நாட்டில் செயற்கை மழையினை உருவாக்க சீனாவின் உதவியை இலங்கை அரசாங்கம் கோருகின்றது என அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அம்பலாங்கொட, கொகல்ல கிராமிய சுகாதார நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எந்தவிதமான சவால்களையும் முறியடிப்பதற்கான தைரியம் அரசாங்கத்திடம் உள்ளது என அவர் தெரிவித்தார்.
வறட்சி என்பது எமது நாட்டு புதிய கலாசாரமல்ல. இந்த வறட்சியை கட்டுப்படுத்துவதற்கு பல தற்காலி நடவடிக்கைளை முன்னர் மேற்கொண்டிருந்தோம்.எனினும் தற்போது வறட்சிக்கு முகங்கொடுக்க தயாராகுதல் மாத்திரமின்றி இதன் மூலம் நன்மையடையவும் உள்ளோம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
செயற்கை மழையினை இலங்கையில் எவ்வாறு ஏற்படுத்தல் என்பது தொடர்பிலான தொழிநுட்பத்தை பெறுவது தொடர்பில் சீனாவுடன் பேச்சு நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment