Search This Blog

Pages

Wednesday, January 26, 2011

கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான் - ஆளவந்தான்

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

("ஆளவந்தான்" Theme Beats)

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,

ஆனால்...
கடவுள் கொன்று,
உணவை தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தகுமாரா,
நந்தகுமாரா,
நாளை மிருகம் கொள்வாயா?
மிருகம் கொன்ற,
உச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?

குரங்கில் இருந்து,
மனிதன் என்றால்,
மனிதன் நிறையை எரிப்பானா?
மிருக ஜாதியில்,
பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?
ஹ!

நந்தகுமாரா..

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,
ஆனால்...
கடவுள் கொன்று,
உணவை தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே........

No comments:

Post a Comment