Search This Blog

Pages

Monday, February 7, 2011

உங்களுக்குத் தெரியுமா?


* ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு ஒளியாண்டு எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186000 மைல்கள் செல்கிறது. அப்படியானால் ஓர் ஆண்டில் அது செல்லும் தொலைவு தோராயமாக 6 மில்லியன் மில்லியன் மைல்கள் அல்லது 10 மில்லியன் மில்லியன் கிலோ மீட்டர்கள்.

* பூமி உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் (பூமத்தியரேகை) வழியாக இதன் விட்டம் 12, 756 கிலோ மீட்டர் (7926 மைல்கள்). ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12, 713 கிலோ மீட்டர் (7899 மைல்கள்). பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன் (5882 மில்லியன் மில்லியன் மில்லியன் ஆங்கில டன்)

* வவ்வால்கள் புறவொலி அலை களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வலைகள் தடைகளின் மீது பட்டு, வவ்வால்களுக்கேத் திரும்பி வருகின்றன. இதன் மூலம் வழி அறியும் வவ்வால்கள் இருளிலும் பறக்கின்றன.

* பெப்ரவரி 29 அன்று பிறந்தவர்களுக்காக நான்காண்டுகளுக்கு ஒருமுறை நியூமெக்சிகோவிலுள்ள "அந்தோணி” எனுமிடத்தில் மிகப்பெரிய விழா பெப்ரவரி 26 முதல் 29 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

* கல்திட்டைகள் (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.

No comments:

Post a Comment