Search This Blog

Pages

Monday, February 7, 2011

சும்மா கிடைத்தால் ஓசி என்கிறோமே...ஏன்?


கேட்பிஷ் என்று ஒருவகை மீன் உள்ளது. ஆண் மீனின் வாயில் பெண் முட்டை இடுகிறது. ஒரு மாத காலம் அது வாயிலேயே வைத்துக் கொண்டிருக்கிறது. குஞ்சு வெளிப்பட்ட பிறகும் இரண்டு வாரம் வாயிலேயே இருக்கும். வாயில் 50 முட்டைகளுக்கு மேல் இருக்கும். எனவே இந்த ஆறு வார காலத்திற்கு அது எதுவுமே சாப்பிடுவதில்லை.


பப்பாளியிலிருந்து 100 வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. பப்பாளியின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பாபைன் எனும் மருந்து தோல் வியாதிகளையும் கண் நோய்களையும் குணப்படுத்துகிறதாம்.


பெட்ரோலில் நீந்த முடியாது. காரணம், ஒரு கன அடி பெட்ரோலின் எடை 6.3 பவுண்ட் இருக்கும். நீரின் எடையோ ஒரு கன அடிக்கு 8 பவுண்ட். நீரை விட பெட்ரோல் இலேசாக அதாவது அடர்த்தி குறைவாக இருப்பதால் அதில் நீந்த முடியாது.


நாம் பற்பசையை அளவோடு உபயோகிக்க வேண்டும். ஒரு வருடம் முழுவதும் 565 கிராம் பசையைத்தான் தேய்க்கலாம் என்று பல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் ஒரு மாதத்திற்கு 50 கிராம் பற்பசை போதுமானது.


ஒரு டன் மரத்தையும் ஒரு டன் இரும்பையும் தராசின் இரு தட்டுகளில் வைத்து எடை போட்டால் மரத்தின் எடை இரும்பின் எடையை விட சற்று கூடுதலாக இருக்கும். இதற்குக் காரணம் மரப் பொருள்களின் அளவுகளின் மேல் தாக்கும் காற்றின் அழுத்தமே.


இந்தியாவின் திட்ட நேரம் 85 டிகிரியில் அமைந்திருக்கும் அலகாபாத் நேரத்தையொட்டிக் கணக்கிடப்படுகிறது. கிரீன்வீச் நேரத்திற்கு 5.30 மணிகள் முன்னதாக இது கணக்கிடப்பட்டுள்ளது.


இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்த்து என்கிறோம். இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் பொகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது.


ஹம்மிங் சிட்டு எனப்படும் ஒருவகை பறவை இனத்தில் ஒரு சிட்டுக்கும் மற்றொரு சிட்டுக்கும் சண்டை வந்து விட்டால் பலமுடைய சிட்டு மற்ற சிட்டுவின் நாக்கைப் பிடித்து இழுத்துத் துண்டித்து விடுமாம். நாக்கை இழந்த சிட்டு அதன் பிறகு உணவு உட்கொள்ள முடியாமல் இறந்து விடுமாம்.


ஹாலந்திலிருக்கும் விவசாயிகள் டிசம்பர் மாதத்தில் கிணற்றின் மீது நின்று கொம்பு எனும் வாத்தியத்தை வைத்து ஊதுவார்களாம். இப்படிச் செய்தால் தாங்கள் வளர்க்கும் ஆசு, மாடு, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகள் நோய் வந்து சாகாது என்பது அவர்கள் நம்பிக்கை.


ஸ்பானிய மொழியில் மனைவியை எஸ்போஸா என்று குறிப்பிடுகிறார்கள். அந்த மொழியில் கைவிலங்கையும் எஸ்போஸா என்றுதான் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment