அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததாகவும் குவைத்தில் பிறந்து பாகிஸ்தானில் வளர்ந்தவரான காலித் ஷேக் முகம்மது கைது செய்யப்பட்டார்.
தற்போது கியூபாவின் குவாண்டனாமோவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் 3வது நாளாக இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது காலித் ஷேக் முகம்மது தனது விவாதத்தை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்க ஜனாதிபதிகள் ஏராளமான அப்பாவிகளையும், சிறுவர்களையும், சிறுமிகளையும் படுகொலை செய்து வருகிறார்கள்.
மேலும் பலரை சொல்லில் வடிக்க முடியாத சித்ரவதைக்கு எல்லாம் ஆளாக்கி வருகிறார்கள். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஒருவர் கொல்லப்பட்டு கடலில் புதைக்கப்பட்டு விட்டார் (அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன்).
எல்லா ஆட்சியாளர்களும் தங்களுடைய நோக்கங்களை எல்லாம், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
உலக வர்த்தக மைய கட்டிட தாக்குதலில் 3,000 பேர் இறந்ததாக அமெரிக்க அரசு வருந்துகிறது. ஆனால் அவர்களால் நாங்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளோம். கடந்த 2002ஆம் ஆண்டில் அமெரிக்க பத்திரிகை நிருபர் டேனியலை இந்த புனிதமான கையால் தான் கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.
40 நிமிடங்கள் காலித் ஷேக் முகம்மதுக்காக ஒதுக்கப்பட்டது. அந்நேரத்தில் இவர் அரபு மொழியில் கூறியதை, மொழி பெயர்ப்பாளர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment