கல்முனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பெண்களிடம் சில ஆட்டோ சாரதிகள் தொலைபேசி இலக்கங்களைக் கேட்டு தொல்லைபடுத்துவதாக பெண்கள் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்தும் சாரதிகள், நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக கல்முனை பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளில் தனியாகவும் கூட்டாகவும் பயணிக்கும் இளம் பெண்களிடம் சில ஆட்டோ சாரதிகள் அவர்களது தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்துகின்றனர். அது மாத்திரமின்றி எப்படியோ தொலைபேசி இலக்கத்தினை அறிந்து கொள்ளும் சாரதிகள் அவர்களது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து அப் பெண்களிடம் தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் ஆசை வார்த்தைகளையும் கூறி தொல்லைபடுத்துவதாக சிலர் முறைப்பாடுகளையும் தெரிவித்துள்ளனர்.
எனவே, தனியாக பயணிக்கும் பெண்களிடம் தொலைபேசி இலக்கமோ அல்லது தொல்லையோ கொடுக்கின்ற நபர்கள் பற்றிய தகவல்களை அந்தந்த சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களிடமோ அல்லது பொலிஸாரிடமோ தெரிவிக்குமாறு சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கல்முனை பிரதேசத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொலிஸ் நிலையத்தினால் பல்வேறு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment