Search This Blog

Pages

Wednesday, January 26, 2011

மீனம்மா Song Lyrics - ஆசை

Movie Title : ஆசை
Song Title : மீனம்மா
Singer's: அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன்
Lyricist: வைரமுத்து

மீனம்மா...
அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே
சின்னச்சின்ன மனங்களும் சின்னச்சின்ன குணங்களும்
மின்னல்போல வந்து வந்து போக
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட

(மீனம்மா)

ஒரு சின்னப் பூத்திரியில் ஒழி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை
காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு உன்னை எட்டிப்பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத்
தீண்டிட வா
ஜாதிமல்லிப்பூவே தங்கவேன்னிலாவே
ஆசைதீரவே மெதுவாய் மெதுவாய்த் தொடலாம்

(மீனம்மா )

அன்று காதல் சொல்லியதும் இரு கன்னம் கிள்ளியதும்
அடி இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது
அங்கு பட்டுச் சேலைகளும் நகை நாட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில்
நிற்கிறது
மாமன்காரன் நானே பாயைப்போடு மானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் வரலாம்

(மீனம்மா )

No comments:

Post a Comment