்லை என்பதும் உண்மை.
ஆறு மணிக்குத் திறக்க வேண்டிய மளிகைக் கடையை ஏழு மணிக்குத் திறந்தால், இடையே உள்ள ஒரு மணி நேரத்தில் இருபது வாடிக்கையாளர்கள் வந்து போயிருப்பார்கள். ஒரு நாள் தாமதித்து, மறு நாள் நீங்கள் ஆறு மணிக்குத் திறந்தாலும், “அட… அவன் எங்க கடையைத் திறந்திருக்கப் போறான்; ஆடி அசைஞ்சு எட்டு மணிக்குத்தான் கடையையே திறக்கறான்” என்று உங்கள் கடையைப் பற்றி, உங்களைப் பற்றி ஒரு தவறான செய்தி பரவும். இதை விட வியாபரத்திற்கு இடைஞ்சலான விஷயம் எதுவுமில்லை.
குறித்த நேரத்திற்கு ஒரு இடத்திற்குப் போக முயாதபடி இடைஞ்சலாக இருப்பது எது என்று யோசித்துப் பார்த்தால், உடனடியாக எல்லோராலும் சொல்லப் படும் விஷயம் டிராபிக்ஜெம். அந்தக் காரணம் எல்லோராலும் நிஜமாகவோ, பொய்யாகவோ சொல்லப்படுகிறது.
சில சமயம் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்மையாயினும் தினந்தோறும் அப்படித்தான் என்று சொல்வதற்கில்லை. இப்படி தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் இருக்குமானால், அந்த நெரிசல் நேரத்தையும் கணக்கிட்டு, முன்கூட்டியே கிளம்பலாமே!
நேரம் தவறாமையை ஒரு முக்கியமான விஷயமாக ஏன் கருதுவதில்லை? நம்முடைய மன்னிக்கின்ற குணம்தான் காரணம் என்று தோன்றுகிறது. வெகு எளிதில் நாம் தவறுகளை மன்னித்து விடுகிறோம். “பத்து நிமிஷம் லேட்டாயிடுச்சுன்னா தலையா போயிடும்?” என்று பேசுகின்றோம். பெரிய பாவமில்லை என்று எண்ணுகின்றோம்.
தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளாத தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சந்திப்பிற்கு ஒருவர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாலும் அவரை புறக்கணிக்க வேண்டும். அம்மாதிரி  உறுதியோடு நீங்கள் இருப்பின், நீங்கள் தாமதமாக எந்தச் செயலையும் செய்ய மாட்டீர்கள்.
நேரம் தவறாமையில் அக்கறை கொள்வீர்கள். இது இரட்டை லாபம். மற்றவர் தாமதத்தை நேர் செய்வது; உங்களையும் நேரம் தவறாமையில் பழக்கிக் கொள்கிறீர்கள்.
தாமதம் தவிர்த்தல் ஒரு தவம். மிக நல்ல பழக்கம். இது உங்களுக்குள் படிந்து வந்து விட்டதென்றால் திட்டமிடல் என்ற விஷயம் உங்களுக்குள் மிக வேகமாக நுழைந்து விடும். திட்டமிடுவதற்குண்டான தெளிவும் மனதிற்குள் படிந்து விடும். நேரம் தவறியதற்கு, மற்றவர்களுடைய நேரம் தவறிய செயல்களும் ஒரு காரணம் என்று அடிக்கடி சொல்லப்படும்.
“நான் கரெக்ட்டா பத்து மணிக்குப் போய் நின்னேன் ஸார்.அந்தாள் பதிணொன்ரை மணிக்கு வரான். வந்துட்டு பேப்பர் படிக்கிறான். பேப்பர் படிச்சிட்டு டீ குடிக்கப் போயிடறான். பன்னிரெண்டேமுகாலுக்குத்தான் ஸார், வாங்க உட்காருங்கன்னு சொன்னான். ரெண்டு தடவை வேணும்னே பண்ணிரண்டு மணிக்குப் போனேன். இப்போதும் அதே மாதிரிதான் சாப்பிட்டு அப்புறம் தான் ஸார் கூப்பிடறான்.’
அவருடைய நேர தவறிய புத்தி இவருக்கும் ஒட்டிக் கொள்கிறது. “என்னங்க பண்றது. இப்படியே பழகிட்டோம். பத்து மணிக்கு வாங்க அப்படின்னாலே, புத்தி பதினோரு மணிக்குன்னு கணக்கு போட்டுக்குது’ என்று உளறுபவர்கள் உண்டு. இதற்கு செவி சாய்த்து விடக் கூடாது.
நீ திருடினால் நான் திருட வேண்டுமா? நீ லஞ்சம் வாங்கினால் நான் லஞ்சம் வாங்க வேண்டுமா? நீ பொய் சொன்னால் நான் பொய் சொல்ல வேண்டுமா? என்பது போல அவர் தாமதம் உங்களைத் தொற்றிக்கொள்ளக் கூடாது. நீங்கள் அதை மறுத்து, முன்னிலும் உறுதியாக நேர தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். காலத்தின் மதிப்பு தெரிந்தால் நேர தவறாமை குணமும் தானாக வந்து விடும்.
நேர தவறாமை என்பது உங்களை நீங்களே மதிக்கும் சுயமரியாதை. உங்களை எப்பொழுதும் உற்சாகமாகவும் தொடர்ந்து வேலை செய்பவராகவும் வைக்கும். உங்களைச் சோம்பலிலிருந்து அப்புறப்படுத்தி சுறுசுறுப்பானவராக வைக்கும். அந்தச் சுறு சுறுப்புதான் கம்பீரம். அந்தக் கம்பீரம் தனிக் கவர்ச்சி.
கவர்ச்சிதான் உங்களைப் பெரிய மனிதராக, முக்கிய மனிதராகக் காட்டும். நேரம் தவறுதலை இயல்பாகக் கொண்டவர்களின் முத்தில் எப்போதும் தூக்கம் இருக்கும். எதையும் ஊன்றிப் பார்க்காத குழப்பம் இருக்கும். அவருக்குப் புகழ் பற்றியோ, பணம் பற்றியோ எந்த வேட்கையும் இருக்காது.
“தோன்றின் புகழொடு தோன்றுக” என்பதற்குப் பக்கத்தில் நேரம் தவறாமை நிச்சயம் இருக்கிறது. நேரம் தவறாமையை நிச்சயம் கடைப்பிடிக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
நன்றி : தினகரன்
பாலகுமாரன்

Abi Word Portable

typingmaster pro v7.0.1.794 multilanguage incl crack

Microsoft Office 2013 Professional Plus Full Serial Keygen





Microsoft Office 2013 Professional Plus Setup[32Bit/x86] Crack Patch Download - Microsoft Office 2013 Professional Plus for 32bit and 64bit office software. Office 2013, the new flavor of the application comes with a new, intuitive design, which has been developed to work great with touch, stylus, and mouse and keyboard. The new Office 2013 was announced with support for Microsoft's Windows platform, and can be used on a variety of devices, including tablet PCs. Moreover, the application was conceived so that it would provide users with a great experience on touch devices that run under Windows 8.

On top of that, the new Office 2013 was designed to be more social, and comes with support for new scenarios related to reading, note-taking, meetings and communications. Kept connected to cloud services at all times, the new application version comes with SkyDrive integration, saving files to this location by default, while also featuring Skype, providing users with 60 Skype world minutes each month.

System Requirements:
Computer and processor: 1 GHz or greater x86/x64 Processor with SSE2 instruction set
Memory: 1 GB RAM (32-bit) / 2 GB RAM (64-bit)
Hard Disk: 3.5 GB free disk space
Operating System: Windows 7, Windows 8, Windows Server 2008 R2 or newer
Graphics: Graphics hardware acceleration requires DirectX10 graphics card.

How to Activate :
1- open Word then click on Open Other Documents
2- click on Account then click on Change Product Key
3-Open Keygen Office 2013
4- copy and paste the key in the space provided
5- click install .

D  O W N L O A D S





  • Image

  • ------------------------------------------------------------------------------------------------------------------------------


    1.Click the DOWNLOAD button.

    2.Wait for 5 Second.
    3.Click 'Skip ad'.

    Credit : Full_Version