லிபியாவின் சிறையில் அடைத்து வைக்கப்ப்ட்டிருந்த 120 கைதிகள் சிறை கம்பிகளை உடைத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
லிபியா தலைநகர் திரிபோலியில் அல்-ஜுடைடா என்ற இடத்தில் மத்திய சிறை உள்ளது. இது லிபியாவில் உள்ள மிகப்பெரிய சிறை ஆகும்.
இங்கு பலதரப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் காலெத் அல்-ஷரீப் தெரிவித்துள்ளார். தப்பி ஓடியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்ரிக்காவில் இருந்து இங்கு வந்து சட்ட விரோதமாக குடியேறியதால் கைது செய்யப்பட்டவர்கள்.
அவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவுவதால் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிறையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியும், சர்வாதிகாரியுமான மும்மர் கடாபி சிர்தே நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிடிபட்டு அடித்து கொல்லப்பட்டார்.
அந்த முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கைதிகள் தப்பி உள்ளனர். எனவே அவர்கள் கடாபியின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிறையிலிருந்து தப்பி ஓடும் சம்பவம் லிபியாவில் இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment