Search This Blog

Pages

Wednesday, January 26, 2011

மம்மி (Mummy)

- மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும்.

- இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.

திட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகள்

- பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன.

- மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் பதனிடலாக்கப் பட்டன.

- பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக அறிய முடிகிறது.

- எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், பதனிடலில் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே.

- சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை.மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள உன் முகுக்கியாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும்.

பிரிதானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி.
Mummy1.jpg

எத்தனையோ லட்சக்கணக்கான வருடங்கள் கழிந்தும் தன் பூதவுடலை விட்டுச்சென்றிருக்கும் யாரோ ஒருவர்
Mummy2.jpg

பதப்படுத்தும் வழிமுறைகள்

- பதப்படுத்துமுன் உடலின் உள்ளுறுப்புகள் அகற்றப்படுகின்றன.
Mummy3.jpg

- தேவையான தைலங்கள் தடவப்பட்டு பாண்டேஜ் துணியால் சுற்றப்படுகிறது
Mummy4.jpg

- மம்மி தயாரானதும் அதற்கான பெட்டியில் வைத்து எகிப்திய பூசாரியால் அந்த ஆத்மாவுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. செய்தவர்களுக்கு எந்த தொந்தரவும் நேராமலிருக்க.
Mummy5.jpg

- அடுத்து பதப்படுத்த உப்பு தூளில் மூடப்பட்டு காத்திருக்கும் உடல்கள்.
Mummy6.jpg

பிரமிடுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்கள்.
Mummy7.jpg

அழகழகான வளையல்கள், காதணிகள்!!
Mummy8.jpg

கிளியோபாட்ரா கண்களைச் சுற்றியணியும் கண்ணாடி போலில்லை?
Mummy9.jpg

அணிகலன்கள்தான். ஆனால் எங்கு அணிவது என்பதுதான் தெரியவில்லை.
Mummy10.jpg

No comments:

Post a Comment