Search This Blog

Pages

Monday, February 7, 2011

ஊர்களது பெயர்கள் - அந்தக் காலத்தில் என்ன பெயர்?


ஆன்மீகம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல ஊர்களது பெயர்கள் காலப்போக்கில் மாறி இப்போது புதிய பெயர்களுடன் விளங்குகின்றன. இன்றைய ஊர்களில் சில அந்தக் காலத்தில் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டது என்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்...

சிதம்பரம் - திருச்சிற்றம்பலம்
சீர்காழி - ஸ்ரீ காளிபுரம்
தாராசுரம் - ராஜராஜேஸ்வரம்
திருத்தணி - செருத்தணி
தக்கோலம் - திருவூறல்
காஞ்சிபுரம் - கச்சிமாநகர்
சோளிங்கர் - சோழலிங்கபுரம்
உறையூர் - திருமுக்கீஸ்வரம்
செம்மங்குடி - செம்பொன்குடி
வயலூர் - பீலவாயிலூர்
திரிசூலம் - திருச்சுரம்
மழபாடி - மழவர்பாடி
லால்குடி - தவத்துறை
நாமக்கல் - ஆரைக்கல்
வரகனேரி - வரகுணன் ஏரி
நொச்சியம் - நொச்சி நியமம்
உத்தம்சேரி - உத்தமசீலி
பழவேற்காடு - புலிக்காடு
கயத்தாறு - கசத்தியாறு
சிருங்கேரி - சிருங்ககிரி
உடுப்பி - ருப்ய பீடம்
மந்த்ராலயம் - மஞ்சாலி
பெரம்பலூர் - பெரும்புலியூர்
வீராணம் - வீரநாராயணபுரம்
ஏற்காடு - ஏரிக்காடு
தர்மஸ்தலா - குருமர்
வாதாபி - பாதாமி
உஜ்ஜயினி - அவந்தி
திருநெல்வேலி - வேணுவனம்
பதுமனேரி - பத்மநாபன் ஏரி
கொத்தவாசல் - கொற்றவாசல்
சுசீந்திரம் - சுந்தரசோழ சதுர்வேதிமங்கலம்
அம்பாசமுத்திரம் - இளங்கோக்குடி
கண்டியப்பேரி - கன்னடியர் பேரேரி
அந்தநல்லூர் - அந்துவநல்லூர்
ஆழ்வார் திருநகரி - திருக்குருகூர்
மானாமதுரை - மானவீரன் மதுரை
திருமணஞ்சேரி - எதிர்கொள்பாடி
மகுடஞ்சாவடி - மாக்டொனால்ட் சாவடி
தில்லை ஸ்தானம் - திருநெய்த்தானம்
நாகப்பட்டினம் - திருநாகைக்காரோணம்
கருந்திட்டைக்குடி - சுங்கந் தவிர்த்த சோழநல்லூர்
கோட்டாறு - மும்முடிச்சோழ நல்லூர்

No comments:

Post a Comment