2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாக 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன, இக்காலப்பகுதியில் இலங்கையில் 0.57 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
சைபர் மீடியா ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனை நிறுவனமான பிரிமியர் IT எனும் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையை பொறுத்த மட்டில் இந்த காலப்பகுதியில் நொகியா (Nokia) கையடக்க தொலைபேசிகள் அதிகளவு விற்பனையாகின, கையடக்க தொலைபேசிகள் சந்தையில் 31.9% சந்தை வாய்ப்பை தன்னகத்தே கொண்டிருந்தது.
சம்சுங் (Samsung) கையடக்க தொலைபேசிகள் 17.4% உடன் இரண்டாமிடத்திலும், மைக்குரோமெகஸ் கையடக்க தொலைபேசிகள் 10.4% உடன் மூன்றாமிடத்திலும் காணப்பட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டில் சுமார் 22 கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் இலங்கைக்கு கையடக்க தொலைபேசிகளை ஏற்றுமதி செய்திருந்ததாகவும், ஸ்மார்ட் போன்களின் பாவனை மற்றும், அண்ட்ரொயிட் தொழில்நுட்பத்தில் அமைந்த கையடக்கதொலைபேசிகளின் பாவனை அதிகரித்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment