அமையவுள்ள காத்தான்குடி மாநகர சபையில் அல்லாஹ் நாடினால் பொறியிலாளர் அப்துர் றஹ்மான் மாநகர மேயராக இருப்பார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அபிவிருத்தியும் சவால்களும் என்ற தலைப்பிலான பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா; பதவிகளை வழங்குபவனும் பதவிகளை பிடுங்கி எடுப்பவனும் அல்லாஹ்தான். எனக்கு இந்த பதவி அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் கிடைத்துள்ளது.
இதே போன்று பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அமையவுள்ள காத்தான்குடி மாநகர சபையில் மேயராக இருப்பார் அல்லாஹ் நாடினால் அது நடந்து விடும்.
கடந்த மாகாண சபை தேர்தலில் நான் பொறியியலாளர் அப்துர் றஹ்மானை வேட்டபாளராக நிறுத்தி அவரை மாகாண சபை உறுப்பினராக ஆக்குவதற்கு நாடினேன் ஆனால் அல்லாஹ் அதை விரும்பவில்லை.
பொறியியலாளர் சிப்லி பாறூக்கைத்தான் அல்லாஹ் விருமபியிருந்தான். பொறியியலாளர் சிப்லி ஒரு படித்தவர் மாத்திரமல்ல அவர் ஒரு தக்வாதாரியும் இறைவனுக்கு பயந்து கடமையாற்றுபவர்.
பொறியியலாளர் சிப்லி இந்த பதவிக்கு வருவதற்கு விரும்பவே இல்லை அல்லாஹ் விரும்பினான் அதனால் அவர் மாகாண சபை உறப்பினராக வந்து;ளளார்.
அல்லாஹ் நாடாமல் எதுவும் உலகத்தில் நடைபெறாது. காத்தான்குடியை மாநகர சபையாகவும், புதிய காத்தான்குடியை பிரதேச சபையாகவும் அமைக்க நடவடிக்கைகள் எடுத்துவருகின்றோம்.
அதில் அவ்வாறு காத்தான்குடி மாநகர சபையாக வருமாக இருந்தால் அல்லாஹ் நாடினால் அதன் மேயராக பொறியியலாளர் அப்துர் றஹ்மான் வரக் கூடும். அல்லாஹ் நாடினால் அதை யாரும் தடுக்க முடியாது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் அடிக்கடி எங்களை விவாதத்திற்கு அழைக்கின்றனர்.
விவாதிப்பது ஒரு முஸ்லிமின் பன்பல்ல பெருமானார் (ஸல்) அவர்கள் விவாதிப்பதை வெறுத்துள்ளார்கள். அதனால் உங்களுக்கு ஏதாவது சந்தேகமென்றால் அல்லது ஏதாவது திட்டத்தினை முன் வைக்க வேண்டுமென்றால் நாம் பேசுவோம். 3மாதங்களுக்கு ஒரு தடைவ பேசுவோம். பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அதை விடுத்து வீணான விமர்சனங்களை பொய்யான கட்டுக்கதைகளை முன் வைக்க வேண்டாம்.
அபிவிருத்திகளை தடை செய்யதீர்கள் அபிவிருத்திக்கான ஆலோசனைகளை முன்வையுங்கள்.
மீராபாலிகா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள சுரங்கப்பாதை ஒரு போக்கு வெள்ளத்தினால் பாதகிக்ப்படும் என்று கிண்டல் செய்தீர்கள். அல்லாஹ்வுடைய கிருபையினால் கடந்த வெள்ளத்தில் ஒரு பாதிப்பும் அதற்கு ஏற்படவில்லை.
இலங்கையின் இரண்டாவது சுரங்கப்பாதையான குருநாகலிலுள்ள சுரங்கப்பாதை கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. ஆனால் அல்லாஹ்வுடைய கிருபையினால் காத்தான்குடி சுரங்கப்பாதைக்கு எந்த பாதிப்பும் எற்படவில்லை.
எதற்கு எடுத்தாலும் விமர்சனம் ஊடகங்களில் அறிக்கை விடுகின்றீர்கள். இதைவிட்டு விட்டு ஆலோசனை கூறுங்கள் நல்ல திட்டங்களை முன் வையுங்கள்.
நீங்கள் என்மீது சுமத்தும் அத்தனை அபாண்டங்களுக்கும் அல்லாஹ்விடம் நாளை மஹ்ஸர் மைதானத்தில் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
நானும் மரணிப்பவன் நீங்களும் மரணிப்பவர்கள் அந்த இடத்தில் நிச்சயம் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்
நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன், வறுமை நிலையில் கல்வி கற்றவன், காத்தான்குடி சுக்ரியாஸ் பிடவைக்கடையில் நின்று கொண்டு அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு கல்வி கற்றவன்.
அப்படியான என்னை அல்லாஹ் இன்று இந்த நிலையில் வைத்துள்ளான். நாளை இன்னுமொரு நிலைக்கு ஆக்கலாம் அது இறைவனின் நாட்டம் எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment